Home /News /lifestyle /

உப்பு அளவுக்கு குறைவாக சாப்பிட்டாலும் ஆபத்துதான்..! எவ்வாறு தெரியுமா..?

உப்பு அளவுக்கு குறைவாக சாப்பிட்டாலும் ஆபத்துதான்..! எவ்வாறு தெரியுமா..?

உப்பு

உப்பு

ரத்தத்தில் சோடியத்தின் அளவு மிக குறைவாக இருந்தால் உடலில் நீர் உடனுக்குடன் குறைந்து மூளையை பாதிக்கும்.

  • News18
  • Last Updated :
    இரத்த அழுத்தம் , சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க உப்பு, சர்க்கரையை அளவாக சாப்பிடுவாகள். சிலர் எதுக்கு வம்பு என உப்பு , சர்க்கரை சேர்த்துக்கொள்ளாமலே சாப்பிடுவார்கள். ஆனால் எப்படியானாலும் அளவுக்குக் குறைவாக சாப்பிட்டாலும் ஆபத்துதான் என்கின்றன ஆய்வுகள்.

    ஒருநாளைக்கு 2,300 மில்லி கிராமிற்கும் (5.8 கிராம்) குறைவான சோடியம்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என நேஷ்னல் அகாடமி ஆஃப் மெடிசின் கூறுகிறது. இந்த அளவுக்கும் மிகக் குறைவாக உப்பை உணவில் சேர்க்கிறீர்கள் எனில் அது இறப்பைக் கூட தரலாம் என்கிறது ஆய்வு.

    அதாவது இதயத்திற்கு போதுமான ரத்த ஓட்டம் இல்லை எனில் அது செயல்பட சிரமப்படும். இதனால் இதயம் செயலிழத்தலாகி இறப்பை சந்திப்பீர்கள் என நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் வெளியிட்டுள்ள ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.



    மேலும் உயர் ரத்த அழுத்தம் உண்டாகும். டைப் 2 நீரிழிவு நோய் உண்டாகும் என 152 பேருக்கு குறைந்த சோடியம் கொடுத்து 7 நாட்கள் கண்காணிக்கப்பட்டு இந்த தகவலைக் கண்டறிந்துள்ளது. இதனால், பக்கவாதம் வரும் வாய்ப்புகளும் அதிகம்.

    கூடுதலாக ரத்தத்தில் சோடியத்தின் அளவு மிக குறைவாக இருந்தால் உடலில் நீர் உடனுக்குடன் குறைந்து மூளையை பாதிக்கும். அதாவது மூளை வீக்கமடைந்து தலைவலி, கோமா ஏன் இறப்பைக் கூட சந்திக்கலாம். இது வயது முதியவர்களையே கடுமையாக தாக்கும் என்கிறது. இதை ஈடுகட்ட என்னதான் அதிக அளவில் தண்ணீர் குடித்தாலும் அதை சீரமைக்கும் சோடியம் இல்லையெனில் பலனில்லை என்கிறது ஆய்வு.

    நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் இல்லாதவர்களும் இனிமேல் வந்துவிடக் கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்வார்கள். இனியும் அப்படி இல்லாமல் சுவைக்கு ஏற்ப சரியான அளவில் உப்பு சேர்த்து சாப்பிடுங்கள். அது உணவுக்கு மட்டும் சுவையல்ல உடலுக்கும் ஆரோக்கியம் என்பதை மறவாதீர்கள்.

     
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி