• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மதியம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்குமா..?

மதியம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்குமா..?

அதேபோல் A Harvard Medical School நடத்திய ஆய்வில் மதியம் தூங்குவதால் 10% வரை கலோரிகளைக் குறைக்கலாம் என்கிறது.

  • Share this:
    இந்த லாக்டவுன் பலருடைய வாழ்க்கை முறையையே மாற்றிப்போட்டுவிட்டது. குறிப்பாக தூங்கும் பழக்கம் முற்றிலும் மாறிவிட்டது. மதியம் நல்ல உணவுக்குப் பின் குட்டித் தூக்கம் போடும் பழக்கம் தற்போது பலரிடமும் அதிகரித்திருக்கிறது என்றே சொல்லலாம். மதியம் தூங்குவதால் இரவு தூக்கம் தடைபடுகிறது என்ற புலம்பல்களும் கேட்க முடிகிறது.

    இதற்கிடையே பலருக்கும் மதியம் தூங்குவது உடல் எடையை அதிகரிக்குமோ என்ற பயம் உள்ளது. வீட்டிலும் பெரியவர்கள் தூங்கினால் எடை கூடும் என சொல்வார்கள். ஆனால் இது கட்டுக்கதை என்கிறது ஒரு ஆய்வு.

    ஆம், உண்மையில் மதியம் தூங்குவது உடல் எடையை அதிகரிக்காதாம். இன்னும் கேட்டால் உடல் எடை குறையும் என்கிறது அந்த ஆய்வு. இதனால் உடலுக்கு நன்மைகளே என்கிறது.



    Archives of Internal Medicine நடத்திய ஆய்வில் அதிக எடைக் கொண்டவர்கள் தினமும் மதியம் 16 நிமிடங்கள் தூங்கி எழுந்தால் உடல் எடையைக் குறைக்கலாம் என்கிறது. அதேபோல் A Harvard Medical School நடத்திய ஆய்வில் மதியம் தூங்குவதால் 10% வரை கலோரிகளைக் குறைக்கலாம் என்கிறது.

    அதோடு நீங்கள் சரியாகத் தூங்கவில்லை என்றால் அதிகம் பசி எடுக்கும் ஹார்மோன்கள் சுரக்குமாம். இதனால் அதிகம் சாப்பிடும்போது உடல் எடை அதிகரிக்கும் என்கிறது.

    எனவே இரவு நல்ல தூக்கம் இல்லை, சரியாகத் தூங்கவில்லை என்றால் கொஞ்சமும் யோசிக்காமல் மதியம் ஓய்வாக சிறிது நேரம் தூங்கி எழுதல் தவறில்லை.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    பார்க்க :

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: