கிரீன் டீயின் மருத்துவப் பயன்கள் போல் ஒயிட் டீ எனப்படும் வெள்ளைத் தேநீர் அருந்தினாலும் நாம் எதிர்பாராத மருத்துவப் பயன்கள் நமக்குக் கிடைக்கும்.
பிளாக் டீ, கிரீன் டீ போன்றே வெள்ளைத் தேநீர் எனும் ஒயிட் டீயும் தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுவதுதான். இதனால்தான் இதன் மருத்துவப் பயன்களும் அதிகமாகப் பேசப்படுகிறது.
ரெகுலராக ஒயிட் டீ அருந்தி வந்தால் ரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்துவதோடு தலைமுடி வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.
வெள்ளைத் தேநீரில் உள்ள கேடசின்ஸ் என்ற ஒரு பொருள் டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.
இது ஆண்ட்டி- ஆக்சிடண்ட் என்பதால் செல்களைப் பாதுகாக்கிறது. கருத்தரித்த பெண்களின் கருவை இது பாதுகாக்கிறது.
நாளொன்றுக்கு 2 முறை வெள்ளைத் தேநீர் அருந்தினால் சீரண சக்தியை அதிகரிக்கிறது. மேலும் வயிற்று தசைப்பிடிப்பு வலியையும் குறைக்கிறது.
முகப்பரு, முகத்தின் கரும்புள்ளிகள், முகச்சுருக்கம் ஆகியவற்றை ஒயிட் டீ போக்குகிறது. சருமம் தன் உறுதியையும் பளபளப்பையும் பாதுகாக்க உதவுகிறது.
ஒயிட் டீ அல்லது வெள்ளைத் தேநீரில் ஆன்ட்டி- ஆக்சிடண்ட்ஸ் எனப்படும் வைட்டமின் சத்துக்கள் இருப்பதால் அது கல்லீரலையும் பாதுகாக்கிறது.
ரெகுலராக வெள்ளைத் தேநீர் அருந்தி வந்தால் நம் மூலை அமைப்பின் மேலுறை அடுக்குகளின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. இதனால் புலன்களின் இயக்கம், தசை இயக்கம், நினைவாற்றல் ஆகியவையும் பாதுகாக்கப்படும்.
மேலும் உடல் எடையைக் குறைக்கவும், இருதய நோய் ரிஸ்க்குகளைத் தடுக்கவும் ஒயிட் டீ பயன்படுகிறது. பற்களில் பாக்டீரியாவின் தாக்கம் இதன் மூலம் குறைகிறது.
ஒயிட் டீயில் உள்ள சிலபல பொருட்கள் மூலம் எலும்புத் தேய்மானமும் குறைகிறது.
ஒயிட் டீயில் உள்ள பாலிபெனால் ரத்தத் தமனிகளை ரிலாக்ஸ் செய்வதோடு உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
ஒயிட் டீ குறித்த 5 மருத்துவ ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது என்னவெனில் நாளொன்றுக்கு 3 கோப்பைகள் ஒயிட் டீ சாப்பிடுபவர்களுக்கு இருதயம் தொடர்பான நோய்கள் குறித்த ரிஸ்க்குகள் குறைவதாக கூறப்பட்டுள்ளது.
Also Read: சுவாச நோய் தொற்றுகளின் அறிகுறிகளை குறைக்க ஜிங்க் சப்ளிமெண்ட்ஸ்கள் உதவுமா? ஆய்வில் வெளியான தகவல்..
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.