ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Air pollution : சுவாசப் பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்க உதவும் 5 வழிகள்..!

Air pollution : சுவாசப் பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்க உதவும் 5 வழிகள்..!

சுவாச பிரச்சனை

சுவாச பிரச்சனை

காற்று மாசுபாடு வீட்டுக்கு வெளியில் மட்டும் இல்லை, வீட்டுக்குள்ளேயும் இருக்கிறது. எனவே வீட்டை அவ்வப்போது சுத்தம் செய்து தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். அதுமட்டுமல்லாமல் வீட்டில் அல்லது குறிப்பாக நீங்கள் உங்கள் படுக்கையறையில் ஏர் பியூரிஃபையரை பயன்படுத்தவும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சுவாசக்கோளாறு, சுவாசப் பிரச்சனைகள், ஆஸ்துமா ஆகியவை குளிர்காலத்தில் அதிகம் ஏற்படும். ஏனென்றால், மற்ற காலங்களை விட குளிர்காலத்தில் காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும். எனவே வழக்கத்தை விட காற்று அதிகமாக மாசுப்பட்டால் அது பல விதமான சுவாசம் சம்மந்தப்பட்ட நோய்களை உண்டாக்கும்.

கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும் பொழுது, தீபாவளிக்கு பிறகு காற்றின் தரம் தற்போதுவரை நன்றாகவே இருக்கின்றது. ஏனென்றால் ஓரளவுக்கு வெப்பமான சூழல் இருக்கும் பொழுது காற்று அந்த அளவுக்கு மாசு படாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு தீபாவளி கடந்த பிறகும் காற்றின் தரம் குறையவில்லை; அதாவது எதிர்பார்த்த அளவுக்கு மாசு அடையவில்லை என்றுதான் கூறப்படுகிறது. ஆனால் குளிர்காலம் நெருங்க நெருங்க, இந்த சூழல் மாறிவிடும். இதனால் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். சுவாசப் பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்க என்ன செய்யலாம் என்பது இங்கே பார்க்கலாம்.

கோவிட் பெருந்தொற்றுக்கு முன்பு வரை முகக்கவசம் என்பது மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆகியவர்கள் மட்டும் தான் பயன்படுத்தி வந்தனர். ஆனால் கோவிட் தொற்று காலத்தில் உலகம் முழுவதுமே முக கவசம் அணிந்து பழகிவிட்டது. எனவே, காற்று மாசுபாட்டிலிருந்து காத்துக் கொள்ள, தரமான மாஸ்க்கை பயன்படுத்துங்கள். கோவிட் காலத்திலேயே மருத்துவர்கள் பரிந்துரைத்த N95 மாஸ்க்கை பயன்படுத்தி உங்கள் மூக்கு மற்றும் வாயை முழுவதுமாக கவர் செய்ய வேண்டியது அவசியம்.

Also Read: சுவாசப்பாதையை சுத்தப்படுத்தி நுரையீரலை பலமாக்கும் சுவாசப்பயிற்சிகள் : வீட்டில் நீங்களே செய்யலாம்..!

 எப்போது வெளியில் இருந்து வீட்டிற்கு வந்தாலுமே கை மற்றும் முகத்தை நன்றாக கழுவுங்கள். அதேபோல நீண்ட நேரம் வெளியில் இருந்து வீட்டுக்கு வருபவர்கள் ஆடைகளை மாற்றுவது அவசியம்.

கோடைக்காலத்தில் தான் அதிக தாகம் எடுக்கும். அதனால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் குளிர் பானங்கள் குடிக்க வேண்டுமென்று தோன்றும். ஆனால் குளிர்காலத்தில் தாகம் இல்லை, எனவே தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று நினைக்காதீர்கள். குளிர் காலத்தில் தாகம் இல்லையென்றால் கூட, உடலுக்கு நீர்ச்சத்து தேவை. உடல் வறண்டு போகும். எனவே குளிர்காலத்தில் உடலின் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும், சூடான பானங்கள் மற்றும் சூப் போன்றவற்றைக் குடிக்கலாம்.

குளிர்காலத்தில் சுடச்சுட தின்பண்டங்கள், நொறுக்குத்தீனிகள் மற்றும் துரித உணவுகள் ஆகியவற்றை சாப்பிட விரும்புவோம். குளிருக்கு ஏற்றவாறு சூடான உணவுகளை யாருக்கு தான் பிடிக்காது? பருவ நிலைக்கு ஏற்றவாறு உணவுகள் சாப்பிடுவது நல்லதுதான் என்றாலும் ஆரோக்கியமான உணவுகளை தவிர்க்கக்கூடாது. எனவே பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றையும் தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருந்து, நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும் பொழுது நோய்களை தவிர்க்க முடியும்.

Also Read : கொட்டாவி விடுவது சுவாச பிரச்சனையின் அறிகுறியா ? உங்களுக்கு சுவாச பிரச்சனை இருக்கிறது என்பதை வெளிகாட்டும் அறிகுறிகள்..

காற்று மாசுபாடு வீட்டுக்கு வெளியில் மட்டும் இல்லை, வீட்டுக்குள்ளேயும் இருக்கிறது. எனவே வீட்டை அவ்வப்போது சுத்தம் செய்து தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். அதுமட்டுமல்லாமல் வீட்டில் அல்லது குறிப்பாக நீங்கள் உங்கள் படுக்கையறையில் ஏர் பியூரிஃபையரை பயன்படுத்தவும். இதன் மூலம் வீட்டுக்குள் காற்று மாசுபாட்டால் ஏற்படக்கூடிய அலர்ஜி, அல்லது வேறு சுவாச கோளாறுகளை தவிர்க்கலாம்.

நடை பயிற்சி செய்பவர்கள் காலை நேரத்தை தவிர்க்க வேண்டும், அப்போது காற்று மாசுபாடு அதிக அளவில் இருக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Breathing problem, Lungs health, Respiratory