ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

காற்று மாசுபாட்டால் நுரையீரல் புற்றுநோய் ஆபத்து : யாரெல்லாம் பாதுகாப்பாக இருக்கனும்..?

காற்று மாசுபாட்டால் நுரையீரல் புற்றுநோய் ஆபத்து : யாரெல்லாம் பாதுகாப்பாக இருக்கனும்..?

காற்று மாசுபாடு - நுரையீரல்

காற்று மாசுபாடு - நுரையீரல்

காற்று மாசிலிரிந்து பாதுகாக்க மரக்கட்டைகள் மற்றும் நிலக்கரியை எரித்து சமையல் செய்வதை நிறுத்த வேண்டும். புகைப்பிடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் அப்படியே புகைபிடிக்க வேண்டும் என்றாலும் வீட்டிற்கு வெளியே சென்று புகை பிடிக்க வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு புகைப்பிடித்தல் என்பது மிக முக்கியமான காரணமாக இருந்து வருகிறது. ஆனால் சமீபத்திய காலங்களில் புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் நுரையீரல் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் இதற்கு காரணம் என்னவென்று ஆராய்ந்த போது, அவர்கள் சுவாசிக்கும் காற்றானது மிகவும் மாசுபட்டு இருப்பதால், அந்த சூழலில் வசிக்கும் நபர்களின் நுரையீரல் இயற்கையாகவே பாதிப்பு அதிகமாக இருப்பதும் அவர்களில் சிலருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காற்று மாசுபாட்டால் எவ்வாறு நுரையீரல் புற்றுநோய் உண்டாகிறது?

நாம் சுவாசிக்கும் போது மாசுபட்ட காற்றில் உள்ள நுண்துகள்கள் நம்முடைய நுரையீரலை சென்றடைகின்றன. பின்னர் அவை நுரையீரலில் தங்கி அங்கு சேதங்களை விளைவிக்க ஆரம்பிக்கின்றன. ஆரம்பத்தில் இதைப் பற்றி எந்த அறிகுறிகளும் இல்லாமல் போனாலும் நீண்ட காலங்களுக்கு அவை நுரையிலேயே தங்கும் போது அதிக சேதத்தை நுரையீரலுக்கு ஏற்படுத்தி நுரையீரல் புற்றுநோயை உண்டாக்குகிறது.

உட்புறம் மற்றும் வெளிப்புற மாசுகளாலும் புற்றுநோய் உண்டாகும்:

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி மாசுபட்ட காற்றில் உள்ள நுண் துகள்களின் மூலமே புற்றுநோய் உண்டாகிறது. இவை திறந்தவெளிகளில் இருக்கும் மாசுபட்ட காற்றினால் தான் ஏற்படுகிறது என்று இல்லாமல் வீட்டிற்குள்ளேயே மாசுபட்ட காற்றை சுவாசிக்கும் படி நேர்ந்தாலும் புற்றுநோய் உண்டாகுவதற்கு வாய்ப்பை அதிகரிக்கிறது.

வெளிப்புற காற்று மாசுபாட்டிற்கு உதாரணம்:

வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் புகை

காட்டு தீயால் உண்டாகும் மாசு கலந்த நுண் துகள்கள் எரிபொருட்களை எரிப்பதால் உண்டாகும் கார்பன் மோனாக்சைடு ஆகியவை வெளிப்புற காற்று மாசுபாட்டிற்கு ஒரு உதாரணம் ஆகும்.

உட்புறக் காற்று மாசுபாட்டிற்கு உதாரணம்:

*முன்னர் காலங்களில் பயன்படுத்தப்பட்ட விறகு மற்றும் நிலக்கரி அடுப்புகளை சமையலுக்கு பயன்படுத்துவது

* கெரோஸின் நிலக்கரி போன்றவற்றை எரிபொருளாக சமையலுக்கு பயன்படுத்துவது

* கார்பன் மோனாக்சைடு

* புகை பிடிப்பதால் உண்டாகும் புகை

இவை உட்புற காற்று மாசுபாட்டிற்கு உதாரணம் ஆகும்.

யாருக்கெல்லாம் நுரையீரல் புற்றுநோய் உண்டாகும் அபாயம் உள்ளது?

அதிக போக்குவரத்து நெரிசல் உடைய பகுதிகளில் வாழும் மக்களுக்கும், தூசுக்கள் மற்றும் மாசுக்கள் நிறைந்த சூழலில் அதிக நேரம் இருப்பவர்களுக்கும் அடிக்கடி புகைப்பிடிப்பவர்களுக்கும், மேலும் தன் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு நுரையீரல் புற்று நோய் இருந்தால் அவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் உண்டாகும் அபாயம் அதிகம் உள்ளது.

Also Read : குளிர்காலத்தில் உங்கள் நுரையீரல் ஆரோக்கியம் கெடாமல் இருக்க சில ஆயுர்வேத முறைகள்!

காற்று மாசுபாட்டில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?

மரக்கட்டைகள் மற்றும் நிலக்கரியை எரித்து சமையல் செய்வதை நிறுத்த வேண்டும். புகைப்பிடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் அப்படியே புகைபிடிக்க வேண்டும் என்றாலும் வீட்டிற்கு வெளியே சென்று புகை பிடிக்க வேண்டும். அதிக அளவு காற்று மாசுபட்டிருந்தால் வெளியே செல்வதை முடிந்த அளவு தவிர்க்கலாம். நடைபயிற்சி செல்பவர்கள் போக்குவரத்து நெரிசல் குறைந்த நேரங்களில் வாக்கிங் செல்லலாம். டீசல் இன்ஜின்களில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

First published:

Tags: Air pollution, Lungs Cancer, Lungs health