ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பிரசவத்திற்குப் பின் எத்தனை நாட்கள் கழித்து மாதவிடாய் வரும்..? மருத்துவர் பதில்....

பிரசவத்திற்குப் பின் எத்தனை நாட்கள் கழித்து மாதவிடாய் வரும்..? மருத்துவர் பதில்....

மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்கமல் இருப்பது

ஆரோக்கியமான மாதவிடாய் மற்றும் இயல்பான, சராசரி மாதவிடாய் சுழற்சி என்பது 28 நாட்கள் ஆகும். ஆனால் ஒரு சில பெண்களுக்கு இந்த சராசரி சுழற்சி என்பது 25 நாட்கள் ஆகவும் இருக்கலாம் அல்லது 35 நாட்களாகவும் இருக்கலாம். ஒவ்வொரு பெண்ணின் உடல் நிலையை பொறுத்து சராசரி நாட்கள் மாறுபடும். எனவே உங்களுடைய மாதவிடாய் சுழற்சி உங்கள் சராசரி நாட்களின் அடிப்படையில் ஏற்படுகிறதா என்பதை அவசியமாக கண்காணிக்க வேண்டும். இது உங்களுடைய கருவுறும் தன்மையை உறுதிப்படுத்துகிறது. மேலும், மாதவிடாய் தாமதமாவதால் வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா என்பதையும் கண்டறிய உதவும்.

மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்கமல் இருப்பது ஆரோக்கியமான மாதவிடாய் மற்றும் இயல்பான, சராசரி மாதவிடாய் சுழற்சி என்பது 28 நாட்கள் ஆகும். ஆனால் ஒரு சில பெண்களுக்கு இந்த சராசரி சுழற்சி என்பது 25 நாட்கள் ஆகவும் இருக்கலாம் அல்லது 35 நாட்களாகவும் இருக்கலாம். ஒவ்வொரு பெண்ணின் உடல் நிலையை பொறுத்து சராசரி நாட்கள் மாறுபடும். எனவே உங்களுடைய மாதவிடாய் சுழற்சி உங்கள் சராசரி நாட்களின் அடிப்படையில் ஏற்படுகிறதா என்பதை அவசியமாக கண்காணிக்க வேண்டும். இது உங்களுடைய கருவுறும் தன்மையை உறுதிப்படுத்துகிறது. மேலும், மாதவிடாய் தாமதமாவதால் வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா என்பதையும் கண்டறிய உதவும்.

சிலருக்கு பிரசவத்திற்குப் பின் எத்தனை நாட்கள் கழித்து மாதவிடாய் வரும் என்ற கேள்வி எழும். அதுவும் சிசேரியன் செய்தால் எப்போது குழந்தை பிறகும்..? சுகப் பிரசவமாக இருந்தால் எப்போது மாதவிடாய் வரும் என்ற கேள்வி வரும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

வயிற்றில் கரு தங்கிய நாளிலிருந்து பெண்களுக்கு மாதவிடாய் நின்று போகும். அதோடு குழந்தை பிறந்த பிறகுதான் மாதவிடாய் வரும். இதற்கிடையில் 9 மாதங்கள் பெண்களுக்கு மாதவிடாய் இருக்காது. சில பெண்கள் மாதவிடாய் இல்லாத இந்த 9 மாதங்களை மகிழ்ச்சியாக கருதுவார்கள். காரணம் மாதவிடாய் வலி , வேதனைகளிலிருந்து விலக்கு கிடைத்ததாக கருதுகின்றனர். அந்த மகிழ்ச்சியான காலத்திலிருந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் போது சற்று வருத்தம் இருக்கலாம்.

அந்த வகையில் சிலருக்கு பிரசவத்திற்குப் பின் எத்தனை நாட்கள் கழித்து மாதவிடாய் வரும் என்ற கேள்வி எழும். அதுவும் சிசேரியன் செய்தால் எப்போது குழந்தை பிறகும்..? சுகப் பிரசவமாக இருந்தால் எப்போது மாதவிடாய் வரும் என்ற கேள்வி வரும். இந்த கேள்விகளுக்கு மகப்பேறு மருத்துவர் சிவகாமி கோபிநாத் விகடனிற்கு அளித்த பேட்டியிலிருந்து சில உங்களுக்காக...

பெண்கள் குழந்தை ஈன்ற பிறகு எதிர்பார்க்கும் முதல் விஷயம் மாதவிடாய் பற்றியதாகத்தான் இருக்கும். பிரவத்திற்குப் பின் பெண்களின் உடலில் பல மாறுதல்களை அனுபவிப்பார்கள். அதில் மாதவிடாய் சுழற்சியிலும் மாற்றங்களை அனுபவிப்பார்கள்.

சிசேரியன் அல்லது சுகப் பிரசவம் எதுவாக இருந்தாலும் மாதவிடாயில் மாற்றம் இருக்காது. இருவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். பிரசவத்திற்குப் பின் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மாதவிடாய் ஒரு வருடம் கழித்து கூட வரலாம்.

தாய்ப்பால் கொடுக்காத பெண்கள் அல்லது தாய்ப்பால் சுரப்பு குறைவாக உள்ள பெண்களுக்கு மாதவிடாய் ஒன்று அல்லது இரண்டு மாதங்களிலேயே வந்துவிடும். மாதவிடாய் வராமலிருக்க தாய்ப்பால் சுரப்புதான் காரணம். சில பெண்களுக்கு அடுத்த மாதவிடாய் சுழற்சியில் கூட வரலாம். சிலருக்கு 3 மாதங்கள், 6 மாதங்கள் கழித்து கூட வரலாம்.

வெற்றிலை கொதிக்க வைத்த தண்ணீரில் இத்தனை நன்மைகளா..? இது தெரியம போச்சே....

எனவே இன்னும் மாதவிடாய் வரவில்லையே என கவலைப் பட வேண்டாம். தாய்ப்பால் சுரப்பு நன்றாக இருந்தால் மாதவிடாய் இப்படி தள்ளி வரலாம். ஒருவேளை மாதவிடாய் ஒரே மாதத்தில் இரண்டு முறை வருகிறது. அளவுக்கு அதிகமான உதிரப்போக்கு இருக்கிறது எனில் உடனே மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது என்கிறார்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Menstrual Cycle, Periods, Post Pregnancy Side effects, Pregnancy