முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஆண் மலட்டுத்தன்மையை போக்கி விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகள்..!

ஆண் மலட்டுத்தன்மையை போக்கி விந்தணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகள்..!

மலட்டுத்தன்மை

மலட்டுத்தன்மை

திருமணமாகிய தம்பதியர்களுக்கு குறிப்பிட்ட மாதங்கள் அல்லது ஆண்டுகள் வரை குழந்தை பிறக்காவிடில் பெண் மலட்டுத்தன்மை என்பது  அடிக்கடி விவாதிக்கப்படும் மற்றும் முன்னிலைப்படுத்தப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருமணமாகிய தம்பதியர்களுக்கு குறிப்பிட்ட மாதங்கள் அல்லது ஆண்டுகள் வரை குழந்தை பிறக்காவிடில் பெண் மலட்டுத்தன்மை என்பது அடிக்கடி விவாதிக்கப்படும் மற்றும் முன்னிலைப்படுத்தப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது.

பல ஆண்டுகளாக நீடித்து வரும் ஒரு விஷயமாக இருப்பதால் கருவுறுதல் சோதனைகளை மேற்கொள்வதற்கு பெரும்பாலான பெண்கள் தயக்கம் மற்றும் வெட்கப்பட மாட்டார்கள். இருப்பினும் ஆண் கருத்தரிப்பு (Male Fertility) பற்றி பேசுவதற்கு நம் சமூகத்தில் இன்னும் ஒரு தடை மற்றும் தயக்கம் இருக்கிறது. இப்போதும் கூட கருத்தரிப்பு தொடர்பான அழுத்தங்கள் என்று வரும் போது பெரும்பாலும் ஆண்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். பெண்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது அல்லது விமர்சிக்கப்படுகிறார்கள்.

ஆனால் ஒரு கர்ப்பம் உருவாக பெண்களை போலவே ஆண்களும் சமமான பொறுப்புக்குரியவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆரோக்கியமான மற்றும் விரைவான கருவுறுதலுக்கு பெண்களின் பாலியல் ஆரோக்கியம் போலவே ஆண்களின் பாலியல் ஆரோக்கியமும் முக்கியமானது.

ஆண் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான காரணங்கள்:

Mayo Clinic-ன் அறிக்கை படி, ஒவ்வொரு 7 ஜோடிகளில் 1 தம்பதி மலட்டுத்தன்மை சிக்கலை எதிர்கொள்கின்றனர். பல காரணங்களால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படலாம். இவற்றில் முக்கியமான ஒன்று குறைந்த விந்தணு எண்ணிக்கை (low sperm count). நோய்கள், காயங்கள், நாள்பட்ட உடல்நலப் கோளாறுகள், வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் பிற காரணிகள் ஆண்களின் விந்தணுக்களின் உற்பத்தியை பாதிக்கின்றன. சில நேரங்களில் ஆண்களும் அடைப்புக்கு ஆளாகிறார்கள்.

இதன் காரணமாக விந்து சரியாக வெளியேற முடியாது. இந்த நிலை விந்து வெளியேறும் குழாய் அடைப்பு (ejaculatory duct obstruction) என்று குறிப்பிடப்படுகிறது. தவிர விந்தணுக்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை அஸோஸ்பெர்மியா எனப்படும் விந்தணுவில் ஆக்டிவ் விந்துக்கள் இல்லாத நிலையும் கவலை அளிக்க கூடியது. பலவீனமான விந்தணுக்கள் மற்றும் விந்தணு கோளாறுகள் தவிர வெரிகோசெல், ஹார்மோன் கோளாறுகள், தீவிர மருத்துகள் உள்ளிட்டவையும் ஆண்களுக்கு மலட்டுதன்மை ஏற்பட காரணமாக இருக்கின்றன.

விந்து ஆரோக்கியம்:

ஆரோக்கியமான விந்தணுக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மில்லிலிட்டர் (mL) விந்துவில் சுமார் 15 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்டது. பெண்களை கருத்தரிக்க வைக்க தேவையான ஆண்களின் வளமான ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் விந்து ஆரோக்கியம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ஆரோக்கியமான விந்துக்கள் என்பவை வெளிவரும் அளவு மற்றும் அவற்றின் இயக்கம் போன்ற பல காரணிகளை சார்ந்துள்ளது.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட நினைக்கிறீர்களா..? இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவலாம்..!

ஒரே முறையில் பல மில்லியன் விந்தணுக்கள் வெளியேறுகிறது. மேலே குறிப்பிடப்படி வெளிவருவதில் மிகவும் பொதுவான எண்ணிக்கை 15 மில்லியன் முதல் 20 மில்லியன் வரை. ஆனால் வெளிவரும் விந்தணுக்களின் எண்ணிக்கை இதை மிக குறைவாக இருந்தால் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் குறையும். அளவு மட்டும் அல்ல, கருத்தரிப்பதற்கு விந்தணுக்கள் பெண் உடலுக்குள் செல்லும் வேகமும் முக்கியமானது. முட்டையை அடைய, விந்தணுக்கள் பெண் கருப்பை வாய் வழியாக வேகமாக நீந்த வேண்டும்.

ஆண்களில் கருவுறுதலை மேம்படுத்த உதவும் வழிகள்..

சமச்சீர் உணவு:

ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும், நோய் எதிர்ப்பு சக்தியிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது நாம் உண்ணும் உணவுகள். எனவே கருவுறுதல் விகிதத்தை அதிகரிக்க ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். வைட்டமின் சி, வைட்டமின் டி மற்றும் துத்தநாகம் நிறைந்த உணவுகளை சேர்க்கவும். ஏனெனில் அவை விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.

Guilt Free Food : இந்த உணவுகள் உண்மையிலேயே ஊட்டச்சத்து நிறைந்தவையா..? உஷாராக இருங்கள்...

உடற்பயிற்சிகள்:

கருவுறுவது உட்பட ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறப்பான வழிகளில் உடற்பயிற்சி முக்கியமான ஒன்று. தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் கருவுறுதலை மேம்படுத்த உதவும் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க செய்யலாம்.

புகை மற்றும் மது பழக்கங்களை நிறுத்த வேண்டும்:

மது மற்றும் புகைபழக்கத்தை தொடர்வது கருவுறுதல் தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதிகம் குடிப்பது டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைப்பதாகவும், ஆண்களுக்கு ஆண்மைக்குறைவை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

First published:

Tags: Fertility possibilities, Male infertility