முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மன ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் அதிக கோபம் : கட்டுப்படுத்தும் வழிகள் இதோ...

மன ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் அதிக கோபம் : கட்டுப்படுத்தும் வழிகள் இதோ...

கோபம்

கோபம்

Tips to Control Anger: கோபம் கொண்டவர்கள் பெரும்பாலும் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். கோபம் அதிகம் உள்ளவர்கள் அடிக்கடி நோய்களுக்கு ஆளாகிறார்கள் என்பது இதுவரை பல ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

Tips to Control Anger: பலர் சிறிய விஷயங்களுக்கு கூட கோபப்படுவார்கள். கோபம் என்பது ஒருவரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வழியாகும். ஆனால் அது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். குழந்தைகள் முதல் முதியவர்களுக்கு வரை, இது ஒரு பிரச்சனையாக மாறும். கோபம் மன ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதால், கோபம் கொண்டவர்கள் பெரும்பாலும் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். கோபம் அதிகம் உள்ளவர்கள் அடிக்கடி நோய்களுக்கு ஆளாகிறார்கள் என்பது இதுவரை பல ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

அதிக கோபம் வந்தால் உடனே இந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இது எப்படி ஆரோக்கியத்திற்கு எதிரியாக செயல்படுகிறது. எந்தெந்த வழிகளில் கட்டுப்படுத்தலாம் என்பதை காணலாம்

அதிகப்படியான கோபத்தால் வரும் பாதிப்புகள் :

வெப் எம்டியின் அறிக்கையின்படி, ஒருவர் அதிகமாக கோபப்படுவதை வழக்கமாக்கினால், பல வகையான நோய்கள் வரலாம். குறிப்பாக மன ஆரோக்கியத்தில் கோபம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, கவலை மற்றும் மனச்சோர்வு ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது.

சாப்பிடும் போது இடையில் தண்ணீர் குடிப்பது தவறு : ஏன் தெரியுமா..?

ஒருவரின் மனநலம் மோசமடையும் போது, ​​ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மோசமடைகிறது. அதன் விளைவு நீண்ட காலமாக பிரதிபளிக்கிறது. அதோடு கோபம் உடல் ஆரோக்கியத்தையும் எதிர்மறையாக பாதிக்கிறது. கோபம் இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி மற்றும் தோல் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. கோபம் வந்த சிறிது நேரத்தில் தலைவலி, ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும்.

கோபத்தை கட்டுப்படுத்த இந்த குறிப்புகளை பின்பற்றவும் :

நீங்கள் கோபப்படும்போதெல்லாம், நேர்மறையாக இருக்க முயற்சி செய்யுங்கள். உங்களை கோபப்படுத்திய காரணத்திலிருந்து உங்கள் கவனத்தை மாற்றுங்கள். இப்படிச் செய்தால் சிறிது நேரத்தில் கோபம் குறையலாம்.
நீங்கள் கோபமாக இருக்கும்போது உங்கள் கோபத்தை வெளிப்படுத்த வேறு வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவும். பல சமயங்களில் கோபத்தில் நம் குடும்ப உறுப்பினர்களிடம் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். அது பின்னர் பலருடைய மனதை காயப்படுத்துகிறது. எனவே கோபத்தின் போது வார்த்தைகளை மட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.
கோபத்திற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்கவும், உங்களை மற்றவரின் இடத்தில் வைத்து சிந்திக்கவும். இதன் மூலம் நீங்கள் சரியான காரணத்தை புரிந்துகொள்வீர்கள், உங்கள் கோபம் தணியும்.
கோபத்தின் போது, ​​மற்றவர்களின் முழு விஷயத்தையும் நன்றாகக் கேட்க முயற்சி செய்யுங்கள். முழுமையற்ற பேச்சைக் கேட்டு ஒருவரை மதிப்பிடுவது சரியல்ல. எனவே அனைத்து அம்சங்களையும் அறிந்த பின்னரே எதிர்வினையாற்றவும்.
நகைச்சுவை விஷயங்களில் சிந்தனையை மாற்றுங்கள். உங்கள் மனநிலையை மாற்ற, நகைச்சுவை நிறைந்த விஷயங்களில் ஈடுபடுங்கள். உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். இது கோபத்தை கட்டுப்படுத்த சிறந்த வழி.
First published:

Tags: Anger, Anxiety, Depression, Stress