Home /News /lifestyle /

குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஆன்டிபயாட்டிக்ஸ் ஆஸ்துமா, ஒவ்வாமை அபாயத்தை அதிகரிக்கும்.. ஆய்வு தரும் அதிர்ச்சி..

குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஆன்டிபயாட்டிக்ஸ் ஆஸ்துமா, ஒவ்வாமை அபாயத்தை அதிகரிக்கும்.. ஆய்வு தரும் அதிர்ச்சி..

கோப்புப்படம்

கோப்புப்படம்

இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் கொடுப்பது ஆஸ்துமா, அரிக்கும் தோலழற்சி, காய்ச்சல், உணவு ஒவ்வாமை, எடை மற்றும் உடல் பருமன் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் குழந்தை பருவத்தின் பிற்பகுதியில் ஹைபராக்டிவிட்டி கோளாறு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
குழந்தைகளுக்கு தற்காலிக நோய்களை விரைவாக குணப்படுத்த கொடுக்கப்படும் ஆண்டிபயோடிக்ஸ் (antibiotics) பின்னர் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் கொடுப்பது ஆஸ்துமா, அரிக்கும் தோலழற்சி, காய்ச்சல், உணவு ஒவ்வாமை, எடை மற்றும் உடல் பருமன் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் குழந்தை பருவத்தின் பிற்பகுதியில் ஹைபராக்டிவிட்டி கோளாறு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் குறைவான ஒரு டோஸ் கூட மேற்கண்ட இந்த காரணிகளுக்கு பங்களிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் கண்காணிப்புகள் மற்றும் முடிவுகள் மாயோ கிளினிக் ப்ரோசீடிங்ஸ் இதழில் வெளியிடப்பட்டன. அதில், குழந்தையின் பாலினம், அவர்களுக்கு கொடுக்கப்படும் டோஸ் எண்ணிக்கை, குழந்தையின் வயது, மருந்து வகை ஆகியவை வெவ்வேறு விளைவுகளுக்குக் காரணமாக அமைவதாக ஆய்வு ஆசிரியர்கள் கூறியுள்ளனர். 

இது குறித்து ஆய்வு எழுத்தாளர் நாதன் லெப்ராசூர் கூறியதாவது, இதுபோன்ற நிலைமைகளுக்கு ஒரு தொடர்பை இந்த ஆய்வு காட்டுகிறது என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். தவிர மருந்துகள் தான் காரணமாக இருக்கிறது என்று சொல்லவில்லை எனக் கூறியுள்ளார். இந்த கண்டுபிடிப்புகள் சிறு குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கும் போது நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் அளவும் மற்றும் நேரமும் எவ்வாறு பாதுகாப்பான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை பகுப்பாய்வு மற்றும் ஆய்வு செய்வதற்கும், இலக்கு வைப்பதற்கும் புதிய வழிகளை மட்டுமே வழங்குகின்றன என கூறியுள்ளார்.  இவர் மாயோ கிளினிக்கின் முதுமை மையத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார்.

இந்த ஆய்வுக்காக ரோசெஸ்டர் தொற்றுநோயியல் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த சுமார் 14,500 குழந்தைகளின் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டது. தன்னார்வலர்களிடமிருந்து பெறப்பட்ட மருத்துவத் தரவை உள்ளடக்கிய ஒரு நீண்ட கால ஆய்வு இதுவாகும். இந்த குழந்தைகளில் சுமார் 70% பேர் கைகுழந்தைகளாக இருந்த போது குறைந்தது ஒன்று அல்லது பல நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பெற்றிருப்பதை உறுதிப்படுத்தினர். 

இதையடுத்து லெப்ராசூரின் கூற்றுப்படி, எந்தவொரு நுண்ணுயிர் எதிர்ப்பிகளும் எடுத்துக்கொள்ளாத குழந்தைகளுடன் ஒப்பிடும் போது, ஒன்று அல்லது இரண்டு மருந்துகளைப் பெற்ற சிறுமிகளுக்கு ஆஸ்துமா நோய் வருவதற்கான அதிக ஆபத்து உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல மூன்று முதல் நான்கு மருந்துகளை எடுத்துக்கொண்ட குழந்தைகளுக்கு ஆஸ்துமா, அடோபிக் டெர்மடிடிஸ் மற்றும் இரு பாலினத்தவருக்கும் அதிக எடை உண்டாகும் ஆபத்துகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதுதவிர ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட அளவுகளில் மருந்துகளை எடுத்துக்கொண்ட குழந்தைகளுக்கு மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து பாதிப்புகளுடன் ADHD மற்றும் ரைனிடிஸ் நோய் ஏற்பட அதிக ஆபத்து உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பொதுவான ஆண்டிபயாடிக் பென்சிலின் போன்ற மருந்துகளும் மேற்கணட எல்லா பாதிப்புகளுடனும் தொடர்புடையது என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மற்றொரு பொதுவான ஆண்டிபயாடிக்கான செஃபாலோஸ்போரின், மன இறுக்கம் மற்றும் உணவு ஒவ்வாமை போன்ற ஆபத்தான நிலைமைகளுடன் தொடர்புடையது என தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு மேற்கண்ட ஆபத்துகளுக்கும், ஆன்டிபோய்ட்டிக் மருந்துகளுக்கும் தொடர்பு இருக்கலாமே தவிர காரணமாக அமையாது  என்று கருதப்பட்டாலும், அதிக தீவிர ஆபத்துக்கு சில சாத்தியமான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

Also read... உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்படும் குழந்தைகள் கிண்டலுக்கு உள்ளாகின்றனர்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..சி.என்.என் கருத்துப்படி, நுண்ணுயிர் கொலையாளிகளால் குடல் பாக்டீரியாக்கள் பாதிக்கப்படுகிறது. இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று லெப்ராசூரின் குழு கருதுகின்றனர். சரியான நோயெதிர்ப்பு மண்டலத்தை வளர்ப்பதிலும், உடல் மற்றும் நரம்பியல் வளர்ச்சிகளுக்கும் குடல் பாக்டீரியா அடிப்படை தேவை இருக்கின்றன.

ஆனால் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பாக்டீரியாவை கொல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அவற்றால் குடலின் இயற்கையான, நல்ல பாக்டீரியாக்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாது. அதனால் குடலில் எந்தவொரு ஊடுருவல்களும் நோய்களை ஏற்படுத்தும். குடலில் உள்ள பாக்டீரியாக்கள் சரியான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும் மற்றும் செரிமானத்திற்கும் உதவுகின்றன. 

குறிப்பாக நோயெதிர்ப்பு வழிமுறைகளை உருவாக்கத் தொடங்கும் குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகம் இருக்கும். கீமோதெரபி மற்றும் மூளை வேதியியலுக்கான உடலின் பதிலுடன் குடல் நுண்ணுயிர் தொடர்புடையது ஆகும். அவை நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் கொல்லப்படலாம் மற்றும் பாதிக்கப்படலாம். இருப்பினும் இந்த ஆய்வில்  கவனிக்கப்பட்டவை உறுதியானவையா என்பதை நிறுவுவதற்கான மேலதிக ஆய்வு நடத்தப்பட வேண்டும். அத்துடன் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் அளவை குழந்தைகளுக்கு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Asthma, Baby Care

அடுத்த செய்தி