Home /News /lifestyle /

மார்பக முலைக்காம்புகளுக்கு அருகில் சின்ன சின்ன கொப்புளங்கள் இருந்தால் அது சாதாரணமா..? மருத்துவரின் விளக்கம்

மார்பக முலைக்காம்புகளுக்கு அருகில் சின்ன சின்ன கொப்புளங்கள் இருந்தால் அது சாதாரணமா..? மருத்துவரின் விளக்கம்

 மார்பக ஆரோக்கியம்

மார்பக ஆரோக்கியம்

பெண்களைப் பொறுத்தவரை, அவர்களின் மார்பகங்கள் வயதுக்கு ஏற்ப வளர கூடும். எனவே இந்த மாற்றங்கள் குறித்து எப்போதும் தெரிந்து வைத்திருப்பது மிக அவசியம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஒவ்வொருவரின் உடலும் தனித்துவமானது மற்றும் அழகானது. சில நேரங்களில் நாம் உடலைப் பற்றி மிகக் குறைவாகவே அறிந்திருக்க கூடும். குறிப்பாக பெண்களைப் பொறுத்தவரை, அவர்களின் மார்பகங்கள் வயதுக்கு ஏற்ப வளர கூடும். எனவே இந்த மாற்றங்கள் குறித்து எப்போதும் தெரிந்து வைத்திருப்பது மிக அவசியம். அந்த வகையில், பெண்களுக்கு தங்களது மார்பகங்களில் ஏற்பட கூடிய மாற்றங்களை அவ்வப்போது கவனித்து வர வேண்டும்.

உங்கள் மார்பக பகுதியில் ஏதேனும் கட்டிகள் அல்லது புடைப்பு போன்று இருந்தால் அதை அப்படியே விட கூடாது. அதிலும் குறிப்பாக முலைக்காம்புக்கு அருகில் சிறிய புடைப்புகள் அல்லது கட்டிகள் போல இருந்தால் அவை இயல்பானவை அல்ல. ஒருசில நேரங்களில் மட்டுமே இது போன்ற கொப்புளங்கள் இயல்பானவையாக இருக்கும். ஆனால், எல்லா நேரங்களிலும் அப்படி இருப்பதில்லை என்பதையும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

இது குறித்து டாக்டர் தனயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பெண்களின் முலைக்காம்பு பகுதிக்கு அருகில் கொப்புளங்கள் தோன்றுவதை விளக்கி ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வகை கொப்புளங்கள் டியூபர்கிள்ஸ் என்று அழைக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார். மேலும் இந்த புடைப்புகள் மார்பகத்திற்கு இயற்கையான மாய்ஸ்சரைசர்களாக செயல்பட்டு அவற்றை ஈரப்பதமாகவும், லூப்ரிகேட்டாகவும் வைத்திருக்க உதவும் என்று மருத்துவர் விளக்கியுள்ளார்.

ஒரு பெண் தாயான பிறகு மார்பகங்கள் பால் உற்பத்தி செய்வதால், இந்த டியூபர்கிள்களுக்கு ஒரு தனித்துவமான வாசனை உள்ளது. இது குழந்தைகளுக்கு உணவு எங்குள்ளது என்பதை அறிய உதவுகிறது என்பதையும் அவர் விளக்கி கூறினார்.



இதன் நன்மைகள்

மாண்ட்கோமரியின் ட்யூபர்கிள்ஸ் என்றும் அழைக்கப்படும் இந்த வகை சிறிய புடைப்புகள் பெண்களில் முலைக்காம்புகளைச் சுற்றி இருக்கும் எண்ணெய் உற்பத்தி செய்யும் சிறப்பு சுரப்பிகள் ஆகும். மேலும் இவை முலைக்காம்புகளை மென்மையாகவும் லூப்ரிகேட்டாகவும் வைத்திருக்க பெரிதும் வழி செய்கின்றன. இவை பிரசவத்திற்குப் பிறகு அதிக எண்ணெயை உற்பத்தி செய்கின்றன, இது கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது தொற்றுநோயைத் தடுக்கிறது.




முக்கியமாக இந்த சின்ன bumps குழந்தையை முலைக்காம்புகளை நோக்கி பால் குடிப்பதற்கு வழி செய்கிறது. கர்ப்ப காலத்தில் இவை அளவு அதிகரித்து பருக்கள் போல தோற்றமளிக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் அவற்றைத் தொட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இது பருக்கள் என்று நினைத்து அழுத்தி விட்டால், இது தொற்றுநோயை ஏற்படுத்த கூடும். அத்துடன் அதிக வலியையும் உங்களுக்கு கொடுத்து விடும். எனவே, இந்த வகை சிறிய புடைப்புகளை கண்டு பயப்பட வேண்டியதில்லை. ஆனால், வேறு சில வகை புடைப்புகளை பற்றி நாம் அவசியம் கவனம் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் தான்யா கூறுகிறார்.

நடுத்தர வயதினர் மற்றும் முதியோர்கள் எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்..? ஆய்வு சொல்லும் தகவல்

வேறு வகையான புடைப்புகள்

சில நேரங்களில் அசாதாரண கொப்புளங்கள் போன்று புடைப்புகள் உருவாகலாம். இது போன்று உங்களுக்கு இருந்தால், அவசியம் மருத்துவரை அணுக வேண்டும். மேலும், புடைப்புகளில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்பட ஆரம்பித்தால், நீங்கள் வீக்கத்தை அனுபவிக்க நேரிடும். இந்நிலையில் தோல் நோய் காரணமாக தொற்றுநோய்க்கான அறிகுறியாக இது உருவாகலாம். எனவே உங்கள் மார்பகத்தை சுற்றி சிவந்திருப்பதை நீங்கள் கண்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Breast Care, Pimple

அடுத்த செய்தி