முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உடல் தோரணையை சீராக்கி ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ’அர்த்த சந்திராசனம்’ எப்படி செய்ய வேண்டும்..?

உடல் தோரணையை சீராக்கி ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ’அர்த்த சந்திராசனம்’ எப்படி செய்ய வேண்டும்..?

அர்த்த சந்திராசனம்

அர்த்த சந்திராசனம்

அர்த்த சந்திராசனத்தை மிகச் சரியான முறையில் நாம் தினசரி பயிற்சி செய்து வந்தால் உடல் உறுப்புகளில் உள்ள நச்சுத்தன்மைகளை வெளியேற்ற உதவுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சூரியன் என்றாலே அதன் உஷ்ணமும், ஆக்ரோஷமும் அதிக சக்தியும் தான் நம் நினைவுக்கு வரும். இதுவே சந்திரனை எடுத்துக் கொண்டால் அதற்கு முற்றிலும் எதிர்ப்பதமாக மிகவும் குளுமையான, அமைதியான ஒரு தன்மையை கொண்டிருக்கும். யோகசனத்தில் அர்த்த சந்திராசனம் என்று ஒரு ஆசனம் உண்டு. இது உடல் தோரணையை சீராக்கி மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. மேலும் இந்த ஆசனத்தை செய்பவர்கள் மனதளவில் மட்டுமல்லாமல் உடல் அளவிலும் பல்வேறு வித நன்மைகளை பெறுகின்றனர்.

அர்த்த சந்திராசனம் செய்யும் முறை:

எப்படி நிலவானது படிப்படியாக தன்னுடைய முழு நிலவு தோற்றத்தை அடையுமோ, அதுபோல இந்த ஆசனத்தை 100% சிறப்பாக செய்வதற்கு முன் சில ஆசனங்களை நம் படிப்படியாக செய்து பயிற்சி செய்து வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களது கவனம் அதிகரிப்பதோடு மனதளவில் மிக அமைதியாக உணர்வீர்கள். முக்கியமாக இந்த ஆசனத்தை செய்யும் போது அதிக அழுத்தம் கொடுத்தும் அவசரமாகவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

உடலை மிகச் சரியான சமநிலையை வைப்பதற்கு மன அமைதியாக இருப்பது மிகவும் முக்கியம். இல்லையெனில் உங்களுக்கு காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இந்த ஆசனத்தை செய்வதற்கு முன்பு முதலில் வார்ம் அப் செய்து கொள்வது நல்லது. இதைத் தவிர மூச்சை உள்ள இழுத்து வெளியேற்றி மூச்சுப் பயிற்சி செய்து நுரையீரல்களை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும். நம்முடைய தோல்பட்டைகள் முதுகுத்தண்டுகள் இடுப்பு ஆகியவை இந்த ஆசனத்தில் முக்கிய பங்காற்றும்.

உங்கள் கால்களை நன்றாக அகலமாக வைத்து நிற்க வேண்டும். பின்பு திரிகோணாசன வடிவத்தில் வளைந்து மூச்சை மெதுவாக உள்ளிழுத்து ஒரு காலை மேலே தூக்கி ஒரு காலில் உடலை சமநிலையில் வைக்க வேண்டும். அதன் பின்பு ஒரு கை மற்றும் ஒரு காலில் உடலை சமநிலையில் இருக்கும் வடிவத்தில் ஆசனம் செய்ய வேண்டும். இவ்வாறு உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் செய்ய வேண்டும்.

இதை அப்படியே மாற்றி உடலில் மற்றொரு காலையும் மற்றொரு கையையும் பயன்படுத்தி இந்த ஆசனத்தை முயற்சி செய்ய வேண்டும். முடிந்த அளவு கை மற்றும் கால்களுக்கு இடையே உள்ள ஒருங்கிணைப்பை கவனித்து முயற்சி செய்ய வேண்டும். இவற்றை மிக சரியான முறையில் கவனத்துடன் பயிற்சி செய்து வர வேண்டும்.

அர்த்த சந்திராசனத்தின் பயன்கள்:

அர்த்த சந்திராசனத்தை பயிற்சி செய்து வருவதன் மூலம் நமது தசையின் வலிமைகள் அதிகரிக்கின்றன. உடலின் இரு பாகங்களையும் மாற்றி மாற்றி நாம் இந்த ஆசனத்தை மேற்கொள்வதால் உடல் வலுப்பெறுகிறது. இதைத்தவிர உடலின் சமநிலை அதிகரிப்பதோடு மனமும் அமைதியாக இருக்க உதவுகிறது.

அர்த்த சந்திராசனத்தை தொடர்ந்து பயிற்சி செய்து வருவதன் மூலம் கால்கள் வலுப்பெறுகின்றன. உடலை நன்றாக நீட்டி இந்த பயிற்சி நாம் செய்ய வேண்டியுள்ளது. இதன் காரணமாக சுவாசம் நன்றாக நடைபெறுவதுடன் உடலில் உள்ளுறுப்புக்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

Also Read : நீரிழிவு நோயை எதிர்த்துப் போராட உதவும் யோகா ஆசனங்கள்.! 

அர்த்த சந்திராசனத்தை மிகச் சரியான முறையில் நாம் தினசரி பயிற்சி செய்து வந்தால் உடல் உறுப்புகளில் உள்ள நச்சுத்தன்மைகளை வெளியேற்ற உதவுகிறது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரித்து உடல் உறுப்புக்கள் சிறப்பாக இயங்க உதவுகிறது. மேலும் செல்களின் உற்பத்தியும் அதிகரிக்கிறது.

First published:

Tags: Yoga, Yoga Health Benefits