பெண்களை மிகவும் அதிகமாக பாதிக்கக் கூடிய புற்றுநோய் வகைகளில் மார்பக புற்றுநோய் முதன்மையான இடத்தில் இருக்கிறது. ஆண்களையும் மார்பக புற்றுநோய் பாதிக்கும் என்றாலும் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான அளவே ஆண்கள் பாதிக்கப்படுகின்றனர். மார்பக புற்று நோயை பொறுத்தவரை ஆரம்ப காலத்திலேயே கண்டறிவது நோயிலிருந்து முழுமையாக நிவாரணம் பெற உதவுகிறது. ஆனால் மார்பக புற்றுநோய் பற்றி எந்த அளவுக்கு விழிப்புணர்வு இருக்கிறது என்பது இப்போது வரை கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், கடந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி 23 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 7,00,000 பெண்கள் இறந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மார்பக புற்றுநோய் பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டால் மட்டுமே இந்த நோய்க்கு இரையாகாமல் இருக்க முடியும். பெண்களை தாக்கும் மார்பக புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது மற்றும் புற்று நோய் பாதிப்பை அதிகரிக்கும் காரணங்கள் என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
புற்று நோய் ஏற்படும் காரணங்கள் என்ன
புற்றுநோய் என்பது தொற்றால் பரவக்கூடியது மற்றும் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு பரவக்கூடிய நோய். வைரல் தொற்று அல்லது பாக்டீரியா தொற்று அல்லது பூஞ்சை தொற்று எந்த எந்தவிதமான தொற்றும் புற்றுநோயை ஏற்படுத்தாது.
புற்று நோய்க்கான முக்கியமான காரணங்களைப் பொறுத்தவரை பெண்களின் வயது குடும்பத்தில் ஏற்கனவே புற்றுநோய் பாதிப்பு இருக்கிறதா என்ற குடும்ப வரலாறு மற்றும் ரேடியேஷன் பாதிப்பு ஆகியவை முதன்மையான காரணங்களாக இருக்கிறது. அதுமட்டுமின்றி ஒருசில பெண்கள் வேறு சில உடல் நலக் குறைபாடு காரணங்களுக்காக ஹார்மோன் தெரப்பி எடுத்துக்கொண்டிருந்தால் அதுவும் புற்றுநோயை ஏற்படுத்தலாம்.
40 வயதை கடந்த பெண்களுக்கான உணவுப் பட்டியல் : ஆரோக்கியத்திற்கு இதை கடைபிடியுங்கள்
மேற்கூறிய காரணங்களை தவிர்த்து மார்பகங்களின் அடர்த்தி புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய காரணியாக இருக்கிறது. ஒரு சில பெண்களுக்கு பரம்பரை ரீதியாக மார்பகங்களில் குறைவான கொழுப்பும் அதிகமான கிளாண்டு திசுக்களும் இருந்தால், அது புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும். இதனால் தான் கனமான மார்பகமுள்ள பெண்கள் அதிகமாக மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்தைச் சந்திக்கிறார்கள்.
மார்பகப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் காரணிகள்
மேற்கூறிய இந்த காரணங்களை பெரும்பாலும் தவிர்க்க முடியாது என்றாலும் வேறு சில காரணங்களும் புற்றுநோய் ஏற்படக்கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது. உதாரணமாக உடல் பருமன், உடல் உழைப்பு என்பதே இல்லாமல் இருப்பது, வைட்டமின் டி சத்து குறைவாக இருப்பது மற்றும் மது அருந்துவது ஆகிய நான்கு காரணங்களும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கின்றன.
- 18 வயதுக்கு மேல் முதல் 10 முதல் 20 கிலோ எடை கூடும் பெண்களுக்கு அவர்கள் மெனோபாஸ் காலத்தில் புற்றுநோய் உண்டாகும் ஆபத்து 40% வரை அதிகமாக இருக்கிறது.
- உடல் உழைப்பு ஏதும் இல்லாமல் நாள் முழுவதும் அமர்ந்து, வேலை செய்பவர்கள் அல்லது சோம்பேறித்தனமாக இருப்பவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகமாக இருக்கிறது இந்த அபாயத்தை 30% வரை குறைக்க வேண்டுமானால் நாள் முழுவதும் நடை பயிற்சி செய்து உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டாலே போதும்.
- அதிகமாக மது அருந்தும் பழக்கம் அல்லது குறிப்பிட்ட இடைவெளிகளில் மதுவருந்தும் பழக்கம் கொண்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்து கணிசமாக உள்ளது.
- வைட்டமின் டி குறைபாடு பெண்களின் உடலில் பல்வேறு நோய்கள் உருவாக முக்கிய காரணமாக இருக்கிறது, அதில் மார்பக புற்றுநோயும் அடங்கும். வைட்டமின் டி குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொண்டால் மார்பக புற்றுநோயின் ஆபத்தை 50% வரை குறைக்கும்.
மார்பகப் புற்று நோய் அறிகுறிகள் என்ன..?
பொதுவாகவே இரண்டு மார்பகங்களும் ஒரே மாதிரியாக தோற்றம் அளிக்காது என்றாலும் ஒரு மார்பகத்தில் மிகவும் தெளிவாக, அளவு தோற்றம், நிறம், அல்லது மார்பு காம்புகள் உட்பக்கமாக வளைந்திருப்பது உள்ளிட்ட மாற்றங்கள் காணப்பட்டால் அது புற்று நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். இதை தவிர்த்து மார்பகத்தில் வழியில கட்டி அல்லது காம்புகளில் இருந்து பால் போன்ற திரவம் வடிவது ஆகியவையும் இதன் அறிகுறிகளாகும்.
தினமும் உடற்பயிற்சி செய்வதால் பாலியல் ஆரோக்கியம் மேம்படுமா.? தெரிந்து கொள்ளுங்கள்
ஏதேனும் சிறிய அளவில் மாற்றங்கள் தென்பட்டாலும் அல்லது சந்தேகம் இருந்தாலும், உடனடியாக மருத்துவரை அணுகி சரியான ஆலோசனையை பெற்றுக் கொள்வது மிகவும் அவசியமாகும். இதனால் புற்றுநோய் தீவிரமாவதை தடுப்பதோடு மட்டுமல்லாமல் ஆரம்ப தொடக்கத்திலேயே சிகிச்சை பெறுவது புற்று நோயில் இருந்து முழுவதுமாக நிவாரணம் பெறலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.