ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

’சிறுநீர் பாதை நோய்தொற்று’ அறிகுறி எப்படி இருக்கும் தெரியுமா? அதை தடுக்கும் வழிமுறைகள்

’சிறுநீர் பாதை நோய்தொற்று’ அறிகுறி எப்படி இருக்கும் தெரியுமா? அதை தடுக்கும் வழிமுறைகள்

மாதிரி படம்

மாதிரி படம்

சுமார் 5-ல் ஒரு பெண் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது யுடிஐ நோயால் பாதிக்கப்படலாம் என ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (Urinary Tract Infection) மிகவும் பொதுவான தொற்றுநோய்களாகும். அவை ஆண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் உட்பட அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடும். பெரும்பாலும் இந்த நோய் தொற்று பெண்களுக்கு அதிகம் காணப்படுகிறது. சுமார் 5-ல் ஒரு பெண் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது யுடிஐ நோயால் பாதிக்கப்படலாம் என ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக சிறுநீரகம், யுரீட்டர், சிறுநீர்ப்பை மற்றும் யுரீத்ரா இவை சேர்ந்துதான் சிறுநீரக அமைப்பை பூர்த்தி செய்கின்றன.

தோல் அல்லது மலக்குடலில் இருந்து வரும் பாக்டீரியாக்கள், சிறுநீர்க்குழாய்க்குள் நுழைந்து சிறுநீர் பாதையில் உள்ள உறுப்புகளை பாதிக்கும் போது UTI (Urinary Tract Infection) ஏற்படுகிறது. நோய்த்தொற்றுகள் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களில் கூட காணப்படுகின்றன. சிறுநீர் வெளியேறும் பாதையில் எங்கு வேண்டுமானாலும் இந்த தொற்று ஏற்படலாம். உடலிலேயே ஏற்படும் தொற்றுக்களில் இந்த தொற்றுதலே இரண்டாவது இடம் வகிக்கும் மிகவும் பொதுவான தொற்றுதல் ஆகும். குறிப்பாக பைலோனெப்ரிடிஸ் எனும் நோய் UTI காரணமாக ஏற்படும் சிறுநீரக தொற்று ஆகும்.

சிறுநீர் பாதை தொற்றுநோயின் அறிகுறிகள்:

இந்த தொற்று சிறுநீரகத்தின் வெவ்வேறு உறுப்புகளை அடையும் போது வெவ்வேறு அறிகுறிகள் காணப்படுகின்றன.

சிறுநீர்ப்பை நோய்த்தொற்றின் அறிகுறிகள்:

* அடிக்கடி சிறுநீர் கழிப்பது.

* சிறுநீர் வருவது போன்ற உணர்வு இருக்கும். ஆனால் சிறுநீர் சிறிதே வெளி செல்லும்.

* சிறுநீர் துவாரம் எரியும்.

*அடிவயிற்றில் தசைப்பிடிப்பு

* சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறலாம்.

* சிலர் வெகுவாய் சோர்ந்து இருப்பர்.

* சிறுநீர் நிறம் மாறி இருக்கலாம்.

சிறுநீரக நோய்த்தொற்றின் அறிகுறிகள்:

* அதிக காய்ச்சல்

* குளிர் மற்றும் நடுக்கம்

* கீழ் முதுகிலும், பின்புறத்தின் பக்கத்திலும் வலி

* குமட்டல் மற்றும் வாந்தி

* சிறுநீரில் ரத்தம் கலந்து இருக்கலாம்.

சிறுநீர்க்குழாய் நோய்த்தொற்றின் அறிகுறிகள்:

* சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு.

* அதிக அளவு சிறுநீர் கழிப்பது.

இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் யார்?

பெண்கள் மற்றவர்களை விட யுடிஐ நோய்க்கு அதிகம் பாதிக்கப்படலாம். காரணம் என்னவென்றால், உடலில் இருந்து சிறுநீரை வெளியேற்றும் குழாய், மருத்துவ ரீதியாக ஒரு யூரித்ரா (urethra) என அழைக்கப்படுகிறது. இது பெண்களின் விஷயத்தில் குறுகிய மற்றும் ஆசனவாய்க்கு நெருக்கமாக உள்ளது.

ஆசனவாய் ஈ.கோலை பாக்டீரியாவின் நீர்த்தேக்கம் என்பதால், இந்த பாக்டீரியா பெண்ணின் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களுக்கு பயணிக்கும் வாய்ப்புகள் அதிகம். அதேபோல, வயதானவர்கள் யுடிஐக்களை வளர்ப்பதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர். ஏனெனில் அவர்களின் சிறுநீர்ப்பை முழுவதுமாக காலியாக்க முடியாது. இதையடுத்து சிறு குழந்தைகளுக்கு எளிதாய் இப்பாதிப்பு வரலாம்.

கொரோனா: சென்னை மாநகராட்சி கொண்டு வந்துள்ள சூப்பர் திட்டம்..!

சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும் பொதுவான மருத்துவ நிலைமைகள்:

ஆசனவாயிலிருந்து வரும் பாக்டீரியாக்கள் சிறுநீர் பாதையில் நுழையும் போது யுடிஐ பொதுவாக நிகழ்கிறது. பின்வரும் நிலைமைகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கு காரணமாக அமைகின்றன.

* சிறுநீரக கற்கள் சிறுநீர் பாதையைத் தடுக்கும் போது UTI ஏற்படலாம்.

* ஆண்களில் விரிவாக்கப்பட்ட புரோஸ்டேட் அவர்களின் சிறுநீர்ப்பையை முழுவதுமாக காலியாக்குவது கடினம். அப்போது இந்த நோய் ஏற்படலாம்.

* குழந்தைகள் மலச்சிக்கலால் பாதிக்கப்படும் போது நோய் ஏற்படலாம்.

* ஒருவருக்கு நீரிழிவு போன்ற ஒரு முறையான நோய் இருக்கும்போது UTI ஏற்படலாம்.

* புற்றுநோய் அல்லது எச்.ஐ.வி காரணமாக ஒருவருக்கு பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்போது

சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் வரலாம்.

சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்க என்ன செய்யலாம்?

* தினமும் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

* சிறுநீரை அடக்காதீர்கள். ஏனெனில் இது UTI பெறும் அபாயத்தை அதிகரிக்கும்.

* சிறுநீர் கழிக்கும் போது அவசரப்பட வேண்டாம். ஏனெனில் இது உங்கள் சிறுநீர்ப்பை முழுவதுமாக காலியாக்குவதைத் தடுக்கிறது. இதனால் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கும்.

* உங்கள் பிறப்புறுப்பு பகுதியில் டச் (douche), ஸ்ப்ரே அல்லது பவுடர் போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம்.

* உங்கள் பிறப்புறுப்பு பகுதியின் சரியான சுகாதாரத்தை பராமரிக்கவும்.

* முடிந்தால் பொது கழிப்பறைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முயற்சிக்கவும்.

* cranberry juice அல்லது மாத்திரைகள் சிறுநீர் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுவதால் அவற்றை நீங்கள் உட்கொள்ளலாம்.

* புரோபயாடிக்குகளை உட்கொள்ளுங்கள். அவை யுடிஐக்களைத் தடுக்க உதவுகின்றன.

First published:

Tags: Health issues, Urinary Tract Infection