Home /News /lifestyle /

55% இந்தியர்கள் வாரத்தில் 3 நாட்கள் தூங்குவதில் சிரமப்படுகிறார்கள் - ஆய்வில் தகவல்

55% இந்தியர்கள் வாரத்தில் 3 நாட்கள் தூங்குவதில் சிரமப்படுகிறார்கள் - ஆய்வில் தகவல்

தூக்கமின்மை

தூக்கமின்மை

இரவு தூங்கி காலை எழும் போது சுமார் 21% பேர் மட்டுமே புத்துணர்ச்சியுடன் இருப்பது தெரிய வந்துள்ளது.

படுத்தவுடன் தூங்கும் பழக்கம் உடையவர்கள் வரம் வாங்கி வந்தவர்கள் என்ற வார்த்தை என்று நாம் பலரும் பரவலாகப் பேசுகிறோம். மெஷின் போல நாள் முழுவதும் ஓடி கொண்டே இருக்கும் நமக்கு ஏற்படும் அசதிக்கு, படுத்தவுடன் தூக்கம் வர வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பு.

ஆனால் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதிலேயே பல இரவுகள் கழிந்து விடுகின்றன. இதனிடையே பிரபல மருத்துவ சாதன நிறுவனமான ResMed, அதன் ResMed Asia மற்றும் Latin America ஸ்லீப் ஹெல்த் சர்வேயின் முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த முடிவு ஒட்டுமொத்த தூக்க பழக்கவழக்கங்கள் மற்றும் பிராந்தியம் முழுவதும் பதிலளித்தவர்களின் நல்வாழ்வில் தூக்க பழக்கங்களின் தாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

ResMed-ஆல் செய்யப்பட்ட இந்த ஆய்வு Atomik Research-ஆல் ஆன்லைனில் நடத்தப்பட்டது. இதில் பதிலளித்த 17,040 பேரில் பெரும்பாலானவர்கள் போதிய தூக்கமின்மை அல்லது மோசமான தூக்க தரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு தூங்கி காலை எழும் போது சுமார் 21% பேர் மட்டுமே புத்துணர்ச்சியுடன் இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்தியா, பிரேசில், சீனா, ஜப்பான், கொரியா மற்றும் மெக்சிகோவில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து ஆய்வில் பங்கேற்ற சும்மர் 81% பேர் மோசமான தூக்கப் பழக்கம் ஒருவரின் வாழ்க்கைத் தரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், போதுமான தூக்கம் ஒருவரின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பராமரிக்க முக்கியமானது என்றும் ஒப்பு கொண்டுள்ளனர்.தூக்கத்துடன் போராடுபவர்கள் தங்களுக்கு மூட் ஸ்விங்ஸ் எனப்படும் மனநிலை மாற்றங்கள்மற்றும் பகலில் கவனம் செலுத்துவதில் சிரமம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ResMed-ன் லத்தீன் அமெரிக்கா மற்றும் தெற்காசிய துணைத் தலைவர் கார்லோஸ் மான்டீல் கூறுகையில், ஒரு நல்ல இரவு தூக்கத்தின் முக்கியத்துவம் மற்றும் ஒருவரின் நல்வாழ்வில் அதன் தாக்கத்தை ஆராய இந்த கணக்கெடுப்பை நடத்தினோம். எங்கள் கண்டுபிடிப்புகள் மக்கள் இரவில் தூங்குவதற்கு சிரமப்படுவதைக் காட்டுகின்றன, மேலும் அவர்களின் தூக்கப் பழக்கம் மற்றும் தூக்கத்தின் தரம் பற்றி மேலும் அறிய ஆர்வமாக உள்ளனர் என தெரிவித்தார்.

நீங்கள் எப்போதும் பிசியான ஆளா...ஒர்க்அவுட் செய்ய கூட நேரமில்லாதவர்களுக்கு 3 நிமிட பயிற்சிகள்...

ஆய்வில் தெரியவந்துள்ள முக்கிய தகவல்கள்..

* கணக்கெடுக்கப்பில் பங்கேற்ற 72% பேர் போதிய தூக்கமின்மை அல்லது மோசமான தூக்கம் தங்களின் உணர்ச்சி நிலையை (emotional state) பாதித்துள்ளதாக கூறியுள்ளனர்.

* இந்தியாவிலிருந்து பங்கறவர்களில் 81% பேர் மோசமான தூக்கப் பழக்கம் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் என்பதை உணர்வதாகவும் மேலும் பாதிப்பை தடுக்க தங்களின் தூக்க ஆரோக்கியத்தை மேம்படுத்த உரிய செயல்களை செய்ய தயாராக உள்ளதும் தெரியவந்துள்ளது.

* 34% பேர் மோசமான இரவு தூக்கத்தின் அறிகுறி குறட்டை என்பதை அறிந்திருகின்றனர். பதிலளித்தவர்களில் 51% பேர் ஸ்லீப் டிராக்கரைப் பயன்படுத்துகின்றனர் மற்றும் 35% பேர் தூக்கத்தின் போது தங்கள் ஆரோக்கியத்தை கண்காணிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.* இந்திய பெரியவர்களில் 55% பேர் சராசரியாக வாரத்தில் 3 இரவுகளில் தூங்குவதில் சிக்கல்களை சந்திப்பதாக கூறி இருக்கிறார்கள்.

தூங்குவதில் சிக்கல்கள் இருந்த போதிலும் பதிலளித்தவர்களில் 21% பேர் மட்டுமே சுகாதார நிபுணரிடம் உதவி கோரியுள்ளனர். மேலும் 59% பேர் குறட்டை ஒரு நல்ல இரவு தூக்கத்தின் அறிகுறி என்று நம்புவதாக தெரிவித்துள்ளனர். தூங்கும் போது ஏற்படும் அறிகுறிகள் தூக்க கோளாறின் அறிகுறிகளாக இருக்கலாம் என்பது பலருக்கும் தெரியவில்லை. எரிச்சல் அல்லது மனச்சோர்வு, காலை தலைவலி மற்றும் அதிக பகல்நேர தூக்கம் போன்ற மனநிலை மாற்றங்கள் ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் தூக்கம் தொடர்பாக கண்டறியப்பட்ட முதல் 3 அறிகுறிகளாகும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Sleep deprivation, Sleepless

அடுத்த செய்தி