கடந்த சில தசாப்தங்களில், டைப் 2 டயபெட்டீஸ் (T2DM) ஆனது ஒரு நாள்பட்ட நோயாகவும், உடல்நல குறைபாடாகவும் மற்றும் இறப்புக்கு வழிவகுக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. சில சமயங்களில், மருந்துகளால் மட்டுமே கட்டுப்படுத்தக்கூடிய ஒரு நோயாக கருதப்படும் நீரிழிவு நோய்க்கு சரியான முறையில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
நீரிழிவு நோயானது சிறுநீரக பாதிப்பிற்கும் வழிவகுக்கலாம். சிறுநீரக செயலிழப்பு அல்லது சிறுநீரக சிதைவு என்பது ஒரு பாதிப்பு ஆகும், இது குறுகிய காலத்தில் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ரைசிங் காஷ்மீர் வழியாக வெளியான ஒரு அறிக்கையின்படி, நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீரக நோய்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது மற்றும் , இந்த பாதிப்பு இந்தியர்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தவிர உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயும் கூட கைகோர்த்து கொள்கின்றன. பெரும்பாலான நீரிழிவு நோயாளிகளிடம் காணப்படும் உயர் இரத்த அழுத்தமானது அவர்களுக்கு சிறுநீரகம் சார்ந்த நோய்க்கான கூடுதல் ஆபத்தை சேர்க்கிறது. உயர் இரத்த அழுத்தமானது ஒருவரின் சிறுநீரகத்தின் சரியான செயல்பாட்டை படிப்படியாக தடுக்கிறது மற்றும் சிறுநீரகத்தை சேதப்படுத்துகிறது. இந்த சிக்கலை சரியான நேரத்தில் கண்டறிந்து அதை கவனத்தில் கொள்ளாவிட்டால் அது சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
நீரிழிவு மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகள் எவ்வாறு தொடர்புடையது என்பதை பற்றிய கூடுதல் தெளிவை பெற மீரா ரோட்டில் உள்ள வொக்கார்ட் மருத்துவமனையின் ஆலோசகர் ஆன டாக்டர் ஜினேந்திர ஜெயின் அவர்களை அணுகினோம். அது சார்ந்த விளக்கத்தின் போது, “டயபெட்டீஸ் நெஃப்ரோபதி (சிறுநீரக நோய்) ஆனது நீரிழிவு நோயால் ஏற்படுகிறது. இந்த சிறுநீரக பாதிப்பானது படிப்படியாக வருடக்கணக்கில் நிகழலாம். அதிக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும், இது இரத்த நாளங்களை சேதப்படுத்துவதன் மூலமும் சிறுநீரக செயலிழப்பையும் (இதுவொரு சிறுநீரக நோயின் இறுதி நிலை ஆகும்) ஏற்படுத்தலாம்.
WHO எச்சரிக்கை..! ஓமிக்ரான் தொற்றில் இருந்து துணி மாஸ்க்குகள் உங்களை பாதுகாக்காது
இதன் விளைவாக சிறுநீரகங்களால் இரத்தத்திலிருந்து கழிவுப்பொருட்களை வடிகட்ட முடியாது என்பதால், குறிப்பிட்ட நபர் டயாலிசிஸ் செய்ய வேண்டியிருக்கும். பொதுவாகவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடிய விரைவில் அல்லது சற்றே தாமதமாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும், அது சிறுநீரகத்தை மேலும் சேதப்படுத்தும். கண்காணிக்கப்படாத உயர் இரத்த அழுத்தமானது சிறுநீரகத்திற்கு அருகில் உள்ள தமனிகளை (arteries) சுருங்கச் செய்து, வலுவிழக்கச் செய்யும் அல்லது அதை கடினமாக்கும். பின்னர், சேதமடைந்த தமனிகள் சிறுநீரக திசுக்களுக்கு இரத்தத்தை வழங்கும் வேலையை செய்யாது." என்று கூறினார்.
டாக்டர் ஜெயின், நீரிழிவு நோயானது உடலில் உள்ள நரம்புகளையும் சேதப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார். அது சார்ந்த விளக்கத்தின் போது, நீரிழிவு நோயினால் உடலில் உள்ள நரம்புகளும் பாதிக்கப்படும். இதனால், ஒருவர் சிறுநீர்ப்பையானது சரியாக காலி ஆகாது. முழுமையாகி உள்ள சிறுநீர்ப்பையின் காரணமாக ஏற்படும் அழுத்தமானது, சிறுநீரகங்களை சேதப்படுத்தலாம், காயப்படுத்தலாம். இதன் விளைவாக எடை அதிகரிப்பு, கணுக்கால் வீக்கமும் ஏற்படலாம், சிறுநீர் வழியாக அல்புமின் (albumin) வெளியேற்றம் அதிகமாக இருப்பதை வைத்து நீரிழிவு நோயாளிகளின் சிறுநீரக நோயின் அறிகுறிகளில் ஒன்றாகும். சிறுநீரகங்களின் மோசமான செயல்பாடு ஒருவரின் வாழ்க்கைத் தரத்தையே பாதிக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
எடை இழப்பை கண்கூடாக காண இந்த 5 உணவுப் பழக்கங்களை தவறாமல் கடைபிடியுங்கள்...
அதுசார்ந்த அறிகுறிகளை நீங்கள் அடையாளம் காண்பது எப்படி?
இதுபற்றின் டாக்டர் ஜெயின் கூறுகையில், “உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், மருத்துவர் பரிந்துரைக்கும் எளிய இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகளின் வழியாக உங்கள் சிறுநீரகங்களை அவ்வப்போது பரிசோதனை செய்யவும். தவிர, நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவையும், இரத்த அழுத்தத்தையும் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலமும் தங்களது சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்."
சிறுநீரக நோய்களை தவிர்ப்பது எப்படி?
"ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்யுங்கள், சரியான நேரத்தில் மருத்துவரால் அளிக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள், ப்ரெஷ் ஆன பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்த சோடியம் உணவுகளை உண்ணுங்கள்" என்று டாக்டர் ஜெயின் பரிந்துரைக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Diabetes, Kidney Disease