முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பீரியட்ஸ் நாட்களில் சுத்தம் மட்டும் போதாது.. இதையும் கவனிப்பது அவசியம்..!

பீரியட்ஸ் நாட்களில் சுத்தம் மட்டும் போதாது.. இதையும் கவனிப்பது அவசியம்..!

மாதவிடாய்

மாதவிடாய்

இன்றும் மாதவிடாய் பற்றி பொதுவெளியில் பேசுவது தவறான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. அதனாலேயே இன்றும் அதன் மீதான விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. மாதவிடாய் நாட்களில் பின்பற்ற வேண்டிய சுகாதார விஷயங்கள் குறித்து பலருக்கும் தெரிவதில்லை என்கிறது பல ஆய்வுகள்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒவ்வொரு நாளும் மாற்றங்கள் அதிகரிப்பதும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் வளர்கிறது. ஆனால் சில பழமையான விஷயங்களின் மீதான கண்ணோட்டம் மட்டும் மாறாமல் அப்படியே இருக்கிறது. அந்த வகையில் இன்றும் மாதவிடாய் பற்றி பொதுவெளியில் பேசுவது தவறான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. அதனாலேயே இன்றும் அதன் மீதான விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. மாதவிடாய் நாட்களில் பின்பற்ற வேண்டிய சுகாதார விஷயங்கள் குறித்து பலருக்கும் தெரிவதில்லை என்கிறது பல ஆய்வுகள்.

மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு விஷயங்கள் பல முன்னெடுக்கப் பட்டு வருகிறது. அதில் கடைக்கோடி கிராமத்தில் உள்ள பெண்ணிற்கும் சானிடரி பேட் மலிவு விலையில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனால் பருத்தி துணி பயன்பாட்டால் ஏற்படும் தொற்றை தவிர்க்க முடியும் என கருதப்பட்டது. ஆனால் அதே சமயம் சானிடரி பேடுகளை தாண்டி கூடுதல் சுகாதார விழிப்புணர்வு தேவை என்கிறார் அத்வைதேஷா பிர்லா, செய்தித் தொடர்பாளர், உஜாஸ்.

பல இளம் பெண்களுக்கு இன்னும் சனிடர் நாப்கின்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது கூட தெரியவில்லை. அப்படி சரியான முறையில் பயன்படுத்தவில்லை எனில் அது பெண்களின் ஆரோக்கியத்தில் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தலாம். கிட்டத்தட்ட சானிடரி நாப்கின்களை பயன்படுத்தாமல் உண்டாகும் அதே தொற்று இதுபோன்ற விஷயங்களில் ஏற்படலாம். எனவே பெண்களுக்கு நாப்கின்களை எப்படி சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய கற்பித்தல் மிக மிக அவசியம். அவர்கள் மாதவிடாய் நாட்களை எந்தவித பயமுமின்றி எதிர்கொள்ள வேண்டும் என்கிறார் பிர்லா.
ஆய்வுகள் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை என்கிறது. பள்ளிகள், வேலை செய்யும் இடங்கள், கிராமப்புறங்கள் என எங்குமே சரியான வசதி இல்லை. அப்படியே இருந்தாலும் அவர்களுக்கென தனியான டாய்லெட் வசதி இருப்பதில்லை. அதிலும் சுத்தமாக இருப்பதில்லை. பல பள்ளிக்கூடங்களில் கதவுகளே இல்லாத டாய்லெட்டுகள்தான் இருக்கின்றன. இது எல்லாவற்றிற்கும் மேலாக தண்ணீர் வசதியும் கிடைப்பதில்லை. அதுவும் மாதவிடாய் நாட்களில் தண்ணீர் இல்லாத நிலை கொடுமையானது. எனவேதான் பல பெண் குழந்தைகள் மாதவிடாய் சமயத்தில் பள்ளிக்கு செல்வதை தவிர்க்கிறார்கள்.
மாதவிடாய் கற்பித்தலை பற்றி பேசும்போது கட்டாயம் அவர்களுடைய மனநல ஆரோக்கியம் குறித்தும் பேசுவது அவசியம். அந்த சமயத்தில் ஹார்மோனில் உண்டாகும் ஏற்ற இறக்கம் அதனால் உண்டாகும் மனநிலை மாற்றங்களை பற்றியும் பேச வேண்டியது அவசியம். அப்போதுதான் அவர்கள் மனதளவில் நடக்கும் மாற்றங்களையும் புரிந்துகொண்டு கையாள முடியும் என்கிறார் பிர்லா.
அதேபோல் பீரியட்ஸ் சமயத்தில் நாப்கின்கள் மட்டும் தீர்வு இல்லை. அதற்கு மாற்றாக மென்ஸ்ருவல் கப், பீரியட்ஸ் உள்ளாடைகள், டாம்போன்ஸ், வெஜைனா டிஸ்க் என பல விஷயங்கள் உள்ளன. அவை குறித்தும் பேச வேண்டியது அவசியம் என்கிறார் மோனிகா பின்ரா. இவர் லாய்காவின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர்.
அடுத்ததாக மாதவிடாய் நாட்களில் ஆரோக்கியத்தில் ஏற்படும் உபாதைகளை பற்றியும் பேச வேண்டியது அவசியம். அதாவது மாதவிடாய் நாட்களில் சோர்வு , வயிறு இறுக்கி பிடித்தல், வயிறு மந்தம், வயிற்றுப்போக்கு , காரணமேயின்றி சோகம், அழுகை, சந்தோஷம் போன்ற மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஏற்படும் இயல்பான விஷயங்களை பற்றியும் பேச வேண்டும்.
அதேபோல் உணவு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும், இரும்புச்சத்து நிறைந்த உணவு, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் புரோட்டீன், புரோபையோடிக் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் பீரியட்ஸின் போது உண்டாகும் அறிகுறிகளை தவிர்க்க முடியும். பின் தண்ணீர் நிறைந்த பழங்கள் சாப்பிட வேண்டும். குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு குடிக்க வேண்டும். இதனால் உடலின் நீரேற்றத்தை தக்க வைக்க முடியும். அதோடு யோகா, உடற்பயிற்சி போன்ற விஷயங்களையும் பின்பற்ற வேண்டியது அவசியம்.
சில பெண்கள் மாதவிடாய் சமயத்தில் ஈஸ்ட் தொற்றால் பாதிக்கப்படுவார்கள். இதை தவிர்க்க புரோபயோடிக் அதாவது புளித்த உணவுகளை சாப்பிட வேண்டும். அதோடு வெதுவெதுப்பான குளியல் உடலை லேசாக உணர வைக்கும். இரத்தப்போக்கு தடையில்லாமல் இருக்கும்.
இறுதியாக மாதவிடாய் மீதான கட்டுக்கதைகளை தகர்ப்பதும் அவசியம். மாதவிடாய் நாட்களில் பெண்களை ஒதுக்கி வைப்பது, சுத்தமில்லாதவள் என்று கூறுவது போன்ற பிற்போக்கு விஷயங்களை களைய வேண்டும். இதற்கு அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் , அவர்களை சுற்றியுள்ள சமூகத்திற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்கிறார் பிர்லா.
First published:

Tags: Menstrual time, Periods, Sanitary Napkin