எப்போதும் பசி எடுத்துக்கொண்டே இருக்கிறதா? இந்த பிரச்சனை காரணமாக இருக்கலாம்..!

எப்போதும் பசி எடுத்துக்கொண்டே இருக்கிறதா? இந்த பிரச்சனை காரணமாக இருக்கலாம்..!

பசி

சர்க்கரை அளவில் அதிக சரிவை கொண்டவர்கள் 9 சதவிகிதம் அதிகரித்த பசியை கொண்டிருக்கின்றனர். மேலும் அவர்களின் அடுத்த உணவுக்கு முன் சராசரியாக அரை மணி நேரத்திற்கும் குறைவாகவே உள்ளது.

  • Share this:
பசியுடன் இருப்பது உங்கள் உடலுக்கு அதிக உணவு தேவை என்பதை உணர்த்துகிறது. ஆனால் இரத்தத்தில் சர்க்கரை அளவுகளில் பெரிய சரிவை அனுபவிக்கும் நபர்கள், சாப்பிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகும் கூட, பசியுடன் இருப்பதை உணர்கிறார்கள் மற்றும் மற்றவர்களை விட பகல் நேரங்களில் நூற்றுக்கணக்கான கலோரிகளை உட்கொள்கிறார்கள் என்று புதிய ஆராய்ச்சி ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

நிஜ வாழ்க்கை அமைப்புகளில் உணவுக்கான தேவைகளை கண்காணிக்கும் உலகின் மிகப்பெரிய ஊட்டச்சத்து ஆராய்ச்சி திட்டமான PREDICT நடத்திய ஒரு ஆய்வு நேச்சர் மெட்டபாலிசத்தில் வெளியிடப்பட்டது.

லண்டனின் கிங்ஸ் கல்லூரி மற்றும் சுகாதார அறிவியல் நிறுவனமான ZOE மற்றும் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி, ஹார்வர்ட் டி.எச். சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த், மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனை, நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம், லீட்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்வீடனில் உள்ள லண்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் விஞ்ஞானிகளை உள்ளடக்கிய ஆராய்ச்சி குழு, கலோரி-கட்டுப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளும் போதிலும் எடையைக் குறைக்க மக்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள் என்பதையும், உணவு மற்றும் ஆரோக்கியத்திற்கு வரும்போது தனிப்பட்ட வளர்சிதை மாற்றத்தைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டியுள்ளனர்.இரண்டு வார காலப்பகுதியில் தரப்படுத்தப்பட்ட காலை உணவுகள் மற்றும் இலவசமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்ட 1,070 பேரிடமிருந்து இரத்த சர்க்கரை அளவு மற்றும் ஆரோக்கியத்தின் பிற குறிப்பான்கள் பற்றிய விரிவான தகவல்களை ஆராய்ச்சி குழு சேகரித்தது.

அதில் மொத்தம் 8,000-க்கும் மேற்பட்ட காலை உணவுகள் மற்றும் 70,000 மீல்ஸ் ஆகியவை அடங்கும். நிலையான காலை உணவுகள் ஒரே அளவு கலோரிகளைக் கொண்ட மஃபின்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. ஆனால் அவை கார்போஹைட்ரேட்டுகள், புரதம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் அடிப்படை கலவையில் வேறுபட்டிருந்தன. ஆய்வில் பங்கேற்றவர்களின் உடல், சர்க்கரையை எவ்வளவு சிறப்பாக செயலாக்குகிறது என்பதை அளவிட, எதுவும் சாப்பிடாமல் இருக்கும் போது அவர்களில் இரத்த சர்க்கரை மறுமொழி பரிசோதனை (வாய்வழி குளுக்கோஸ் சகிப்புத்தன்மை சோதனை) மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட காலங்கள் முழுவதும், பங்கேற்பாளர்கள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கணக்கிட ஸ்டிக்-ஆன் கன்டின்யூயஸ் குளுக்கோஸ் மானிட்டர்களை (CGMs) அணிந்திருந்தனர். அத்துடன் செயல்பாடு மற்றும் தூக்கத்தை கண்காணிக்க ஒரு அணியக்கூடிய சாதனத்தையும் வைத்திருந்தனர். மேலும் ஒரு தொலைபேசி ஆப்பை பயன்படுத்தி அவர்களின் பசி மற்றும் விழிப்புணர்வின் அளவையும் ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்தனர்.அதோடு அவர்கள் எப்போது, என்ன சாப்பிட்டார்கள் என்பதையும் சேர்த்து பதிவு செய்தனர். இந்த தரவுகளைப் பகுப்பாய்வு செய்தபின், சாப்பிட்ட 2 முதல் 4 மணிநேரங்களுக்குப் பிறகு சிலர் குறிப்பிடத்தக்க ‘சர்க்கரை அளவு சரிவை’ அனுபவித்ததை குழு கவனித்தது. அதாவது அவர்களின் இரத்த சர்க்கரை அளவு மீண்டும் அதிகரிப்பதற்கு முன்பு அடிப்படை லெவலுக்கு கீழே வேகமாக சரிந்தது என்பதை கண்டறிந்துள்ளனர்.

சர்க்கரை அளவில் அதிக சரிவை கண்டவர்கள் 9 சதவிகிதம் அதிகரித்த பசியை கொண்டிருந்தனர். மேலும் அவர்களின் அடுத்த உணவுக்கு முன் சராசரியாக அரை மணி நேரத்திற்கும் குறைவாகவே காத்திருந்தனர். அவர்கள் அதே உணவை சாப்பிட்டாலும் கூட சர்க்கரை அளவில் குறைந்த சரிவை கொண்ட நபர்களை காட்டிலும் அதிகரித்த பசியை சில மணி நேரங்களிலேயே பெறுகின்றனர் என்பதைக் ஆய்வுக்குழு கண்டறிந்தது.

சர்க்கரை அளவில் அதிக சரிவை எதிர்கொண்டவர்கள், காலை உணவுக்குப் பிறகு 3 முதல் 4 மணி நேரத்தில் 75 கலோரிகளையும், குறைந்த சரிவை கொண்டவர்களை காட்டிலும் நாள் முழுவதும் 312 கலோரிகளுக்கும் அதிகம் சாப்பிட்டனர். இந்த வகையான உணவு உட்கொள்ளல் அவர்களை ஒரு வருடத்தில் 20 பவுண்டுகள் எடை அதிகரிக்கச் செய்தது.இது குறித்து ஆய்வுக் குழுவிற்கு தலைமை தாங்கிய நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் அனா வால்டெஸ் கூறியதாவது, “பலர் உடல் எடையைக் குறைக்கவும் மேலும் அதிகரிக்காமல் இருப்பதை தடுத்து நிறுத்தவும் போராடுகிறார்கள். மேலும் ஒவ்வொரு நாளும் நாம் சாப்பிடும் சில நூறு கூடுதல் கலோரிகள் பல பவுண்டுகள் வரை எடையை நம்மில் கூட்டலாம். இது ஒரு வருடத்தில் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.

நல்ல காளானை தேர்தெடுப்பது எப்படி? உங்களுக்கான டிப்ஸ்..!

சாப்பிட்ட பிறகு சர்க்கரையில் ஏற்படும் சரிவு, பசி மற்றும் பசி உணர்வு மீது இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எங்கள் ஆய்வு கண்டுபிடித்தது. மேலும் மக்கள் தங்கள் எடை மற்றும் நீண்டகால ஆரோக்கியத்தைப் புரிந்துகொள்ளவும் கட்டுப்படுத்தவும் இந்த ஆய்வு உதவுகிறது ” என்று கூறியுள்ளார்.

பங்கேற்பாளர்கள் ஒரே சோதனை உணவை சாப்பிடும்போது என்ன நடக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்த்ததில், அவர்களிடையே இரத்த சர்க்கரை ரெஸ்பான்ஸ்களில் பெரிய வேறுபாடுகள் இருப்பதை ஆய்வுக்குழு கண்டறிந்தது. அதேபோல ஆண்களுக்கு சராசரியாக பெண்களை விட சற்றே அதிக அளவில் சர்க்கரை சரிவு ஏற்படும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், வயது, உடல் எடை அல்லது பி.எம்.ஐ ஆகியவற்றிற்கும் சர்க்கரை அளவில் அதிகரித்த சரிவு மற்றும் குறைந்த சரிவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.வெவ்வேறு நாட்களில் ஒரே மாதிரியான உணவை சாப்பிட்டாலும் ஒவ்வொரு நபரும் தினசரி அனுபவித்த சர்க்கரை சரிவின் அளவில் சில மாறுபாடுகள் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். எனவே உங்கள் உடலில் சர்க்கரை சரிவு ஏற்படுவது மற்றும் ஏற்படாமல் இருப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தின் தனிப்பட்ட வேறுபாடுகளைப் பொறுத்தே அமைகிறது.

வெயில் காலம் தானேனு அதிகமா வெள்ளரிக்காய் சாப்பிடாதீங்க...அதில் இவ்வளவு ஆபத்து இருக்காம்..!

அத்துடன் ஒரு நாளின் உணவு தேர்வுகள் மற்றும் செயல்பாட்டு நிலைகளின் விளைவுகளையும் அவை உள்ளடக்கியுள்ளது. உங்கள் தனித்துவமான உயிரியலுடன் இணைந்து செயல்படும் உணவுகளைத் தேர்ந்தெடுப்பது, மக்கள் நீண்ட நேரம் பசியின்றி முழுமையாக உணரவும், ஒட்டுமொத்தமாக குறைவாக சாப்பிடவும் உதவும். அது நாளடைவில் உங்கள் எடை அதிகரிப்பு பிரச்சனையை தீர்க்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

 
Published by:Sivaranjani E
First published: