Home /News /lifestyle /

2 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு சர்க்கரையே தரக்கூடாது...! என்ன காரணம்..?

2 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு சர்க்கரையே தரக்கூடாது...! என்ன காரணம்..?

குழந்தை பராமரிப்பு

குழந்தை பராமரிப்பு

2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இனிப்பான உணவுகளை அதிகம் கொடுக்கக் கூடாது. குறிப்பாக, ஆடட் சுகர்ஸ் என்று சொல்லக் கூடிய சர்க்கரை சேர்க்கப்பட்ட பொட்டல உணவு வகைகளை கண்டிப்பாக கொடுக்கவே கூடாது.

குழந்தைகளுக்கு உணவூட்டுவது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல என்பதை தாய்மார்கள் அவர்களது அனுபவத்தின் மூலமாக உணர்ந்திருக்கக் கூடும். அம்மாக்கள் கொடுக்கும் உணவு குழந்தைகளுக்கு பிடித்தமானதாகவும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் சத்தானதாகவும் இருக்க வேண்டும். இந்த இரண்டையும் ஒரு சேர கடைப்பிடிப்பது கொஞ்சம் கடினம் தான்.

உதாரணத்திற்கு காய்கறி மற்றும் பழங்களில் தான் நிறைவான ஊட்டச்சத்துகள் மற்றும் உடலுக்கு தேவையான இதர சத்துகள் நிரம்பியிருக்கும். அப்படிப்பட்ட பழங்களையும், வேக வைக்கப்பட்ட காய்கறிகளையும் மசித்து ஊட்ட முயற்சிக்கும்போது உங்கள் குழந்தை அதை வேண்டா, வெறுப்பாகத் தான் சாப்பிடத் தொடங்கும். சில சமயங்களில் அழுது, புரண்டு உணவை வெளியே உமிழ்ந்து விடும் நிகழ்வுகளும் நடக்கும்.

அதேசமயம், இனிப்பான உணவை குழந்தைகளுக்கு ஊட்டும்போது அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள். என்ன இருந்தாலும், குழந்தையின் நலனுக்கு இந்த இனிப்பு மிகுந்த உணவை தொடர்ந்து கொடுத்துவிட முடியாது. சின்னஞ்சிறு வயதில் குழந்தைக்கு கொடுக்கும் ஒவ்வொரு உணவு மீதும் நாம் மிகுந்த அக்கறை கொண்டிருக்க வேண்டும்.



அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள்

2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இனிப்பான உணவுகளை அதிகம் கொடுக்கக் கூடாது. குறிப்பாக, ஆடட் சுகர்ஸ் என்று சொல்லக் கூடிய சர்க்கரை சேர்க்கப்பட்ட பொட்டல உணவு வகைகளை கண்டிப்பாக கொடுக்கவே கூடாது. இது குழந்தையின் வளர்ச்சியில் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். பொதுவாக உணவை பதப்படுத்தும்போது சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இது தவிர சிரப், பழ ஜூஸ், ப்ரூட் ஜாம் போன்றவற்றில் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இது போன்ற உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இது தவிர ஐஸ்கிரீம், பேக்கரியில் விற்கப்படும் இனிப்புகள் போன்றவற்றை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.

குழந்தைப் பருவத்தின் கசப்பான அனுபவங்களால் எதிர்காலத்தில் மனநலப் பிரச்சனைகள் ஏற்படுமா? ஆய்வு சொல்லும் தகவல்

நாம் ஏன் அதை தவிர்க்க வேண்டும்

குழந்தை பிறந்து முதல் 20 மாதங்களில், அதன் சீரான வளர்ச்சிக்கு ஏராளமான ஊட்டச்சத்துக்களும், கலோரிகளும் தேவைப்படும். சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களிலும் கலோரிச் சத்துக்கள் கூடுதலாக இருக்கும் என்றாலும் கூட, அதில் ஊட்டச்சத்துக்கள் இருக்காது. இந்த வயதில் குழந்தைகள் மிக குறைவகாத் தான் சாப்பிடும். அத்தகைய சூழலில், அந்த உணவு என்பது ஊட்டச்சத்து நிரம்பியதாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.



நீண்டகால விளைவுகள்

மிக இளம் வயதில் குழந்தைகளுக்கு சர்க்கரை நிறைந்த உணவுப் பொருட்கள் கொடுக்கப்படும் பட்சத்தில், அவர்களுக்கு இளம் வயதிலேயே உடல் பருமன், பற்சிதைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். குறிப்பாக, இதயம் சம்பந்தப்பட்ட நோய்களும் வரக் கூடும். ஆகவே, குழந்தை பிறந்த முதல் 24 மாதங்களில் சர்க்கரை உணவை தவிர்க்க வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Baby Care, Baby food, Sugar

அடுத்த செய்தி