எனர்ஜி ட்ரிங்க் குடிப்பது உடலுக்கு நல்லதா..?

எனர்ஜி ட்ரிங்க் குடிப்பதால் இரத்த அழுத்தம், சீரற்ற இதயத் துடிப்பு போன்ற பிரச்னைகள் வரும்

news18
Updated: June 1, 2019, 5:15 PM IST
எனர்ஜி ட்ரிங்க் குடிப்பது உடலுக்கு நல்லதா..?
எனர்ஜி ட்ரிங்க் குடிப்பது உடலுக்கு நல்லதா..?
news18
Updated: June 1, 2019, 5:15 PM IST
கார்டியன் பத்திரிக்கை கடந்த 2014 ஆம் ஆண்டு எனர்ஜி ட்ரிங்க் குடிப்பதால் வாழ்க்கை முறையில் பல ஆபத்துகள் வரும் என ஆராய்ந்து அதை ஏற்றுக்கொள்ளும்படி உலக சுகாதார அமைச்சகத்திற்கு அனுப்பியது. தற்போது அந்த செய்தி மீண்டு உருவெடுத்துள்ளது.

ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் வெளியிட்ட ஆய்வில் அதிகமான எனர்ஜி ட்ரிங்க் குடிப்பதால் இரத்த அழுத்தம், சீரற்ற இதயத் துடிப்பு போன்ற பிரச்னைகள் வரும் எனக் கண்டறிந்து வெளியிட்டுள்ளது. எத்தனை ஆராய்ச்சிகள் வந்தாலும் இன்னும் இந்த எனர்ஜி ட்ரிங்-களின் சந்தை கொடிகட்டிப் பறக்கிறது.

இந்த எனர்ஜி ட்ரிங்க்-களைக் குடிப்பதால் இரத்த அழுத்தம், இதயப் பிரச்னை மட்டுமன்றி நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அவை என்னவென்று பார்க்கலாம்.
நீரிழிவு நோய் : அதிகமான கஃபைன் மற்றும் கார்போஹைட்ரேட் குடிப்பதால் இன்சுலின் அளவைக் குறைக்கும். இதன் விளைவாக நீரிழிவு நோயின் வீரியம் அதிகரிக்கும்.

கருக்கலைதல், குழந்தை எடையின்மை : இது குறித்துப் பல ஆராய்ச்சிகள் உள்ளன. விலங்குகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அதிகமான கஃபைன் பருகக் கொடுத்ததில் கரு ஊனம், கருப்பை வலுவிழந்து கருக்கலைப்பு, குட்டியின் வளர்ச்சிக் குறைவு, குறைப் பிரசவம் போன்ற பிரச்னைகளை சந்தித்துள்ளனர். இருப்பினும் மனிதனுக்கு கஃபைனின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும், மனிதனுக்கு அது இன்னும் எந்த அளவு பாதிப்பை உண்டாக்கும் என்பன போன்ற விளக்கங்கள் அதில் இல்லை.

Loading...

சர்க்கரை : அதிக அளவிலான கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையின் அளவு எனர்ஜி ட்ரிங்கில் அதிகமாக இருப்பதால் அவை இரத்தத்தில் கலக்க வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமன்றி பற்களையும் சேதப்படுத்தும். உடல் எடையும் அதிகரிக்கும்.

நீர்ச் சத்துக் குறைபாடு : அதிகமான கஃபைன் மற்றும் சர்க்கரை எளிதில் உடலில் உள்ள நீர்ச் சத்தைக் குறைத்துவிடும். அவ்வாறு எனஜ்ரி ட்ரிங் குடிப்பதானால் அதன் பிறகு உங்கள் உடலின் நீர்ச் சத்தை அதிகரிக்க ஏதாவது பருகுங்கள் அல்லது உண்ணுங்கள்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...