ஆலியா பட்டின் ஃபிட்னஸ் ரகசியம் இதுதான்..!

ஆலியா பட்டின் ஃபிட்னஸ் ரகசியம் இதுதான்..!

ஷூட்டிங் ஸ்பாடிற்கும் இந்த உணவுதான் எடுத்துச் செல்வாராம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஆலியா பட் எப்போதாவது தன்னுடைய ஃபிட்னஸ் ரகசியங்கள் மற்றும் டையட் பற்றிய ரகசியங்களை ரசிகர்களுக்காக பகிர்ந்துகொள்வார். அப்படி சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் டையட் டிப்ஸ் பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் தனக்கு பிடித்த விருப்பமான இரண்டு உணவுகளை பகிர்ந்துள்ளார். அதில் பீட்ரூட் சாலட் விரும்பி சாப்பிடும் உணவு என்று கூறியுள்ளார். அதை எப்படி தயாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.



    அதில் பீட்ரூட்டை சீவி வேக வைத்துக்கொள்ள வேண்டும். பின் அதில் தயிர் சேர்த்து கலக்க வேண்டும். அடுத்ததாக கொஞ்சம் எண்ணெய், கருவேப்பிலை, சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து தாளித்து பீட்ரூட்டில் சேர்க்க வேண்டும். இது மிகவும் பிடித்த உணவு என்று பகிர்ந்துள்ளார். மேலும் ஷூட்டிங் ஸ்பார்ட் சென்றாலும் இந்த பீட்ரூட் சாலடைதான் கொண்டு செல்வாராம்.



    அடுத்ததாக சியா புட்டிங் ஊட்டச்சத்து நிறைந்த உணவு என்று குறிப்பிட்டுள்ளார். அதில் நார்ச்சத்து, புரோட்டீன், ஆண்டி ஆக்ஸிடண்ட், மெக்னீசியம் இப்படி பல ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியது. இதை காலை அல்லது மாலை உணவாக சாப்பிடுவாராம்.

    சியா விதைகளை வறுத்துக்கொண்டு அதில் தேங்காய் பால், புரோட்டீன் பவுடர் மற்றும் தேன் ஆகியவை கலந்து ஊற வைத்து சாப்பிடுவாராம். இவை தவிர தினசரி உடற்பயிற்சியும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.




    லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Published by:Sivaranjani E
    First published: