கற்றாழை பொதுவாக ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் அதிகமாக காணப்படுகிறது. கற்றாழையில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம், மாங்கனீசு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, பாலிசாக்கரைடுகள் மற்றும் யூரிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கற்றாழையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்க பயன்படுகிறது. மேலும் அனைத்து தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கும் கற்றாழையை பயன்படுத்தலாம். பொலிவான சருமத்தை பெறவும், அடர்த்தியான கூந்தலுக்கும் கற்றாழையை உபயோகிக்கலாம். கற்றாழை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும், அதன் பக்கவிளைவுகள் குறித்தும் நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.
கற்றாழையின் நன்மைகள் :
* தீக்காயங்களுக்கு சிகிச்சை :
தீக்காயங்களை சரிசெய்ய கற்றாழை உதவுகிறது. உங்கள் உடம்பில் ஒரு தீக்காயம் இருந்தால் தினமும் மூன்று முறை கற்றாழை ஜெல்லை எடுத்து தடவலாம். இது தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் விரைவாக குணமடைய உதவுகிறது. எனவே தினமும் இதனை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சூரிய ஒளியில் சிகிச்சை :
சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்க கற்றாழை உதவுகிறது. இதனால் சன்ஸ்க்ரீன் பயன்படுத்தாதவர்கள் கற்றாழை ஜெல்லை எடுத்து சருமத்தில் அப்ளை செய்து உலர்ந்த பின்னர் மேக்அப் செய்து கொண்டு வெளியே செல்லவும். மேலும் சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமையை நீக்கவும் கற்றாழையை பயன்படுத்தலாம்.
கண்களில் காண்டாக்ட் லென்ஸ் ஈஸியாக போடுவது எப்படி ? சீரியல் நடிகை ஜனனி சொல்லும் டிப்ஸ்..
வெட்டுக்கள், சிராய்ப்புக்கான சிகிச்சை
உங்களுக்கு சிறிய வெட்டுக்கள், சிராய்ப்புகள் ஏற்பட்டால் வலி மற்றும் எரியும் உணர்வில் இருந்து விரைவாக நிவாரணம் பெற கற்றாழை ஜெல்லை தடவலாம். இதில் ஆந்த்ரோகுயினோன்கள், இரெசின்கள், பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. இதனால் கற்றாழை ஜெல் காயங்களை உடனடியாக குணப்படுத்த உதவுகிறது மற்றும் கனமான வடுக்களை கூட சரி செய்யும் தன்மையை பெற்றுள்ளது.
சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது :
உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க கற்றாழை உதவுகிறது. சோற்றுக்கற்றாழையின் சாற்றில் நிறமேற்றிகளான (Dyes) ஆந்த்ரோகுயினோன் மற்றும் குயினோன்கள் உள்ளன. இதனால் கற்றாழை விரைவாக உறிஞ்சப்படுகிறது, எனவே இது எண்ணெய் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே உங்கள் மாய்ஸ்சரைசருடன் கற்றாழை ஜெல்லை கலந்து, உங்கள் சருமத்தில் தடவவும். தொடர்ந்து இதனை செய்து வந்தால் உங்கள் சருமம் நீரேற்றமாகவும், பொலிவாகவும் காணப்படும்.
கற்றாழையின் பக்க விளைவுகள் :
* கற்றாழை ஜெல் தோல் பிரச்சனைகளுக்கு நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டிருந்தாலும் முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆரம்பத்தில் கற்றாழையை பயன்படுத்தும் சிலருக்கும் எரியும் உணர்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
* உங்கள் சருமத்தில் கற்றாழை ஜெல்லை நீண்ட நேரம் வைத்திருந்தால் அது சருமத்தை வறட்சியாக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே, கற்றாழை ஜெல்லை பயன்படுத்திய சில நிமிடங்களுக்குப் பிறகு சருமத்தில் உலர விடாமல் தண்ணீரில் வாஷ் செய்து விடவும்.
வீட்டிற்குள்ளேயே இருந்தாலும் சருமப் பராமரிப்பு அவசியம்.. ஏன் தெரியுமா ?
* சிலருக்கு கற்றாழை ஜெல் ஒவ்வாமை இருக்கலாம். இதனால் அலர்ஜி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, நீங்கள் கற்றாழை ஜெல் பயன்படுத்துவதற்கு முன்னர் ஒரு சிறிய பகுதியில் சோதித்து எந்த ஒவ்வாமையும் ஏற்படாத பட்சத்தில் உங்கள் முகத்தில் தடவவும். எரியும் உணர்வு ஏற்பட்டால் பயன்படுத்துவதை தவிர்த்து விடுவது நல்லது.
* இது காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும் கற்றாழை குறித்த அறிவியல் ஆதாரங்கள் தற்போது வரை இல்லை என்பதால், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி பயன்படுத்துவது நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.