Home /News /lifestyle /

திருமணத்திற்குப் பின் பெண்களின் பிறப்பு உறுப்பில் ஏற்படும் மாற்றங்களும்... தீர்வுகளும்..!

திருமணத்திற்குப் பின் பெண்களின் பிறப்பு உறுப்பில் ஏற்படும் மாற்றங்களும்... தீர்வுகளும்..!

ஆனால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்த பின் அதன் தீவிரம் குறைய, உடல் பழைய நிலைக்கு வர குறைந்தது 3-4 மாதங்கள் எடுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்த பின் அதன் தீவிரம் குறைய, உடல் பழைய நிலைக்கு வர குறைந்தது 3-4 மாதங்கள் எடுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடலுறவிற்குப் பின் அவர்களின் பிறப்பு உறுப்பில் ஏற்படும் மாற்றங்களை தனக்குள்ளேயே வைத்துக்கொண்டு குழம்பிப்போய் இருப்பார்கள்.

    பெண்களின் பிறப்புறுப்பும் அவர்களின் ஆரோக்கியத்திற்கான முக்கிய பங்கை வகிக்கிறது. அதில் ஏதேனும் சிறு மாற்றங்கள் இருந்தால் கூட என்னவோ ஏதோ என பயந்து அதனால் மன அழுத்தத்திற்கே உள்ளாவார்கள்.

    இப்படி இருக்க திருமணத்திற்குப் பின் முதல் உடலுறவிற்குப் பின் அவர்களின் பிறப்பு உறுப்பில் ஏற்படும் மாற்றங்களை தனக்குள்ளேயே வைத்துக்கொண்டு குழம்பிப்போய் இருப்பார்கள். மற்றவர்களிடம் கேட்கவும் தயங்குவார்கள். ஆனால் சில மாற்றங்கள் நிகழ்வது இயற்கைதான். அப்படி இயல்பான மாற்றங்கள் என்ன என்று பர்க்கலாம்.

    பிறப்பு உறுப்பில் வறட்சி : வெஜினாவில் வறட்சி உண்டாவதும், எரிச்சல், அரிப்பு போன்றவை ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக நிகழக்கூடியது. அதோடு பதட்டம், மன அழுத்தம், மாதவிடாய் நாட்கள், பயன்படுத்தும் சோப்பில் மாற்றம் போன்ற காரணங்களாலும் இது ஏற்படுவது இயல்பு.

    சிறுநீர் சொட்டு சொட்டாக வருகிறதா.. எரிச்சலை உண்டாக்குகிறதா..?

    வீக்கம் : பிறப்பு உறுப்பில் வீக்கம் ஏற்படுவதும் உடலுறவுக்குப் பின் நிகழக்கூடியதுதான். இது வெஜினாவில் வளரும் முடியின் காரணமாகவும் இருக்கலாம். இதற்கு தூய மென்மையான துணி பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரில் முக்கி துடைத்தால் வீக்கம் குறையும். ஒருவேளை வீக்கம் பெரிதாகிக்கொண்டே போனால் மருத்துவரை அணுகுகள்.

    உணர்வின்மை : வெஜினாவில் உணர்ச்சியின்மை என்பது பொதுவாக சந்திக்கும் பிரச்னைதான்.



    துர்நாற்றம் : துர்நாற்றம் , வெள்ளைப்படுதல் என இருத்தலும் பொதுவான பிரச்னைதான்.ஆனால் இது இரண்டு, மூன்று நாட்களுக்குள் சரியாகிவிடும். மாறாக துர்நாற்றம் மூக்கை துளைக்கும் அளவிற்கு இருந்தாலோ, வெள்ளைப்படுதல் பிங்க், மஞ்சள் போன்ற நிறங்களில் இருந்தாலோ, அதிகம் வெள்ளைப்படுதல் இருந்தாலோ மருத்துவரை அணுகி ஆரம்பத்திலேயே குணப்படுத்துதல் அவசியம்.

    அரிப்பு : வெஜினாவைச் சுற்றிலும் அரிப்பு உண்டாகிறது எனில் அது ஈஸ்ட் அல்லது பாக்டீரியாவால் ஏற்படும் பிரச்னை. இதற்கும் பெரிய அளவில் செல்ல விடாமல் ஆரம்பத்திலேயே தீர்வு காண்பது அவசியம். இதற்கு மருத்துவரை அணுகுதல் நல்லது.

    ஒரே மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வர என்ன காரணம்..? தீர்வு என்ன..?

    சிறுநீர் கழிக்கும்போது வலி : இதுவும் உடலுறவினால் ஏற்படும் பிரச்னைதான். இது சாதாரணமாகவே சரியாகிவிடும். ஒருவேளை சரியாகவில்லை எனில் அது சிறுநீர்ப் பாதை தொற்றாகவும் இருக்கலாம். இதற்கு மருத்துவரை சந்திப்பது அவசியம்.



    மாதவிடாய் அல்லாத உதிரப்போக்கு : தீவிரமான உடலுறவு அல்லது முதல் முறை உடலுறவு என்றால் சிறிது இரத்தம் வரும். ஆனால் அந்த உதிரப்போக்கு அதிகமாக இருந்தால் ஏதோ உள்ளே பிரச்னை என்பதற்கான அறிகுறியாகும். எனவே மருத்துவரை உடனே பார்ப்பது நல்லது.

    தளர்வு : பிறப்பு உறுப்பில் தளர்வு ஏற்படுவதும் சகஜம்தான். திருமணத்திற்குப் பின் அடிக்கடி உடலுறவு மேற்கொள்வதால் இந்த தளர்வு இருக்கும். ஆனால் இந்த தளர்வு தானாகவே சுருங்கும் தன்மைக்கொண்டது. குழந்தைப் பிறந்தால் இந்த தளர்வு அதிகமாக இருக்கும். சுருங்கிவிடும். பயப்பட வேண்டிய அவசியமில்லை.

    பார்க்க :
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி