Home /News /lifestyle /

இளைஞர்களிடம் ஆல்கஹால் பழக்கம் அதிகரிப்பு ரத்த நாளங்களின் விறைப்புக்கு வழிவகுக்கும்: ஆய்வில் தகவல்!

இளைஞர்களிடம் ஆல்கஹால் பழக்கம் அதிகரிப்பு ரத்த நாளங்களின் விறைப்புக்கு வழிவகுக்கும்: ஆய்வில் தகவல்!

மது பழக்கம்

மது பழக்கம்

இளம் வயதினரில் அதிகரித்த மது பழக்கம், முதியவரில் ஏற்படும் பிரச்சனையை மிக விரைவாக கொண்டு வருகிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
இளமை வயதிலேயே மது அருந்துவது இதய துடிப்பு நோய்க்கு காரணமாக உள்ள துரிதப்படுத்தப்பட்ட தமனி விறைப்பு பிரச்சனையை ஏற்படுத்தும் என்று ஐரோப்பிய இருதயவியல் சங்கத்தின் புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து யுனிவர்சிட்டி கல்லூரியின் மருத்துவ மாணவரும் ஆய்வு ஆசிரியருமான ஹ்யூகோ வால்ஃபோர்ட் என்பவர் கூறியதாவது, "இளமை பருவத்தில் அதிகரித்த ஆல்கஹால் பழக்கம் ரத்த நாளங்கங்களின் முதுமையை அதிகரிக்கும் என்பதற்கான சில சான்றுகள் எங்களிடம் உள்ளன. அதாவது நீங்கள் எவ்வளவு அதிகமாக குடிக்கிறீர்களோ, அவ்வளவு தமனி விறைப்பு அதிகரிக்கும். இருப்பினும், இருதய நோய்க்கான பிற முன்கணிப்பு காரணிகளால் இந்த உறவு விளக்கப்படவில்லை. இதன் மூலம் இளமை காலகட்டத்தில் ஆபத்தான நடத்தை வாஸ்குலர் ஆரோக்கியத்தில் நேரடி விளைவைக் ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது" என்று கூறியுள்ளார்.

ஒருவருக்கு வயதாகும்போது, ​​அவர்களின் தமனிகள் இயற்கையாகவே விறைப்பு தன்மை கொண்டதாகவும் குறைவான நெகிழ்ச்சியுடையதாகவும் மாறும். இதுபோன்ற கடுமையான தமனிகள் இதய நோய் மற்றும் பக்கவாதத்தின் அதிக ஆபத்துடன் தொடர்புடையவை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதவிர வேறு சில நடத்தைகள் கூட தமனி விறைப்பை துரிதப்படுத்தலாம். உதாரணமாக, புகையிலை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவை இளம் வயதினரின் கடுமையான தமனிகளுடன் தொடர்புடையவை என்று முந்தைய ஆராய்ச்சி ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அதன்படி, இளம் வயதினரில் அதிகரித்த மது பழக்கம், முதியவரில் ஏற்படும் பிரச்சனையை மிக விரைவாக கொண்டு வருகிறது. புகைப்பிடித்தல் மற்றும் ஆல்கஹாலின் ஆரம்ப மற்றும் அதிகப்படியான பயன்பாட்டிற்கு இளமைப் பருவம் ஒரு முக்கியமான காலகட்டமாக இருப்பதால், இந்த ஆய்வு 17 மற்றும் 24 வயதிற்கு இடைப்பட்ட இளம் மக்களிடையே தமனி விறைப்பில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அவர்களின் மது பழக்கங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.

பெற்றோர் மற்றும் குழந்தைகளின் ஏவன் லாங்கிட்டியூடினல் ஆய்விற்காக (ALSPAC) 17 முதல் 24 வயதுடைய 1,655 பேர் உட்படுத்தப்பட்டனர். இந்த வயதினரிடையே ஆல்கஹால் மற்றும் புகைப்பிடித்தல் பழக்கம் அளவிடப்பட்டது. இந்த இரண்டு அளவுகளும் இறுதியில் ஒப்பிடப்பட்டன. ஆல்கஹாலின் பயன்பாடு, நடுத்தர (4 பானங்கள் அல்லது அதற்கும் குறைவாக), மற்றும் உயர் (வழக்கமான நாளில் 5-க்கும் மேற்பட்ட பானங்கள்) பழக்கம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல புகைபிடித்தல் பழக்கம், நடுத்தரம் - அதாவது ஒரு நாளைக்கு 10-க்கும் குறைவான சிகரெட்டுகள், மற்றும் அதிகம்- அதாவது தினமும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட சிகரெட்டுகளை பிடிப்பவர்கள் என்ற அளவுகளில் வகைப்படுத்தப்பட்டது. இதையடுத்து, ஆய்வில் பங்கேற்ற 17 முதல் 24 வயதுடையவரிடையே தமனி விறைப்பு தன்மை, கரோடிட்-ஃபெமரல் பல்ஸ் அலை வேகம் எனப்படும் ஆக்கிரமிப்பு அல்லாத நுட்பத்தைப் பயன்படுத்தி மதிப்பிடப்பட்டது. இது எதிர்கால இருதய நோயின் வலுவான மற்றும் சுயாதீனமான கணிப்பாகும். 

இறுதியாக 17 முதல் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களில் புகைபிடித்தல், குடிப்பழக்கம் மற்றும் தமனி விறைப்பு மாற்றங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளை ஆய்வு செய்தனர். வயது, பாலினம் மற்றும் சமூக பொருளாதார நிலை ஆகியவற்றுடன் பகுப்பாய்வு சரிசெய்யப்பட்டது. மேலும் 24 வயதினரிடையே உடல் நிறை குறியீட்டெண், இரத்த அழுத்தம், குறைந்த -அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL) கொலஸ்ட்ரால், இரத்த குளுக்கோஸ் மற்றும் C- எதிர்வினை புரதம் (அழற்சியின் அளவீடு) ஆகியவையும் கணக்கிடபட்டன.

அதன்படி 17 முதல் 24 வயதிற்குட்பட்ட பங்கேற்பாளர்களில், 7%-த்தினரிடையே ஆல்கஹால் பழக்கம் சுத்தமாக இல்லை, 52%-தினரில் நடுத்தர நுகர்வு மற்றும் 41 சதவிகிதத்தினரிடையே அதிக ஆல்கஹால் நுகர்வு பழக்கம் இருந்தது. அந்த நேரத்தில் பங்கேற்பாளர்களில் புகைப்பிடித்தல் பழக்கம் இல்லாத, கடந்த கால பயன்பாடு, நடுத்தர பழக்கம் மற்றும் அதிகரித்த பழக்கம் முறையே 37 சதவீதம், 35 சதவீதம், 23 சதவீதம் மற்றும் 5 சதவிகிதமாக இருந்தது.

கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!

மேலும், அவர்களில் தமனி விறைப்பு சராசரியாக 10.3 சதவிகிதம் அதிகரித்திருந்தது. ஆண்களை விட பெண்களில் சற்று அதிக விறைப்பு தன்மை காணப்பட்டது. சராசரி ஆல்கஹால் மதிப்பெண்ணில் ஒவ்வொரு புள்ளியும் உயரும்போது தமனி விறைப்பு அதிகரித்தது. அதுவே, சராசரி புகைப்பிடிக்கும் மதிப்பெண்ணுடன் தமனி விறைப்பில் எந்த கிரேடட் அதிகரிப்பும் காணப்படவில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், தீவிர புகைப்பழக்கம் கொண்ட ஆண்கள், புகைப்பிடிக்கும் பழக்கம் ஒருபோதும் இல்லாதவர்களை விட தமனி விறைப்பில் அதிக அதிகரிப்பைக் கொண்டிருந்தனர். இது பெண்களில் புள்ளிவிவர முக்கியத்துவத்தை மட்டுமே கொண்டிருந்தது. அதுவே, கடந்த கால புகைப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் இல்லாத 17 முதல் 24 வயதிற்குட்பட்ட பங்கேற்பாளர்களில் கணக்கிடப்பட்ட தமனி விறைப்பு தன்மையில் எந்த மாற்றங்களும் நிகழவில்லை.இதுகுறித்து வால்ஃபோர்ட் கூறுகையில், "புகைப்பழக்கம் கொண்ட இளம் வயதினர் மற்றும் அதிக புகைப்பழக்கம் கொண்ட இளம் பெண்களில் தமனி சேதம் ஏற்படுவதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேபோல புகைப்பழக்கம் அல்லாதவர்கள் மற்றும் கடந்த காலத்தில் புகைப்பழக்கம் கொண்டிருந்தவர்களில் தமனி விறைப்பு ஒரே மாதிரியான மாற்றங்கள் நிகழ்ந்தன. இது இளம் வயதிலேயே புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதால் வாஸ்குலர் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க முடியும் என்பதைக் குறிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல அதிகப்படியான குடிப்பழக்கம் பெரும்பாலும் மாணவர்களுக்கு ஒரு சாதாரண அனுபவமாகும். மேலும் இங்கிலாந்தில் இ-சிகரெட் பயன்பாட்டின் கூர்மையான உயர்வால் புகைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் சவாலாக உள்ளது. குடிப்பழக்கம் மற்றும் புகைபிடித்தல் நீண்டகால சேதத்தை ஏற்படுத்தாது என்று இளைஞர்கள் நம்பலாம். எவ்வாறாயினும், இந்த நடத்தைகள் இளம் வயதினரை ஆரம்ப தமனி விறைப்புடன் தொடங்கி அவர்களை இறுதி வாழ்க்கைப் பாதைக்கு கொண்டு செல்லக்கூடும் என்பதைக் குறிக்கிறது. இது இறுதியில் இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும் என்று வால்ஃபோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Alcohol consumption, Youngster

அடுத்த செய்தி