முதியவர்களுக்கு ஏற்படும் நரம்பியல் சார்ந்த நோய் அல்சைமர் என்று குறிப்பிடப்படுகிறது. அதிக வயதுடையவர்களின் மூளையில் ஏற்படும் உயிரணுக்களின் சேதம் மற்றும் அழிவு காரணமாக இந்த நோய் ஏற்படுகிறது. மூளை செல்களை சிறிது சிறிதாக சிதைக்கும் தன்மை கொண்டது இந்த அல்சைமர். இந்த நோயை போலவே டிமென்ஷியாவும் வயது தொடர்பான கோளாறு. இதுவும் மூளை செல்கள் பாதிக்கப்படுவதன் காரணமாக ஏற்படுகிறது.
நினைவாற்றல் இழப்பு, சிந்திக்கும் திறன் பாதிப்பு மற்றும் அன்றாட வாழ்க்கையில் தலையிட்டு பாதிப்பை ஏற்படுத்த கூடிய ஒன்றுக்கொன்று தொடர்புடைய இந்த 2 நோய்களும் சாதாரண முதுமை நிலையின் ஒரு பகுதி இல்லை. நம் நாட்டில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 11% பேர் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதே போல உலகளவில் சுமார் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் இந்தியாவை சேர்ந்தவர்கள் 5.3 மில்லியன் பேர். டிமென்ஷியாவுக்கு வழிவகுக்கும் மிகவும் பொதுவான காரணம் அல்சைமர். இந்நிலையில் அல்சைமர் தொடர்பான டிமென்ஷியாவின் எண்ணிக்கை வரும் 2050-ஆம் ஆண்டிற்குள் 3 மடங்கு அதிகரித்து 150 மில்லியனிற்கும் மேற்பட்ட மக்கள் என்ற எண்ணிக்கையை தாண்டும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
ஆபத்து காரணிகள்:
அல்சைமர் நோய் உருவாவதற்கான துல்லியமான காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கண்டறியவில்லை. ஏனென்றால் இது பல நேரங்களில் 40 வயதை கடந்தவர்களுக்கும் கூட காணப்படுகிறது. இருப்பினும் மரபணு, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் இந்த நோயை ஏற்படுத்த கூடிய முக்கிய காரணிகளாக அடையாளம் காணப்படுகின்றன.
வயது ஏற ஏற மூளை செல்கள் சேதமடையும் போதும், பெற்றோர் அல்லது உடன்பிறந்தார்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், மரபணு மாறுபாடு, தலை அல்லது மூளை பகுதிகளில் பலத்த காயம் ஏற்படுவது, ஆரோக்கியமான சமூக தொடர்பு இல்லாமல் இருப்பது அல்லது உடல் பருமன், புகைப்பழக்கம், மோசமான உணவுமுறைகள், போதுமான உடல்செயல்பாடுகள் இல்லாமல் இருப்பது, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு உள்ளிட்டவை இந்நோயை ஏற்படுத்துவதற்கான காரணிகளாக கூறப்படுகிறது.
அறிகுறிகள் :
மூளையின் சிந்திக்கும் மற்றும் நினைவு திறனில் பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்நோய் ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள் பின்வருமாறு:
* உரையாடல்கள் மற்றும் சமீபத்திய நிகழ்வுகளை நினைவில் வைத்து கொள்ளும் கொள்ளும் திறன் வெகுவாக குறைவது
* தொடர் ஞாபக மறதி ஏற்கனவே பழக்கமான இடங்கள், மக்கள் மற்றும் பொருள்களை நினைவில் வைத்து கொள்வது அல்லது அடையாளம் காண்பதில் சிரமம்
அதிகளவு தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரியுமா..?
* எண்ணங்களை வெளிப்படுத்துவதில் சிரமம்
* எண்களை அடையாளம் காண இயலாமல் போவது
* மனநிலை கோளாறுகள் மற்றும் மனச்சோர்வு
* நிம்மதியாக தூங்க முடியாமல் தவிப்பது
* கற்பனை எது உண்மை எது என்று சொல்ல இயலாமல் போவது
நோய் கண்டறிதல்:
உடல் மற்றும் நரம்பியல் பரிசோதனை, மன நிலை மற்றும் நரம்பியல் உளவியல் சோதனை, பிரெயின் இமேஜிங், அனிச்சை செயல் சோதனை, மசில்ஸ் டோன் மற்றும் ஸ்ட்ரென்த் சோதனை, பார்வை மற்றும் கேட்கும் உணர்வு, லேப் சோதனைகள், ரத்த பரிசோதனைகள் உள்ளிட்ட பல வழிமுறைகள் நோயின் தீவிரம் பொறுத்து கண்டறிய பயன்படுகின்றன.
சிகிச்சை மருந்துகள்:
* மேலும் மனச்சோர்வை குறைக்க, நியூரான் டு நியூரான் தகவல் தொடர்புகளை ஊக்குவிக்க Cholinesterase inhibitors வழங்கப்படுகின்றன
* நியூரான் டு நியூரான் கம்யூனிகேஷனை Memantine சப்போர்ட் செய்கிறது.
* மனநிலை மாற்றங்களை நிலைப்படுத்த Antidepressants மருந்துகள் அளிக்கப்படும்
அறிவாற்றல் குறைவு, நினைவாற்றல் இழப்பு மற்றும் தினசரி வாழ்க்கையில் தலையிடும் பாதிப்புகள் ஆகியவற்றை அல்சைமர் நோயின் வளர்ச்சியை மெதுவாக்குவதன் மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடியும், ஏனெனில் இன்னும் உறுதியான சிகிச்சை முறைகள் இந்நோய்க்கு இல்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.