பார்ப்பதற்கு அளவில் சிறியதாக உள்ள சியா விதைகளில் நம் உடலுக்கும், மனதிற்கும் பலன் தரக் கூடிய அம்சங்கள் நிரம்பியுள்ளன. சியா விதைகளில் சுமார் 92 சதவீதம் அளவுக்கு நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இதனால், மாவுச்சத்து குறைவாக இருக்கிறது. இந்த நார்ச்சத்து என்பது கரையும் தன்மை கொண்டது.
நம் குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவாக பயன்படுகிறது. இதய நோய்கான அபாயத்தை குறைப்பது, எலும்புகளை பலப்படுத்துவது,ஆன்டி-ஆக்ஸிடண்டுகளை அதிகரிப்பது, உடல் எடையை குறைப்பது போன்ற பல விஷயங்களுக்கு சியா விதைகள் பயன்படுகின்றன.
சியா விதைகள் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்தவை மற்றும் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்ககூடியவை. வரலாற்றில் கூட ஆஸ்டெக் மற்றும் மாயன் நாகரிகங்கள் அழகுசாதனப் பொருட்கள், மத சடங்குகள் மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக மக்கள் சியா விதைகளை தங்கள் உணவில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பல வகையான உணவு பொருட்களிலும் சியா விதைகள் சேர்க்கப்படுகின்றன. அப்படி சியா விதைகளை உணவில் சேர்ப்பது நீரழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் என ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
சியா விதைகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுமா?
சியா விதைகளை உட்கொள்வது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும். ஹெல்த்லைனின் கூற்றுப்படி, சியா விதைகள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும் என்று விலங்குகள் மீதான ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இது உணவுக்குப் பிறகு இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுவதாக மனிதர்கள் மீதான பல ஆராய்ச்சிகளும் நம்பிக்கைக்குரிய முடிவுகளை காட்டியுள்ளன.
2010 மற்றும் 2013ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில், சியா விதைகள் இல்லாமல் ரொட்டி சாப்பிடுவதை விட, சியா விதைகளுடன் ரொட்டி சாப்பிடுவது, ஆரோக்கியமான நபர்களின் உணவுக்கு பிந்தைய சர்க்கரை அளவை குறைக்க உதவுவது கண்டறியப்பட்டுள்ளது.
சியா விதைகளின் பிற நன்மைகள்:
சியா விதைகளில் ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருப்பதையும், உங்கள் எலும்புகள் வலுவாக இருப்பதையும், உங்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதையும் உறுதி செய்கிறது. உங்கள் உணவில் சியா விதைகளைச் சேர்ப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய பிற நன்மைகள் இதோ...
இந்த 3 இலை சர்க்கரை நோயை கட்டுப்படுத்துமா..? எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும்..?
1. உடல் எடையை குறைக்க உதவும்:
ஹெல்த்லைன் கணிப்பு படி, 28 கிராம் சியா விதைகளில் கிட்டத்தட்ட 10 கிராம் நார்ச்சத்து உள்ளது. அதாவது அவை உடல் எடை அளவில் 35% நார்ச்சத்து ஆகும். பல ஆய்வுகளின்படி, நார்ச்சத்து சாப்பிடுவது அதிக எடை மற்றும் உடல் பருமனை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கண்டறியப்பட்டுள்ளது. சியா விதைகளில் உள்ள புரதம் பசியின்மை மற்றும் உணவு உட்கொள்ளலைக் குறைக்கவும் உதவுகிறது.
2. இதய நோய் அபாயத்தை குறைக்கும்:
சியா விதைகளை உட்கொள்ளும் போது கிடைக்கும், அதிக நார்ச்சத்து மற்றும் ஒமேகா -3 உள்ளடக்கம் காரணமாக இதய நோய் அபாயத்தைக் குறைக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
3. எலும்புகளை உறுதியாக்கும்:
சியா விதைகளில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஒரு அவுன்ஸ் சியா விதைகளில் 11 கிராம் நார்ச்சத்து, 4 கிராம் புரதம், 5 கிராம் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஆகியவை நிரம்பியுள்ளது. இது தவிர 18 சதவீதம் கால்சியம், 30 சதவீதம் மெக்னீசியம், 27 சதவீதம் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. வெறும் 137 கலோரிகள் மட்டுமே உண்டு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.