ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கண்களை பாதிக்கும் காற்று மாசுபாடுகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி? நிபுணரின் டிப்ஸ்!

கண்களை பாதிக்கும் காற்று மாசுபாடுகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி? நிபுணரின் டிப்ஸ்!

கண்களை பாதிக்கும் காற்று மாசுபாடு.!

கண்களை பாதிக்கும் காற்று மாசுபாடு.!

கண்ணில் எதாவது விழுந்து விட்டது போல உணர்ந்தாலோ அல்லது அசௌகரியம் ஏற்பட்டாலோ உடனே கைகளை கொண்டு தேய்க்காதீர்கள். அப்படி செய்வதால் கண்கள் எளிதில் வறண்டு போகிறது மற்றும் பார்வை மங்கலாகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிக அளவு காற்று மாசு நம் ஆரோக்கியத்தில் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. சுவாச தொற்று, நுரையீரல் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய் அபாயத்தையும் கூட அதிகரிக்கிறது. நமக்கு பெரும் ஆரோக்கிய பாதிப்பை ஏற்படுத்தும் காற்று மாசுபாடு குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. இதற்கிடையே பல நகரங்களில் காணப்படும் காற்று மாசுபாடு வயது வித்தியாசம் இன்றி பலருக்கும் கண் அலர்ஜி மற்றும் வெண்படல அழற்சி எனப்படும் கான்ஜுன்க்டிவிடிஸ் அதிகரிக்க முக்கிய காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

வெளிப்புறங்களில் காணப்படும் சுற்றுசூழல் மாசுபாடு மட்டுமின்றி மரக்கட்டைகளை எரிப்பது, வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை உள்ளிட்ட பல உட்புற மாசுபாடுகள் காரணமாகவும் கிளௌகோமா, கண்புரை மற்றும் வயது தொடர்பான மாகுலர் சிதைவு (AMD) போன்ற பல கண் நோய்கள் ஏற்படுகிறது. ஜெய்ப்பூர் சங்கரா கண் மருத்துவமனையில் பணியாற்றும் பிரபல கண்மருத்துவர் நீரஜ் ஷா பேசுகையில், ஜெய்ப்பூர் உள்ளிட்டபல நகரங்களை புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் மக்கள் முன்னெப்போதையும் விட இந்த நேரத்தில் கண்களை அதிகம் கவனித்து கொள்ள வேண்டும் என்றார்.

குறிப்பாக புகை மூட்டம் நம் கண்களை பலவகையிலும் பாதிக்கிறது. மாசுபாட்டின் காரணமாக கண்கள் வறண்டு போவது, வெண்படல அழற்சி மற்றும் கண் அலர்ஜி, அரிப்பு, அடிக்கடி சிவத்தல், கண்களில் இருந்து நீர் வெளியேறுவது, வீக்கம் மற்றும் பார்வை மங்கலாவது உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு மற்றும் துகள்கள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் காற்று மாசுபாடுகள் கண்களில் எரிச்சல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன.

எனவே நீண்ட காலம் மாசுபட்ட காற்றில் இருப்பது கண் ஆரோக்கியத்தை வெகுவாக பாதித்து பார்வை திறனிலும் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. எனவே இந்த குளிர்காலத்தில் கண்களை பராமரிக்கும் வழக்கங்களை பின்பற்றுவது மிகவும் அவசியமாகிறது என்கிறார் நிபுணர் நீரஜ் ஷா. மேலும் காற்று மாசுபாட்டில் இருந்து கண்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதற்கான டிப்ஸ்களையும் ஷேர் செய்துள்ளார்.

கண்களை கவனிக்க பின்பற்ற வேண்டிய சில எளிய டிப்ஸ்கள் இங்கே:

- வீட்டை விட்டு எப்போது வெளியே சென்றாலும் காற்றில் பரவி இருக்கும் மாசுக்களில் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எங்கு சென்றாலும் உங்கள் கண்களை பாதுகாப்பாக வைத்திருக்க ப்ரொடக்டிவ் கிளாஸ் அல்லது ஷேட்ஸ்களை பயன்படுத்துங்கள்.
- நம்மையும் அறியாமல் கண்களில் அடிக்கடி கைகளை வைப்போம் என்பதால் உங்கள் கண்களை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
- அதே போல எப்போதும் கைகளை கழுவி சுத்தமாக வைத்திருக்க நினைவில் கொள்ளுங்கள்.
- கண்ணில் எதாவது விழுந்து விட்டது போல உணர்ந்தாலோ அல்லது அசௌகரியம் ஏற்பட்டாலோ உடனே கைகளை கொண்டு தேய்க்காதீர்கள். அப்படி செய்வதால் கண்கள் எளிதில் வறண்டு போகிறது மற்றும் பார்வை மங்கலாகிறது.
- காரணமின்றி கண்கள் சிவத்தல், அரிப்பு, எரிச்சல் உணர்வு, வீக்கம் மற்றும் மங்கலான பார்வை உள்ளிட்ட அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் கண் தொற்றாக இருக்கலாம் என்பதால் உடனடியாக கண் மருத்துவரிடம் செல்லவும்.
- கண்களை பொறுத்தவரை மிகவும் சென்சிட்டிவான உறுப்பு என்பதால் அதில் ஏற்படும் பாதிப்புகளுக்கு சுயமருத்துவம் செய்து கொள்வதை பெரும்பாலும் தவிர்த்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும்.
Published by:Josephine Aarthy
First published:

Tags: Air pollution, Eye Problems, Eye Twitching