• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • புரதச்சத்து முதல் வைட்டமின் சி வரை… வேம்பு ஜூஸ் குடிப்பதால் உடலில் ஏற்படும் அற்புதங்கள்!

புரதச்சத்து முதல் வைட்டமின் சி வரை… வேம்பு ஜூஸ் குடிப்பதால் உடலில் ஏற்படும் அற்புதங்கள்!

தினமும் வேம்பு ஜூஸ் அருந்தி வந்தால் அந்த இலைகளில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை சீராக்கி நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவுகிறது.

  • Share this:
வேம்பு சுவை கசப்பானதாக இருந்தாலும் அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. பழங்காலத்திலிருந்தே, வேம்பு அதன் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் காரணமாக பல்வேறு தொற்று நோய்களை குணப்படுத்தவும், எடையை குறைக்கவும் உதவுகிறது. வேம்பு இலையில் புரதம், கார்போஹைட்ரேட்டுகள், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட முக்கிய சத்துக்கள் உள்ளன. வேப்பஞ்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் இவற்றை ஒன்றாக கலந்து தினமும் பருகி வந்தால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.

செரிமானத்தை அதிகரிக்கும்: வேப்ப இலையில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. தினமும் வேம்பு ஜூஸ் அருந்தி வந்தால் அந்த இலைகளில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை சீராக்கி நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவுகிறது. இதனால் உங்கள் குடல் இயக்கம் மேம்பட்டு மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்: வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க வேம்பு உதவுகிறது. எடை இழப்புக்கு அதிகரித்த வளர்சிதை மாற்ற விகிதம் மிகவும் முக்கியமானது. வேம்பில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் அதிக அளவு கலோரிகளை எரித்து உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

Must Read | உங்களுக்கு இரத்த சர்க்கரை இருக்கா? இந்த 5 ’சூப்பர்ஃபுட்’களை ட்ரை பண்ணுங்க..!

வயிற்று புழுக்களை வெளியேற்ற: வேப்பிலையில் உள்ள பல்வேறு பயோகெமிக்கல் பொருட்கள், குழந்தைகள் அதிகம் அவஸ்தைப்படும் குடல் புழுக்களை அழித்து பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதற்கு குழந்தைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் சிறிது வேப்பிலை கொழுந்தை சாப்பிட கொடுக்கலாம் அல்லது வேப்பிலையை ஜூஸ் வடிவிலும் கொடுக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: வேப்ப இலைகளில் தயாரிக்கப்பட்ட ஜூஸ்-ஐ தினமும் அருந்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். மலேரியா நோய்க்கு இந்த ஜூஸ்-ஐ குடிப்பதால், அது குயினின் போலவே பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வேம்பில் அதிகளவு கால்சியம் உள்ளதால், நமது எலும்புகளுக்கு நன்மை தருவதாக இருக்கிறது. அதுமட்டுமின்றி புற்றுநோய்க்கு கூட வேம்பு மருந்தாக அமைகிறது.

Must Read | நீங்க ஹெல்தியா இருக்கீங்களா? கண்டுபிடிக்க உங்க முகத்தை செக் பண்ணுங்க..! சுவாரஸ்ய தகவல்கள்

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்: வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க வேம்பு உதவுகிறது. எடை இழப்புக்கு அதிகரித்த வளர்சிதை மாற்ற விகிதம் மிகவும் முக்கியமானது. வேம்பில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் அதிக அளவு கலோரிகளை எரித்து உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. நச்சுத்தன்மை: வேம்பு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. தினமும் வேம்பு ஜூஸ் அருந்தி வந்தால் நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்திகரிக்கப்படுவதன் மூலம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ராசாயனங்கள் வெளியேறுகிறது. இதனால் உடலில் இருந்து ஆரோக்கியமற்ற நச்சுக்கள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: