மனதை ஒருநிலைப்படுத்த தியானம் மட்டும் தீர்வல்ல : இப்படி ’புக் கலரிங்’ செய்யலாம்..!

மனதை ஒருநிலைப்படுத்த தியானம் மட்டும் தீர்வல்ல : இப்படி ’புக் கலரிங்’ செய்யலாம்..!

புக் கலரிங்

போகும் இடங்களில் கூட மன அழுத்தம், டென்ஷன் என்றால் கலரிங் செய்யலாம்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  மன அமைதிக்காகவும், மனதை ஒருநிலைப்படுத்தவும் தியானம், யோகா, மசாஜ் போன்ற விஷயங்களை மேற்கொள்வார்கள். ஆனால் அதேசமயம் இந்த பயிற்சிகள் மூலம் நம் சிந்தனைகளையும், எண்ணங்களையும் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டு அதோடு போராடி அதன் பிறகே மன அமைதி கிடைக்கும். அதுவே சில சமயம் அழுத்தமாக உணரலாம். இருப்பினும் அதுதான் மன அமைதிக்கு தீர்வு என்று நினைத்தால் அது தவறு. இப்படி மாற்று வழியும் உண்டு.

  தற்போது தியானத்திற்கு மாற்றுவழியாக புக் கலரிங் தெரபி டிரெண்டாகி வருகிறது. தியானம், யோகா என்றாலும் அதற்கு அமைதியான இடம் தேவை. பரந்த சூழல் அமைய வேண்டும் என்று பல விதிமுறைகள் தேவை. ஆனால் இதற்கு அப்படித் தேவையில்லை.

  பெரியவர்களுக்கான கலரிங் புத்தகங்கள் ஆன்லைனிலேயே விற்பனைக்கு உள்ளன. அவற்றை வாங்கி உங்கள் பையில் போட்டுக்கொண்டால் போதும். போகும் இடங்களில் கூட மன அழுத்தம், டென்ஷன் என்றால் கலரிங் செய்யலாம். கலரிங் செய்வதும் உங்கள் மனதை அமைதிப்படுத்தும்.  உங்களின் தேவையற்ற சிந்தனைகளையும் களையச் செய்து கலரிங் தருவதில் மனம் ஈடுபடும். இதனால் மனம் ஒருநிலைப்படும். அதேபோல் வண்ணங்களுக்கும் தனி சக்தி உண்டு. அந்த வண்ணங்கள் நம் மூளைக்கும், கண்களுக்கும் உற்சாகத்தைத் தூண்டும். நம் கைகளுக்கும் வேலை, என்ன நிறம் கொடுக்கலாம் என நம் மூளைக்கும் வேலை, சிந்தனைகளுக்கும் வேலை. இப்படி பல வழிகளில் நன்மைகள் தருவதால் இந்த புக் கலரிங் தெரபி அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

  நீங்களும் மனதை ஒருநிலைப்படுத்த இப்படி புக் கலரிங் டிரை பண்ணி பாருங்களே..!

   

   

   
  Published by:Sivaranjani E
  First published: