ஹோம் /நியூஸ் /lifestyle /

கொரோனாவை தொடர்ந்து அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை தொற்று: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை

கொரோனாவை தொடர்ந்து அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை தொற்று: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை

கருப்பு பூஞ்சை தொற்று முன்பு மிக சொற்ப அளவிலேயே காணப்பட்ட நிலையில், தற்போது கொரோனா காரணமாக கருப்பு புஞ்சை தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கருப்பு பூஞ்சை தொற்று முன்பு மிக சொற்ப அளவிலேயே காணப்பட்ட நிலையில், தற்போது கொரோனா காரணமாக கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

  கருப்பு பூஞ்சைத் தொற்று (Mucormycosis) என்ற தொற்று தற்போது மக்களிடையே அதிகமாக பரவி வருகிறது.மிக அதிக பாதிப்பை உண்டாக்கக்கூடிய இந்த தொற்று நீரிழிவு நோயாளிகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும். இந்தத் தொற்று, தற்போது கொரோனா நோய்த் தொற்று உள்ளவர்களுக்கும் ஏற்படுகிறது.

  இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா, கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் தொற்று கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பது மிகவும் முக்கியமானது என தெரிவித்தார். கொரோனாவுடன் சேர்ந்து  பூஞ்சை, பாக்டீரியா போன்ற இரண்டாம் நிலை தொற்றுகளும் அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

  கருப்பு பூஞ்சைகள் மண்,காற்று மற்றும் உணவிலும் இருக்கும் என எச்சரித்துள்ள ரன்தீப் குலேரியா, ’அவை குறைந்த வீரியமிக்கவை பொதுவாக தொற்றை ஏற்படுத்தாது. கொரோனாவுக்கு முன்னர் குறைந்த அளவிலான கருப்பு பூஞ்சை தொற்றுகள் ஏற்பட்டு வந்த நிலையில், கொரோனா காரணமாக தற்போது அதிக நபர்கள் பாதிக்கப்படுகின்றனர்’ என தெரிவித்தார்.

  எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது 20 கொரோனா நோயாளிகள் உட்பட 23 பேர் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவித்த ரன்தீப், பல்வேறு மாநிலங்களிலும் சேர்த்து 500க்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

  முகம், நாசி,கண், மூளை ஆகியவற்றை இந்த தொற்று தாக்கும் என்றும் கண் பார்வை பறிபோகும் ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்த ரன்தீப், நுரையீரலையும் இந்த தொற்று தாக்கும் என எச்சரித்துள்ளார்.

  ஸ்டீராய்டு மருந்துகளை தவறாக பயன்படுத்துவதே இந்நோய் ஏற்பட முக்கிய காரணம்.கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நோயாளிகளுக்கும் அதிக ஸ்டீராய்டு எடுத்து கொள்பவர்களுக்கும் இந்த தொற்று ஏற்படும்.கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படாமல் தடுக்க ஸ்டீராய்ட்டு மருந்துகளை தவறாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Murugesh M
  First published:

  Tags: AIIMS, Corona, Covid-19, Mucormycosis