முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உயிருக்கே ஆபத்தாகும் கார்டியோமயோபதி நோய்... மது பழக்கத்தை கை விட எச்சரிக்கும் மருத்துவர்..!

உயிருக்கே ஆபத்தாகும் கார்டியோமயோபதி நோய்... மது பழக்கத்தை கை விட எச்சரிக்கும் மருத்துவர்..!

உயிருக்கே ஆபத்தாகும் கார்டியோமயோபதி நோய்

உயிருக்கே ஆபத்தாகும் கார்டியோமயோபதி நோய்

கார்டியோமயோபதி என்றால் இதயத்தின் சதைகளுக்கு வர கூடிய பிரச்சனை. இந்நிலையில் உயிரிழப்பை கூட உண்டு செய்து விடும் அளவுக்கு அபாயத்தை உண்டு செய்துவிடும்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிலர் அதிகமாக குடிப்பது நம் இதயத்திற்கும் நல்லது என்று நம்புகிறார்கள். ஆனால் மது அருந்துவது உடலுக்கு நல்லதை ஏற்படுத்துவதை விட அதிக தீங்கு விளைவிக்கிறது. அதிகப்படியான குடிப்பழக்கம் இதயத்திற்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. அதிகப்படியான ஆல்கஹால் எடுத்துக்கொள்வது கார்டியோமயோபதி ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கலாம் என பெங்களூரு ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனையின், இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்டும், மூத்த ஆலோசகருமான திரு. டாக்டர் டி. பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

ஆல்கஹால் கார்டியோமயோபதி என்றால் என்ன?

கார்டியோமயோபதி என்றால் இதயத்தின் சதைகளுக்கு வர கூடிய பிரச்சனை. இந்நிலையில் உயிரிழப்பை கூட உண்டு செய்து விடும் அளவுக்கு அபாயத்தை உண்டு செய்துவிடும். அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது பெரும்பாலும் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இது இதய தசைகளை பலவீனப்படுத்துகிறது. இதயம் இரத்தத்தை சீராக பம்ப் செய்வதை கடினமாக்குகிறது. இது இதய தசைகளின் செயல்பாட்டை பாதிக்கும். இந்த உயர் இரத்த அழுத்தத்திற்கு நீண்ட காலமாக சிகிச்சையளிக்கப்படாமல் இருந்தால், அது இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும்.

இந்த நிலை பொதுவாக 35 முதல் 50 வயதிற்குட்பட்டவர்களிடையே கண்டறியப்படுவதாகவும், பெண்களை விட ஆண்களுக்கு இந்த நோய் வர அதிக வாய்ப்புள்ளதாக டாக்டர் டி .பிரதீப் குமார் கூறுகிறார். மேலும் 5 முதல் 15 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாக மது அருந்துபவர்களுக்கு ஆல்கஹால் கார்டியோமயோபதி ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக கூறும் அவர், வாரத்திற்கு 14 முறை அல்லது ஒரு நாளைக்கு 4 முறை மது அருந்தும் ஆண்களுக்கு கார்டியோமயோபதி நோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறும் டாக்டர் பிரதீப், நாள் ஒன்றுக்கு மூன்று முறையும் அல்லது வாரத்திற்கு ஏழு முறை மது அருந்தும் பெண்களுக்கு ஆல்கஹால் கார்டியோமயோபதி ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறுகிறார்.

ஆல்கஹாலிக் கார்டியோமயோபதி அறிகுறிகள் என்ன?

ஆல்கஹாலிக் கார்டியோமயோபதி முற்றிய நிலைக்கு வரும் வரை எந்த அறிகுறிகளையும் காட்டாது. இருப்பினும், பின்வரும் அறிகுறிகள் அவர்களுக்கு ஏற்படலாம்.

*அதிக சோர்வு ஏற்படலாம்.

* வேலை செய்யும் போது போது மூச்சுத் திணறல் ஏற்படுதல்

* கால்கள், பாதங்கள் மற்றும் கணுக்காலில் வீக்கம் உண்டாகலாம்.

* சிறுநீரில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படும்

* பசியின்மை

* கவனம் செலுத்துவதில் சிரமம் அடைதல்

* பலவீனம், தலைசுற்றல், மயக்கம் மற்றும் தலைச்சுற்றல்

* இதயம் விரைவாக துடிப்பது

* இருமலின் போது இளஞ்சிவப்பு சளி வெளியேறுவது, படுத்திருக்கும் போது இருமல்

* வயிறு உப்புசம்

* நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்படுதல் போன்றவை ஆல்கஹாலிக் கார்டியோமயோபதி அறிகுறிகள் ஆகும்.

கார்டியோமயோபதி ஏற்பட காரணங்கள் என்ன?

* மரபணுவின் நிலைமைகள்

* அதிகரிக்கும் இதய துடிப்பு, நீண்ட கால இரத்த அழுத்த நோய்

* இதய வால்வுகளில் பிரச்சனைகள்

* இதய திசுக்களில் ஏற்படும் பாதிப்பு

* அதிக மதுப்பழக்கம், போதைப்பொருள் பயன்பாடு

* உடல் பருமன், தைராய்டு

கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்கள்

கார்டியோமயோபதி ஏற்படும் காரணங்கள் பெரும்பாலும் அறியப்படவில்லை, ஆனால் மேற்கண்ட சந்தர்ப்பங்களில், கார்டியோமயோபதியை ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான காரணிகளை மருத்துவர்கள் அடையாளம் காண முடியும்.

கார்டியோமயோபதி நோயை மருத்துவர்கள் எவ்வாறு கண்டறிகின்றனர்?

நீங்கள் கார்டியோமயோபதியால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்பதைக் கண்டறிய மருத்துவர்கள் பின்வரும் சோதனைகளை மேற்கொள்வார்கள். இதயத்தில் உள்ள தசை விரிவாக்கத்தைக் கண்டறிய மார்பு எக்ஸ்ரே பரிசோதனை.

இதய வால்வுகளின் செயல்பாட்டை பகுப்பாய்வு செய்ய எக்கோ கார்டியோகிராம். இது உதவவில்லை என்றால், மருத்துவர் கார்டியாக் மேக்னடிக் ரெசோனன்ஸ் இமேஜிங் (எம்ஆர்ஐ) செய்யவும் முடியும்.

Also Read : மலம் கழிக்கும் போது எரிச்சலாக இருக்கிறதா..? உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கலாம்..!

இதயத்தில் ஏதேனும் அடைப்புகள், இதயத் துடிப்பில் ஏற்படும் அசாதாரணங்களைக் கண்டறிய எலக்ட்ரோ கார்டியோகிராம் (ECG) செய்ய முடியும்.

உடற்பயிற்சி அசாதாரண இதய தாளத்தை மோசமாக்குகிறதா என்பதை சரிபார்க்க டிரெட்மில் அழுத்த சோதனை யும் செய்யப்படுகிறது.

இதயம் உடலில் உள்ள இரத்தத்தை வலுக்கட்டாயமாக பம்ப் செய்கிறதா என்பதை பரிசோதிக்க Cardiac Catheterization செய்யப்படுகிறது.

இதயம் மற்றும் அதன் வால்வுகளின் அளவு மற்றும் செயல்பாட்டை மதிப்பிடுவதற்கு CT ஸ்கேன் செய்யப்படுகிறது.

உடலில் உள்ள இரும்பு அளவை மதிப்பிடுவதற்கும் தைராய்டு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாட்டை சரிபார்க்கவும் இரத்த பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

இந்த நோய் பிறவியிலேயே உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும், பெற்றோர்கள் மற்றும் உடன்பிறப்புகளுக்கு இந்த நிலை பரம்பரையாக உள்ளதா என்பதையும் சரிபார்க்க மருத்துவர்கள் மரபணு பரிசோதனையையும் செய்கிறார்கள்.

கார்டியோமயோபதி சிகிச்சைகள் என்னென்ன?

கார்டியோமயோபதிக்கான சிகிச்சை அந்த நோயின் வகை மற்றும் அதன் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதய செயல்பாட்டை மேம்படுத்த மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைப்பதன் மூலம் சிகிச்சை அளிக்கலாம். இருப்பினும், நிலமை மோசமாகிவிட்டால், அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கலாம்.

கார்டியோமயோபதியை கட்டுப்பாட்டுடன் வைக்க மருத்துவர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகளை பரிந்துரைக்கலாம். மேலும் உயர் இரத்த அழுத்த அளவுகளில் கவனமாக இருக்கவும் உணவில் உப்பு சேர்த்துக்கொள்வது, உடல் எடை ஆகியவற்றில் கவனமுடன் இருக்க பரிந்துரைக்கலாம்.

Also Read : உங்க தொப்பையை குறைக்க தினமும் 1 நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும்..!

ஒருவேளை கார்டியோமயோபதி தீவிரம் அடையும் பட்சத்தில் மருத்துவர் வென்ட்ரிகுலர் அசிஸ்ட் டிவைசஸ் (VADs) அல்லது இதய மாற்று அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கலாம்.

ஆல்கஹால் கார்டியோமயோபதி வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

* மதுவை முழுமையாக விலக்குவதை விட்டு மெல்ல மெல்ல கட்டுப்படுத்தவும்.

* சோடியம் உட்கொள்ளலைக் குறைக்கவும்

* போதுமான உடற்பயிற்சி செய்யுங்கள்

* உங்களுக்கு இதய நோய் இருந்தால் கடுமையான உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டும்

* புகைபிடிப்பதைத் தவிர்க்கவும்

* சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கலாம்

மது அருந்துவதை கட்டுப்படுத்தி, ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் யோகா போன்ற பல்வேறு மாற்று வழிகளை கண்டறிவது சால சிறந்ததாகும்.

First published:

Tags: Alcohol consumption, Heart disease, Heart health