நாசியழற்சி பிரச்சனையை எவ்வாறு கையாளலாம் என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பாக, அந்தப் பிரச்சினை என்னவென்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதை ‘ஹே காய்ச்சல்’ என்றும் சொல்கின்றனர். நம் மூக்கு அல்லது வாய் வழியாக சுவாசிக்கும்போது மிக நுண்ணிய தூசிகளை சேர்த்து சுவாசிப்பதால் ஏற்படும் அழற்சி தான் நாசியழற்சி எனப்படும்.
பொதுவாக நாசியழற்சி பிரச்சினை இருக்கக் கூடிய மக்களுக்கு மூக்கடைப்பு, சுவாசிப்பதில் பிரச்சினை, தும்மல், கண் மற்றும் மூக்கில் அரிப்பு, தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் இருக்கும். இந்தத் தொந்தரவு அனைத்து வயதினருக்கும் ஏற்படக் கூடிய பொதுவான நோயாகும்.
பருவகால மாற்றங்களின் போது இந்தத் தொந்தரவு சிலருக்கு ஏற்படக் கூடும். சிலருக்கு ஆண்டு முழுவதுமே இந்தப் பிரச்சினையால் அவதிப்பட நேரிடும். இது பரம்பரை ரீதியாக வரக் கூடிய பிரச்சினை ஆகும். ஆஸ்துமா பிரச்சினையை எதிர்கொள்ளும் நோயாளிகளில் சிலருக்கு இதே பாதிப்பும் இருக்கிறது.
நோயை கண்டறிவது எப்படி?
மருத்துவ பரிசோதனை மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ வரலாற்றை ஆய்வு செய்வது மற்றும் தொடர்ச்சியாக அறிகுறிகளை கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலமாக இதை கண்டறியலாம். தேவைப்படும் பட்சத்தில் சருமத்தில் சிறு துளையிட்டு பரிசோதனை செய்யலாம் அல்லது ரத்த பரிசோதனை மூலமாக கண்டறியலாம்.
இதைத் தடுக்க முடியுமா?
தூசு கலந்த காற்றில் உலவுவது அல்லது சுவாசிப்பது போன்றவற்றை தவிர்ப்பது மட்டுமே இந்த நோயில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவும், குணப்படுத்தவும் உதவும். அதே சமயம், நமது சுற்றுப்புறத்தை முடிந்த வரையில் தூய்மையானதாக வைத்துக் கொள்ள வேண்டும். தனி சுகாதாரத்தை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். விலங்குகளை தொடுவது, தரை விரிப்புகளை தொடுவது போன்ற செயல்களுக்குப் பிறகு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். சின்ன, சின்ன தூசி போன்ற பொருட்களை உதிரச் செய்யும் பொம்மைகளை தொட்டு விளையாடக் கூடாது.
கருத்தடை சாதனங்கள் சில நேரங்களில் கை கொடுக்காமல் போவது ஏன்..? இதுதான் காரணம்..!
மெத்தை, தலையணை, படுக்கை விரிப்புகள் போன்ற அனைத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வபோது இவற்றை சூரிய வெளிச்சத்தில் உலர வைப்பதன் மூலமாக அதில் உள்ள தூசிகளை குறைக்கலாம். தூசி அடர்ந்த பகுதிகளுக்கு செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்வதன் மூலமாக, சுவாசத்தின் வழியாக தூசு உடல் உள்ளே நுழைவதை தடுக்க முடியும்.
மருத்துவ சிகிச்சை :
என்னதான் பார்த்து, பார்த்து கவனமாக இருந்தாலும், அதையும் தாண்டி உங்களுக்கு நாசியழற்சி பிரச்சினை ஏற்படக் கூடும். அத்தகைய சூழலில் மருத்துவரை அணுகி ஆலோசனை செய்வதுடன், தகுந்த சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, நாசியழற்சியில் இருந்து விடுபடுவதற்கான மருந்துகள் அல்லது மூக்கு வழி ஸ்பிரே போன்ற சிகிச்சைகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Health issues