ஒயின், பீர் மற்றும் ஹார்ட் லிக்கர் உள்ளிட்ட எத்தனால் கொண்ட அனைத்து மதுபான வகைகளும் கேன்சர் அபாயத்தை அதிகரிக்கின்றன. மேலும் அதிக மது பழக்கம் பல்வேறு தீவிர உடல்நல அபாயங்களுடன் தொடர்புடையது. ஆனால் மக்களுக்கு ஆல்கஹால் ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே இருக்கிறது.
மிதமான ஆல்கஹால் நுகர்வு உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று சிலர் நினைப்பதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. மது அருந்துவதால் மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் உட்பட 7 வகை புற்றுநோய்கள் ஏற்படும் அபாயங்கள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் புற்றுநோய் தடுப்பு நிபுணராக பணியாற்றி வரும் ஆன்ட்ரூ சீடன்பெர்க் ஆல்கஹால் தொடர்பான சமீபத்திய ஆய்வுக்கு தலைமை தாங்கினார். அமெரிக்கன் அசோசியேஷன் ஃபார் கேன்சர் ரிசர்ச் இதழான கேன்சர் எபிடெமியாலஜி, பயோமார்க்ஸ் & ப்ரிவென்ஷனில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வு பற்றி இவர் கூறுகையில் அமெரிக்காவில் புற்றுநோய்க்கான முக்கிய மாற்றியமைக்கக்கூடிய ஆபத்து காரணியாக (modifiable risk factor) ஆல்கஹால் உள்ளது. ஆனால் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு இது தெரியவில்லை. அமெரிக்காவில் உள்ள அனைத்து புற்றுநோய்களிலும் 6% மற்றும் அனைத்து புற்றுநோய் இறப்புகளில் 4% ஆல்கஹால் நுகர்வு இருக்கிறது. இப்படி புற்றுநோய் அபாயத்தின் உறுதியான சான்றுகள் இருந்த போதிலும் பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இந்த அபாயத்தை அறிந்திருக்கவில்லை என்றார். எனவே மது அருந்துதல் மற்றும் புற்றுநோய் ஆபத்து ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஆய்வு முடிவுகள் காட்டுவதாக ஆன்ட்ரூ சீடன்பெர்க் கூறி இருக்கிறார்.
Read More : அயோடின் குறைபாடு ஆண்களின் விந்தணு எண்ணிகையை குறைக்கிறதா..?
அமெரிக்காவின் புற்றுநோய் நிறுவனத்தின் நடத்தை ஆராய்ச்சி திட்டத்தின் இணை இயக்குனர் வில்லியம் கூறுகையில், ஒயின் உட்பட அனைத்து வகையான மதுபானங்களும் (alcoholic beverages) கேன்சர் அபாயத்தை அதிகரிக்கின்றன. மது அருந்துவதால் ஏற்படும் கேன்சர் அபாயங்கள் குறித்து மக்கள் மத்தியில் போதுமான விழுப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதற்கான அவசியம் இருப்பதை ஆய்வு அடிக்கோடிட்டு காட்டுகிறது என்றார்.
கேன்சருக்கான ஆபத்து காரணியாக மதுபானம் இருக்கிறது என்பது பற்றிய குறைந்த விழிப்புணர்வை வயதான நபர்களும் கூட வெளிப்படுத்தியுள்ளனர். ஆல்கஹால் கேன்சர் அபாயத்தை எவ்வாறு அதிகரிக்கிறது என்பது பற்றி மக்களுக்கு கற்பிப்பது அதிகப்படியான ஆல்கஹால் நுகர்வை குறைக்க, கேன்சர் இறப்பு மற்றும் பிற தீவிர உடல்நல கோளாறுகளால் ஏற்படும் இறப்பை குறைக்க பெரிதும் உதவும் என்றார் வில்லியம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.