ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் வழிகள்.. போட்டியாளரை சிரிக்க வைத்த அமிதாப் பச்சனின் அறிவுரை..

ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் வழிகள்.. போட்டியாளரை சிரிக்க வைத்த அமிதாப் பச்சனின் அறிவுரை..

அமிதாப் பச்சன்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, ​​மருத்துவமனை ஊழியர்கள் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் அவரது ஆக்ஸிஜன் அளவை சோதிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

  • Share this:
பிரபல இந்தி நடிகரான அமிதாப் பச்சன் தற்போது கவுன் பனேகா குரோர்பதி எனும் ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் அதன் முதல் எபிசோடை ஒளிபரப்பிய இந்த நிகழ்ச்சி, தொற்றுநோயால் வீட்டில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு சிறிது ஓய்வை அளித்துள்ளது. மேலும் 78 வயதான அமிதாப் பச்சன், போட்டியாளர்களுடன் வேடிக்கையாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால் இன்னமும் சுவாரஸ்யமாக்குகிறது.

நிகழ்ச்சிக்கு வரும் போட்டியாளர்கள் வசதியாக உணர, பச்சன் அவர்களுடன் தங்கள் வாழ்க்கையைப் பற்றியும், அவர்களை சுற்றியுள்ளவர்கள் எவ்வாறு ஊக்குவிக்கின்றன என்றும் பேசுகிறார். அதன் சமீபத்திய எபிசோடில், அர்பனா வியாஸ் என்பவர் வேகமான பதிலளித்து முதல் கேள்வியை வென்றார் மற்றும் ஹாட் சீட்டிலும் அமர வாய்ப்பு கிடைத்தது. பேச்சுத் தடையால் அவதிப்படும் அர்பனா, தனது தந்தையுடன் இருந்து வருகிறார், மேலும் அவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் வெற்றிகரமாக ரூ. 3,000 வென்றார்.

அந்த எபிசோடின் முடிவில், பச்சன் அர்பனாவிடம் தொடர்ந்து ஆக்ஸிஜனை பரிசோதித்தாரா? என்று கேட்டார். அதற்கு அர்பனா, அவரது ஆக்ஸிஜனுக்காக ஒரு பல்ஸ் ஆக்சிமீட்டரை பயன்படுத்தி எடுக்கப்படுவதாகவும், அது பொதுவாக 95-96-இல் இருப்பதாகவும் கூறினார். இது குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய பச்சன், ஆக்ஸிஜன் அளவை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்த ரகசிய தந்திரம் தனக்குத் தெரியும் என்றார்.கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்த நேரம் குறித்த அவரது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இந்தாண்டு ஜூலை மாதம் தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, ​​மருத்துவமனை ஊழியர்கள் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் அவரது ஆக்ஸிஜன் அளவை சோதிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

முதலில் அவரது ஆக்ஸிஜனின் அளவு 92-93 ஆக இருந்துள்ளது, மேலும் அவர் குணமடைய ஆக்ஸிஜனின் அளவு 98 ஆக இருக்க வேண்டும் என்று மருத்துவர் கூறியிருந்தார். ஆகையால், மருத்துவர்கள் ஆக்ஸிமீட்டரை கொண்டு வரும்போது, ​​ஆக்ஸிஜன் அளவை 98-ஆக உயர்த்துவதற்கு தான் ஆழ்ந்த மூச்சை எடுப்பேன் என்று அவர் தெரிவித்து அங்கு சிரிப்பலையை ஏற்படுத்தினார்..
Published by:Sivaranjani E
First published: