Home /News /lifestyle /

கொரோனாவிற்கு பின் இளைஞர்களிடம் அதிகரிக்கும் தற்கொலைகளுக்கு என்ன காரணம்..? மருத்துவரின் ஆலோசனை

கொரோனாவிற்கு பின் இளைஞர்களிடம் அதிகரிக்கும் தற்கொலைகளுக்கு என்ன காரணம்..? மருத்துவரின் ஆலோசனை

மன அழுத்தம்

மன அழுத்தம்

லாக்டவுனின்போது வீட்டிற்குள் அடைந்திருந்த காரணத்தினால் ஏற்பட்ட மன அழுத்தத்தினாலும் பிறருடன் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலையினாலும் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது என கூறினாலும் , கொரோனாவை தடுப்பூசியின் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகும் தற்கொலைகள் குறைந்தபாடில்லை..

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 5 minute read
 • Last Updated :
  கொரோனா என்னும் பெருந்தொற்று உலகம் முழுவதும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது . பொருளாதார அளவிலும் உடலளவிலும் மனதளவிலும் நாம் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். சமீபகாலமாக இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் உளவியல் ரீதியான பல இன்னல்களை சந்தித்து வருகிறோம்.. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 419 பேர் தற்கொலை செய்துகொள்வதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

  லாக்டவுனின்போது வீட்டிற்குள் அடைந்திருந்த காரணத்தினால் ஏற்பட்ட மன அழுத்தத்தினாலும் பிறருடன் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலையினாலும் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது என கூறினாலும் , கொரோனாவை தடுப்பூசியின் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகும் தற்கொலைகள் குறைந்தபாடில்லை.. மேலும் கொரோனாவிற்கு பிறகு பெரும்பாலானவர்களுக்கு சமூக நீரோட்டத்தோடு இணைந்து பழகுவதிலும் , கவனம் செலுத்துவதிலும் ஆர்வம் குறைந்துவருகிறது என்ற செய்தியும் ஒலிக்க தொடங்கி இருக்கிறது . எனவே இதுதொடர்பாக மனநல மருத்துவர் மா. திருநாவுக்கரசிடம் பேசினோம்

  கொரோனா என்ன பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது..?

  கோவிட் வந்த போது மனித இனமே தங்களை காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் இருந்தார்கள். இன்று விஞ்ஞானத்தின் மூலமாக தடுப்பூசியை கண்டுபிடித்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து இயல்பு வாழ்க்கைக்கு அதாவது கோவிட் முன்பு இருந்த வாழ்க்கைக்கு நாம் வந்தபிறகு தான் கோவிட் ஏற்படுத்திய பாதிப்பை நாம் கணக்கிடுறோம்.. பொருளாதார பிரச்னை உடலளவில் இருக்கக்கூடிய பிரச்னை என்றால் நாமே அதை சரிசெய்துக்கொள்ள முடியும். ஆனால் உளவியல் சார்ந்த பிரச்னை அப்படியல்ல. இந்தியாவில் மட்டுமல்ல நன்கு வளர்ந்த நாடுகளில்கூட மக்கள் கோவிட்டிற்கு பிறகு பெரும் மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.. நம்மை போன்ற வளரும் நாடுகளில் மனநல மருத்துவரை எதற்கு அனுக வேண்டும் எப்படி அணுக வேண்டும் என்ற புரிதல் இல்லை .  கொரோனா பரவக்கூடாது என்பதற்காக நாம் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்க மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டோம் அல்லவா ..அதுதான் இப்போது பெரிய பிரச்னையாக மாறியிருக்கிறது. மனிதனுக்கும் மிருகத்திற்குமான வேறுபாடு என்னவென்றால் மிருகம் கூட்டமாக வாழும் மனிதன் சமூகமாக வாழ வேண்டும். இந்த கோவிட்டிற்கு பிறகு மனிதன் சமூகப்படுத்துல் என்பதில் இருந்து விலகி நிற்கிறான்.. அதாவது மனிதனுடைய ஆகச்சிறந்த திறமையாக நான் பார்ப்பது ஒருவரிடம் பழகி அறிவையும் ,பக்குவத்தையும் வளர்த்துக்கொள்வது தான்.

  ஒரு குறிப்பிட்ட வயதை கடந்த அனைவரும் சரியெது தவறெது என பகுத்தறியும் திறனை கொண்டிருப்போம் . ஆனால் பதின்ம வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு லாக்டவுன் , தனிமைப்படுத்துதல் போன்றவை உடலளவிலும் மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பு அதிகம் . இன்னும் கொஞ்ச நாட்கள் சென்ற பிறகுதான் நாம் என்னனென்ன பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறோம் என்பது தெரியும்

  ஆன்லைன் வகுப்பு உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறதா ?

  எதையுமே நாம் பொதுவாக விமர்சித்திட முடியாது . ஆன்லைன் வகுப்பு என்பது கோவிட்டிற்கு பிறகு வந்ததல்ல . அதற்கு முன்பே நடைமுறையில் இருந்த ஒன்றுதான். கோவிட்டின்போது அது கட்டாயமாக்கப்பட்டு குழந்தைகளிடம் கொடுக்கப்பட்டது. மற்ற நாடுகளில் கோவிட்டின் போது குழந்தைகள் டேப்லாய்டு மூலமாக பாடங்களை கற்றுக்கொண்டனர். அதில் பாடங்களை கற்றுக்கொள்ளுதல் என்பது மட்டுமே பிரதானமான ஒன்றாக இருக்கும். ஆனால் இந்தியா போன்ற வர்க்கப் வேறுபாடு அதிகமிருக்கும் நாடுகளில் அனைத்து பெற்றோர்களாலும் டேப்லாய்டு வாங்கி கொடுக்க இயலாது.

  மன ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் அதிக கோபம் : கட்டுப்படுத்தும் வழிகள் இதோ...

  இருந்தாலும் குழந்தைகளின் கல்வி சீரழிந்துவிடக்கூடாது என்பதற்காக தங்களால் முடிந்த ஆன்ராய்டு போனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அதில் தேவையானதும் இருக்கிறது தேவையில்லாததும் இருக்கிறது. நம் குழந்தைகள் எதை பார்க்கிறார்கள் என பெற்றோர்கள் சரிவர கவனிப்பதில்லை. அதனால் அந்த குழந்தைகள் வளரும்போதே டெக்னாலஜியோடு இணைந்து வளர்கிறார்கள். அதில் இருக்கூடிய பல விஷயங்கள் குழந்தைகளை மனிதர்களிடம் பழகுவதில் இருந்து அந்நியப்படுத்தி சமூகப்படுத்துவதில் இருந்து புறந்தள்ளுகிறது .

  நான் முன்பே சொன்னதுபோல் மனிதன் ஒரு சமூக விலங்கு . ஆகவே நாம் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் பிறருடன் இனைந்து இந்த சமுகத்தில் வாழ்ந்தாக வேண்டும் . ஆனால் இந்த மொபைல் போன் சமூக வலைத்தளங்கள் மனிதனை இன்னொரு கற்பனை உலகத்திற்கு தள்ளுகிறது. எளிதாக சொல்ல வேண்டுமானால் செல்போன் மனிதனை தனிமைப்படுத்துகிறது ..  கோவிட்டிற்கு பிறகு கவனக்குறைவு ஏற்படுகிறது என சொல்கிறார்களே... அது உண்மையா ?

  கவனக்குறைவுக்கும் , கவனச் சிதறலுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது என்பதை நாம் முதலில் தெரிந்துக்கொள்ளவேண்டும் . எவ்வளவு முயற்சி செய்தாலும் கவனிக்க முடியாமல் போகுதல் கவனக்குறைவு . கவனச் சிதறல் என்பது மேலோட்டமாக அனைத்தையும் கற்றுக்கொள்ள முயல்வது. இரண்டுமே பெரும் பிரச்னை இல்லை . அனைவருக்குமே இருக்கும் பிரச்னைதான். அதுவும் வளரும் குழந்தைகளுக்கு கவனச் சிதறல் ஏற்படுவது இயல்பான ஒன்று. எந்தவொரு விஷயத்தை கற்றுக்கொள்ளும்போதும் மூளைக்கு சென்று பதிய வைக்கப்பட்டு மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்பட வேண்டும் . இந்த பதிவும் உறுதி செய்யப்படுவதும் மனிதன் தூக்கும்போதுதான் நடைபெறுகிறது .

  லாக்டவுனிற்கு பிறகு அனைவருடைய sleeping cycle-உம் மாறிவிட்டது..பொதுவாக ஒரு விஷயத்தை நாம் கற்றுக்கொள்ள சில நாட்கள் பிடிக்கும் . உதாரணத்திற்கு எந்த விஷயத்தின் மீது நாட்டம் இருக்கிறதோ அதை பற்றிய அடிப்படையை தெரிந்துக்கொண்ட பிறகு தான் புரிந்துக்கொள்கிறோம் . புரியும்போதுதான் கற்றல் நிறைவு பெறுகிறது. நம்முடைய அறிவும் பெருகுகிறது . அதன்பிறகு தேவையான சமயத்தில் அதை நினைவிற்கு கொண்டுவந்து பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும் . அப்படி பயன்படுத்தும்போதுதான் நாம் கற்றுக்கொண்டது நன்மையா அல்லது அவசியமற்றதோ என தெரியவரும்.

  பள்ளிக் குழந்தைகளைக் குறி வைக்கும் சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள்! எச்சரித்த உலக சுகாதார நிறுவனம்

  நாம் கற்றுக்கொண்டது நமக்கு நன்மையை விளைவித்தால் பயன் என கூறுகிறோம் . அதுவே ஆபத்தை ஏற்படுத்தினால் அதை கெடுதல் என்கிறோம் . இவ்வாறு ஒன்றை கற்றுக்கொண்டு உரிய பயணை உரிய நேரத்தில் பெறும்போது அதை திறமை எனக் கூறுகிறோம் . இதை திரும்ப திரும்ப பயன்படுத்துவதனால் நம்முடைய திறமை நேர்த்தியடைகிறது . இத்தகைய தருணத்தில் தான் அறிந்துக் கொள்வதில் இருந்து புரிந்துகொள்வதனால் இன்பம் ஏற்படுகிறது . அந்த இன்பத்தை பெறுவதற்காகதான் மனிதன் வாழ்நாள் முழுதும் ஓடுகிறான். ஆனால் ஆன்லைன் விளையாட்டுகளும் , போட்டிகளும் வேகத்தின் அடிப்படையில் நிர்ணியிக்கப்படுகிறது . வேகம் ஏற்படும்போது ஒரு கிளர்ச்சி மனதிற்குள் வருகிறது. அந்த கிளர்ச்சி இன்பத்தை கொடுக்கிறது . இன்பம் மனிதனுக்கு கிளுகிளுப்பை உருவாக்குகிறது . அந்த கிளுகிளுப்பின் ருசியை அறிந்த மனித மூளை மீண்டும் மீண்டும் தேவையென நம்மை தூண்டுகிறது . இதைதான் போதை என்கிறோம் .  இவ்வாறு ஏற்படும் கிளுகிளுப்பும் இன்பமும் உடனடியாக மனதையும் உடலையும் பாதிக்கும் ..கிளர்ச்சியை அனுபவிக்க சொல்லி காட்டாயத்திற்குள் நம்மை தள்ளுகிறது . இதைதான் போதைப் பழக்கம் என்கிறோம் . இந்த பழக்கத்திற்கு நாம் அடிமையாகும்போதுதான் மனிதனின் அனைத்து ஆதாரங்களும் ,பொருளாதாரமும் , நேரமும் ,உழைப்பும் வீணாகி போகிறது. நேரமும் உடல்நலமும் பாதிக்கப்படுவதை உணர்ந்த மனிதன் இதிலிருந்து விடுபட நினைக்கும்போது மனச்சோர்வு உருவாகிறது . அந்த மனச்சோர்வில் இருந்து விடுபட மீண்டும் அவன் அந்த போதை பழக்கத்தையே கையில் எடுக்கிறான் . இதன்மூலம் தரமான ஆக்கப்பூர்வமான நேரம் வீண்டிக்கப்படுகிறது .

  குழந்தை பிறந்த பெண்கள் அலுவலகத்தில் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள்!

  இப்படித்தான் ஊடகங்களும் , சமூக வலைத்தளங்களும் , முகநூல் பக்கங்களும் மக்களை கவர்ந்து இழுக்கிறது . இதையும் கவனச் சிதறல் என்பதற்குள் உள்ளடக்கலாம் . குறிப்பாக இப்போதைய இளைஞர்களுக்கு நான்கு சொற்கள் பற்றின புரிதலை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறேன் .

  1) இன்பம் ( pleasure )
  2) மகிழ்ச்சி ( Happiness )
  3) தேவை ( Need)
  4) விருப்பம் ( Want)

  இந்த நான்கு சொற்களுக்கான அர்த்தத்தையும் , தெளிவையும் நாம் புரியவைத்துவிட்டால் அனைவரின் மனநல ஆரோக்கியமும் மேம்படும் . இப்போதைய இளைஞர்கள் விருப்பத்தை தேவையென்றும் , தேவையை விருப்பமென்றும் புரிந்துக்கொள்கிறார்கள் . முக்கியமாக இன்பத்தை மகிழ்ச்சியெனவும் , மகிழ்ச்சியை இன்பம் எனவும் குழப்பிக்கொள்வதால் மனிதனின் தேவை பூர்த்தியடைவதில்லை . மனதிற்கு தேவையான மகிழ்ச்சியும் வந்தடைவதில்லை .

  எனவே இந்த நான்கு சொற்களையும் சரியாக உணர்ந்து புரிந்துக்கொண்டால் நமக்கு எந்த பிரச்னைகளும் இருக்காது . வளரும் குழந்தைகளுக்கு வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் இந்த நான்கு சொற்களையும் புரியவைத்து அதை நடைமுறை வாழ்க்கையில் எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய புரிதலை ஏற்படுத்திவிட்டாலே மன ஆரோக்கியத்தோடு நாம் வாழலாம்....!

  -Pradeep kanagasabapathi

   

   
  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Anxiety, Corona impact, Depression, Mental Stress

  அடுத்த செய்தி