ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கும் கற்றாழை ஜூஸ்... தினமும் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்..?

ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கும் கற்றாழை ஜூஸ்... தினமும் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்..?

கற்றாலை ஜூஸ்

கற்றாலை ஜூஸ்

பல மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து பயன்பாடுகளைவ கொண்ட ஒரு தாவர இனம் கற்றாழை. பல நூற்றாண்டுகளாக மருத்துவ தாவரமாக பயன்படுத்தப்பட்டு வரும் கற்றாழை சருமம், முடி, உடல் மற்றும் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை செய்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பல மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து பயன்பாடுகளைவ கொண்ட ஒரு தாவர இனம் கற்றாழை. பல நூற்றாண்டுகளாக மருத்துவ தாவரமாக பயன்படுத்தப்பட்டு வரும் கற்றாழை சருமம், முடி, உடல் மற்றும் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை செய்கிறது.

உணவு, மருந்து மற்றும் அழகுசாதனத் தொழிலுக்கு கற்றாழை ஒரு முக்கிய மூலப்பொருளாக இருக்கிறது. இந்த தாவரம் ஜெல் நிரப்பப்பட்ட இலைகளைக் கொண்டுள்ளது. தீக்காயங்கள் மற்றும் காயங்களுக்கு சிகிச்சையளிக்க கற்றாழை ஜெல்லை பயன்படுத்துகின்றனர். மேலும் கற்றாழை ஜூஸ் வடிவிலும் கிடைக்கிறது. அதே போல கற்றாழை ஜூஸ் பாரம்பரியமாக பல ஆயுர்வேத தயாரிப்புகள், மருந்துகள் மற்றும் டானிக்குகளின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

கற்றாழை ஜூஸ் என்பது கற்றாழை ஜெல்லில் தண்ணீர் கலந்து தயாரிக்கப்படுகிறது. சில நேரங்களில் இதில் சுவைக்காக பழச்சாறு அல்லது சர்க்கரை சேர்க்கப்படுகிறது. மேற்பூச்சு பயன்பாடுகளை தவிர அலோவேரா அதாவது கற்றாழை ஜெல் மலச்சிக்கல் போன்ற செரிமானப் பிரச்சினைகளை சரி செய்யும், ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் என பலவற்றை கூறி வணிக ரீதியாக விற்கப்படுகிறது. கற்றாழை பல்வேறு வகையில் பயன்படுத்தப்பட்டாலும் ஜூஸானது அது வழங்கும் நன்மைகளை முழுமையாக பெற சிறந்த வழி என்கிறார் ஆயுர்வேத சுகாதார நிபுணர் டாக்டர் அசுதோஷ் கெளதம்.

Also Read : நீரிழிவு நோயாளிகள் அன்றாடம் கற்றாழை சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா..?

கற்றாழையில் வளர்சிதை மாற்றத்தை சீராக்கும் மற்றும் மலச்சிக்கல், நீரிழப்பு போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவும் என்சைம்கள் நிறைந்துள்ளன. இதனிடையே குடல் ஆரோக்கியத்திற்காக ஊட்டச்சத்து நிபுணர்கள் அங்கீகரித்துள்ள கற்றாழை ஜூஸின் 3 முக்கிய நன்மைகளை இங்கே பார்க்கலாம்.

ப்ரீபயாடிக்காக பயன்படும் கற்றாழை ஜூஸ்:

கற்றாழை ப்ரீபயாடிக்குகளின் சிறந்த இயற்கை ஆதாரமாகவும், லாக்டிக் அமில பாக்டீரியா நொதித்தலுக்கு முக்கிய மூலக்கூறாகவும் உள்ளது. கற்றாழையில் அசிமனேன், குளுக்கோமன்னன், மன்னோஸ் பாலிமர்ஸ் (அசெமன்னோஸ்), வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, பி6 மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட பல அடங்கி இருக்கின்றன. இவை நம் குடலில் உள்ள 'நல்ல' பாக்டீரியாவை பராமரிக்க ஒரு ப்ரீபயாடிக்காக செயல்படுகின்றன.

குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும்:

மலசிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு கற்றாழை சிறந்த பலன்களை தருகிறது. ஏனென்றால் கற்றாழையில் அலோயின் (aloin) இருக்கிறது. இதிலிருக்கும் அலோயின் அதன் அழற்சி எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்பை தவிர மலமிளக்கும் பண்பையும் கொண்டுள்ளது. மேலும் அலோயின் பெருங்குடல் சுருக்கங்களைத் தூண்டி மலத்தை மென்மையாக்கி மலச்சிக்கலை தீர்க்கிறது.

குடல் அழற்சியை சரி செய்கிறது...

காற்றாழையில் அடங்கி இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இரைப்பை குடல் அழற்சியை குறைக்க உதவும். அழற்சி எதிர்ப்பு பண்புகளை தவிர மற்றும் வலி மற்றும் எரிச்சல் நிவாரணியாகவும் காற்றாழை இருக்கிறது. குடல் சார்ந்த சிக்கல்களுக்கு நீங்கள் கற்றாழை ஜூஸ் குடிக்கலாம் என்றாலும் எப்போதும் நிபுணரை கலந்தாலோலசித்த பின் முயற்சிக்கவும்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Aloe vera, Digestion Problem, Gut Health