Home /News /lifestyle /

புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் சக்தி கொண்ட பெருஞ்சீரக விதைகள்! ஹெல்த் சீக்ரெட்ஸை தெரிந்துகொள்ளுங்கள்

புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் சக்தி கொண்ட பெருஞ்சீரக விதைகள்! ஹெல்த் சீக்ரெட்ஸை தெரிந்துகொள்ளுங்கள்

பெருஞ்சீரக விதைகள் சக்திவாய்ந்த கீமோ மாடுலேட்டரி விளைவுகளை (chemo modulatory effects) கொண்டுள்ளன. இது தோல், வயிறு மற்றும் மார்பகங்களை பல்வேறு புற்று நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் ஃப்ரீ ரேடிக்கல் பண்புகள் கொண்டவையாகும்.

பெருஞ்சீரக விதைகள் சக்திவாய்ந்த கீமோ மாடுலேட்டரி விளைவுகளை (chemo modulatory effects) கொண்டுள்ளன. இது தோல், வயிறு மற்றும் மார்பகங்களை பல்வேறு புற்று நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் ஃப்ரீ ரேடிக்கல் பண்புகள் கொண்டவையாகும்.

பெருஞ்சீரக விதைகள் சக்திவாய்ந்த கீமோ மாடுலேட்டரி விளைவுகளை (chemo modulatory effects) கொண்டுள்ளன. இது தோல், வயிறு மற்றும் மார்பகங்களை பல்வேறு புற்று நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் ஃப்ரீ ரேடிக்கல் பண்புகள் கொண்டவையாகும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
பெருஞ்சீரக செடி என்பது உண்ண கூடிய தளிர்கள், இலைகள் மற்றும் விதைகளுக்காக வளர்க்கப்படுகிறது. நம் வீட்டு சமையலறையில் முக்கிய மசாலா பொருளாக பயன்படுத்தப்பட்டு வரும் பெருஞ்சீரகம், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. பெரும்பாலான இந்திய வீடுகளில் பின்பற்றப்பட்டு வரும் ஒரு பொதுவான பழக்கம் என்னவென்றால், ஒவ்வொரு வேளை உணவை சாப்பிட்டு முடித்த பின்னரும் சிறிது பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மெல்லுவது.

ஏனெனில் இதன் இனிப்பு சுவை உணவிற்கு பின் வாய் பகுதியை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், பெருஞ்சீரகம் இது காப்பர், பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீஸ், வைட்டமின் சி, இரும்பு, செலினியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களின் செறிவூட்டப்பட்ட மூலமாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட அத்தியாவசிய சத்துக்கள் அடங்கி இருக்கும் பெருஞ்சீரக விதைகளை (fennel seeds) தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.

நார்ச்சத்து நிறைந்தது:

வடிவத்தில் சிறியதாக இருந்தாலும் பெருஞ்சீரக விதைகள் அதிக நார்ச்சத்து கொண்டவை. ஒரு தேக்கரண்டி அதாவது சுமார் 6 கிராம் உலர்ந்த பெருஞ்சீரகம் விதைகள் மூலம் சுமார் 2 கிராம் நார்சத்து கிடைக்கிறது. ஒரு ஆப்பிளில் 3-4 கிராம் வரை மட்டுமே நார்ச்சத்து இருக்கிறது. தினசரி நமக்கு தேவையான நார்ச்சத்தின் அளவு 25-30 கிராம் வரை. வயிற்று காய்ச்சல் மற்றும் டயரியா உள்ளிட்டவவை சரியாக நார்ச்சத்து தேவைப்படுகிறது.

இதையும் படிங்க | ‘40 வயதினிலே’… 40 வயதிலும் உங்கள் எடையை குறைப்பது சாத்தியமே… 5 எஃபெக்டிவ் டிப்ஸ்!

நீர் தங்குவதை குறைக்க:

உடலில் அதிகப்படியான திரவம் உருவாகும் போது நீர் தேக்கம் ஏற்படுகிறது. இது உடலின் சில பகுதிகளை வீக்கமடைய செய்கிறது. பெரும்பாலும் அடி, கணுக்கால் மற்றும் கால்களில் ஏற்படும். இந்த கோளாறை சரி செய்ய தினமும் ஒரு கப் பெருஞ்சீரக டீ குடித்து வந்தால் அது நம் உடலில் இருக்கும் அதிகப்படியான திரவத்தை வெளியேற்ற உதவுகிறது. அதே நேரம் பெருஞ்சீரக விதை உடலில் இருக்கும் நச்சுகளை அகற்றவும், சிறுநீர் பாதை பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது.

இரத்த அழுத்தத்தை சீராக்க:

தினமும் சிறிதளவு பெருஞ்சீரக விதைகளை மென்று சாப்பிடுவது உமிழ்நீரில் நைட்ரைட் உள்ளடக்கத்தை (nitrite content) அதிகரிக்க உதவுகிறது, இது இரத்த அழுத்தத்தை சீராக வைத்து கொள்ள உதவும் சிறந்த இயற்கை வழி. பெருஞ்சீரக விதைகளில் காணப்படும் பொட்டாசியம் இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

சரும சுருக்கம்:

பெருஞ்சீரக விதைகளில் இருக்கும் சக்திவாய்ந்த ஆன்டி ஏஜிங் பண்புகள் சரும சுருக்கங்களை கட்டுக்குள் வைக்க உதவும். இதிலிருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல் ஸ்கேவஞ்சர்களை எதிர்த்துப் போராடும். அவை ஆரோக்கியமான தோல் செல்களில் இருந்து ஆக்ஸிஜனை வெளிபடுத்த உதவும்.

இதையும் படிங்க | “சுடுதண்ணீர் முதல் சோப்பு வரை…” – நீங்கள் செய்யக்கூடாத 5 குளியல் தவறுகள்!

கேன்சரிலிருந்து பாதுகாக்க:

பெருஞ்சீரக விதைகள் சக்திவாய்ந்த கீமோ மாடுலேட்டரி விளைவுகளை (chemo modulatory effects) கொண்டுள்ளன. இது தோல், வயிறு மற்றும் மார்பகங்களை பல்வேறு புற்று நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் ஃப்ரீ ரேடிக்கல் பண்புகள் கொண்டவையாகும். எனவே நம்முடைய தினசரி உணவில் பெருஞ்சீரக விதைகளைச் சேர்த்து வருவது ஆரோக்கியமான சருமம் மற்றும் கூந்தலுக்கு தேவையான நன்மைகள் கிடைக்கும்.
Published by:Archana R
First published:

Tags: Fennel Seed, Healthy Lifestyle

அடுத்த செய்தி