விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் நடித்த சமீரா, அதே நாடகத்தில் நடித்த சையத் அன்வரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த நிலையில் சமீரா கர்ப்பமாகவும் இருக்கிறார். அவரும், கணவர் சயீத் அன்வரும் டீ சர்ட் அணிந்துகொண்டு தங்களுக்கு குழந்தை விரைவில் வர இருப்பதை மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமீரா, இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில் தொடர்ந்து வீடியோ பதிவேற்றி வருகிறார்.
கர்ப்பமாக இருந்தாலும் எப்போதும் போல விளையாடும் வீடியோக்களை அவர் ஷேர் செய்து வருகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். எனினும் அவற்றையெல்லாம் காதில் வாங்கி கொள்ளாத சமீரா, தொடர்ந்து வீடியோ, புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஷேர் செய்துள்ள வீடியோ ஒன்றில், நிறைமாத கர்ப்பமாக உள்ள சமீரா, ஸ்கேட்டிங் செய்கிற வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ள நெட்டிசன்கள், கர்ப்பமாக இருக்கும்போது ஆபத்தான முறையில் இப்படி ஸ்கேட்டிங் செய்யலாமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பலரும் அவரை விமர்சனம் செய்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுத்துள்ள சமீரா, “கர்ப்பகாலம் என்பது நோய் அல்ல. அது பெண்களுக்கு ஒரு அழகான காலகட்டம். கர்ப்பகாலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பது பெண்களுக்கு தெரியும். அவளுடைய உள்ளுணர்வை சந்தேகிப்பதை நிறுத்த வேண்டும். அவள் கடவுள் மீது நம்பிக்கை வைத்து, தன்னையும் தன் உடலையும் குழந்தையையும் நம்பும் வரை எதுவும் தவறாக இருக்காது. எனவே தயவுசெய்து விமர்சனங்களை நிறுத்துங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நடிகை சமீரா trampolineல் ஒரு சிறுவனுடன் குதிக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அதில் நான் ஆக்டிவாக இருக்கும் போது எனது குழந்தை மகிழ்ச்சியாக இருப்பதை உணர்கிறேன் என குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கர்ப்பமாக இருக்கும் போது இப்படி குதிக்கலாமா? என கமெண்ட்ஸ் செய்தனர்.
அதற்கு பதில் அளித்திருந்த சமீரா, 'நான் குதிக்கவில்லை, trampolineல் தான் இருக்கிறேன்’ என கூறியிருந்தார். மேலும் காஞ்சனா படத்தில் வரும் வீரா பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், கமெண்ட்டில் திட்டித் தீர்த்தனர். இதனையடுத்து தன்னை விமர்சித்தவர்களுக்கும், அறிவுரை கூறியவர்களுக்கும் பதிலடி கொடுத்த சமீரா, நீங்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம் என கூலாக கூறிவிட்டு தனது கர்ப்பகாலத்தை சமீரா என்ஜாய் செய்து வருகிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.