இந்தியாவில் கருக்கலைப்பு... சட்டமாக இருந்தாலும் குற்றவாளியாக்கப்படுவது ஏன்..?

இந்தியாவில் நீங்கள் 18 வயது பூர்த்தியானவர் என்றால் யாருடைய அனுமதியுமின்றி சட்டப்பூர்வமாகக் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம்.

இந்தியாவில் கருக்கலைப்பு... சட்டமாக இருந்தாலும் குற்றவாளியாக்கப்படுவது ஏன்..?
வெளியே சென்றால் தண்ணீரை பீச்சி அடிக்கும் ஸ்பிரே பாட்டிலில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு செல்லுங்கள். அதிக வெப்பத்தை உணரும்போது முகத்தில் ஸ்பிரே செய்து குளுமைபடுத்திக்கொள்ளுங்கள். வீட்டில் இருந்தால் முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள்.
  • RedWomb
  • Last Updated: February 13, 2020, 6:08 PM IST
  • Share this:
பாலியல் உறவில் அதிக ஈடுபாடு கொண்டோர் பலரும் உடலுறவை விளையாட்டாகவே பார்க்கின்றனர். அதுதான் அவர்களின் காதலையும் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது என்று நினைக்கின்றனர். வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பதே எதிர்பாராத ஆபத்துகளைக் கடந்துதான் வருகின்றன.

அப்படி உடலுறவு இன்பத்திலும் எதிர்பாராத கருத்தரிப்பு மிகப்பெரிய ஆபத்தாக இருக்கிறது. அதுகுறித்து விரிவாக அலசுகிறார் கட்டுரையாளர் அனகா. இவர் உடலுறவு மற்றும் கருத்தரித்தல் சார்ந்து தீவிரமாக எழுதிவரும் கட்டுரையாளர்.

இந்தியாவில் கருக்கலைப்பு குறித்து எண்ணற்ற கட்டுக்கதைகளும், தவறான புரிதல்களும் உள்ளன. அதற்கு உதாரணமாக ஒரு ஆய்வில் இந்தியப் பெண்களில் 80 சதவீதம் பேர் கருக்கலைப்பு என்பது சட்டப்பூர்வமானது என்பதையே அறியாதவர்களாக இருக்கின்றனர் என்கிறது. அது தேவயற்றை கருத்தரித்தலை தவிர்க்க செய்யப்படும் சிறு மருத்துவச் சிகிச்சை மட்டுமே. இந்தியாவில் 24 வாரத்திற்குள் கருக்கலைப்பு செய்து கொள்ள சட்டப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்படுகிறது.


அதேபோல் கருக்கலைப்பு என்ற விஷயமே தேவையற்ற எண்ணம் என்று நினைக்கின்றனர். அதைப் பற்றிய புரிதல் அவசியம் என்பதையும் பலர் எண்ணுவதில்லை. உதாரணமாக 25 வயதான மனுஷ் என்பவர் “நான் ஆண். நான் கருத்தரிக்கப் போவதில்லை. எனவே அது எனக்கு முக்கியமான விஷயமாகக் கருதவில்லை. எனவே கருக்கலைப்புப் பற்றி எனக்குத் தெரியாது” என்று கூறியுள்ளார். இந்த வார்த்தைகள் அவருடைய காதலி எதிர்பாராத விதமாக கர்பமானதாகவும் அதைக் கலைக்க வரும்போது இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் “நாங்கள் உடலுறவு கொள்ளும்போது எப்போதும் பாதுகாப்பாகத்தான் இருப்போம். இது எவ்வாறு நிகழ்ந்தது என்றே தெரியவில்லை. நாங்கள் ஆணுறை இல்லாமல் உடலுறவுக் கொண்டதேயில்லை. ஆனாலும் இவ்வாறு நிகழ்ந்திருப்பது எனக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது என்றுக் கூறியுள்ளார்“. இப்படித்தான் பலரும் இந்தியாவில் இருக்கின்றனர். ஆணுறை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என நினைக்கும் ஆண்கள் அதன் பின்குறிப்பையும் படிக்கத் தவறுகின்றனர். இதுபோன்ற கருத்தடை பொருட்களில் 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்க மாட்டார்கள். அதில் 99 சதவீதம் மட்டுமே உத்திரவாதம் அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் விடுபட்டிருக்கும் 1 சதவீதம்தான் இப்படி மனுஷ்-க்கு நடந்த சம்பவம்.

மேலும் தொடர்ந்த மனுஷ் “என் காதலி மாதவிடாய் தள்ளிப் போகிறது என்று சொன்னவுடன் என்ன செய்வதென்றே தெரியவில்லை. யாரை அணுக வேண்டும். யாரிடம் பேச வேண்டும் என எதுவும் தெரியவில்லை. பின் பதட்டத்துடன் கருத்தரித்தல் பரிசோதனைக் கருவியை வாங்கி சோதித்ததில் அதில் பாசிடிவ் என்று உறுதியானது“ என்று கூறினார். உடனே இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு கருக்கலைப்பு.ஆனால் அவர்களுக்கு எங்கு போக வேண்டும் யாரை அணுக வேண்டும் என்பது தெரியவில்லை. அவர்கள் சந்தித்த முதல் மகப்பேரு மருத்துவர் பிற்போக்குத்தனமான சிந்தனை கொண்டவர். அவர் திருமணத்திற்கு முன்னரே எப்படி உடலுறவு கொள்ளலாம் என்றும் பொறுப்பற்றவர்கள் என்றும் சாடியுள்ளார். இப்படி அடுத்தடுத்து சென்ற பலரும் இவ்வாறு கூறியுள்ளனர். இறுதியாக சென்றபோது தாங்கள் திருமணமானவர்கள் என்று கூறியுள்ளனர். பின் அவர்களுக்கு வெற்றிகரமாக கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆக என்னதான் கருக்கலைப்பை வெற்றிகரமாக முடித்திருந்தாலும் அதனால் ஏற்பட்ட வலி, பயம், மன உளைச்சல் போன்றவை கருக்கலைப்பு என்று செல்லும்போது ஒவ்வொரு இந்தியனுக்கும் நிகழும் பிரச்னையாக இருக்கிறது. இந்தியாவில் அதுவொரு சாதாரண மருத்துவ சிகிச்சையாக நிகழ்வது இல்லை. இத்தனைக்கும் அது இந்தியாவில் சட்டப்பூர்வமாக அனுமதி கிடைத்தும் இந்த கதி.

ஆக கருத்தரிப்பு என்பது யாருக்கு வேண்டுமாலும் நிகழலாம். அதனால் அவர்கள் பொறுப்பற்றவர்கள், அவர்களுடைய தவறால் நிகழ்ந்துவிட்டது என்று குற்றவாளிகளைப் போல் கேள்வி கேட்பது முறையாகாது. கருக்கலைப்பு என்பது இதுபோன்ற சம்பவங்கள் மட்டுமன்றி கரு வளர்ச்சியின்மை, குழந்தையால் தாய்க்கு ஆபத்து, பொருளாதார நெருக்கடி , பாலியல் வன்கொடுமையால் உருவான கரு போன்ற காரணங்களுக்காகவும் கருக்கலைப்புகள் செய்யப்படுகின்றன. ஆனால் எந்த காரணமாக இருந்தாலும் கருக்கலைப்பு என்பது இந்தியாவில் தனிமனித உரிமை. கருத்தரித்தல் என்பது உணர்ச்சிப்பூர்வமாகவும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நடக்கும் செயல்பாடு. அதை ஒரு பெண்ணிற்கு யாரும் கட்டாயப்படுத்த முடியாது. கட்டாயப்படுத்தவும் கூடாது.

முக்கியமாக சரியான நேரத்தில் சரியான கருக்கலைப்பு என்பது பலருடய வாழ்க்கையை காப்பாற்றியுள்ளது என்பதே உண்மை. அப்படி இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 21 முதல் 40 சதவீதம் கருத்தரித்தல் கருக்கலைப்பிலேயே முடிவடைகிறது. சில நாடுகளில் கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிரானதாகக் கருதப்படுகிறது. அந்த நாடுகளில் மருத்து முறைகளை பின்பற்றாமல் தாங்களாகவே வீடுகளில் கருக்கலைப்பு செய்துகொள்கின்றனர். இது பலவகையால ஆரோக்கியப் பிரச்னைகள், உள்ளுக்குள்ளேயே இரத்தம் கசிதல், சிலருக்கு உயிரிழப்பும் நேரலாம். இதுபோன்ற செயல்களைத் தவிர்க்கவே கருக்கலைப்பு சட்டபூர்வமாக்கப்பட்டு அதுகுறித்த விழிப்புணர்வுகளும் அளிக்கப்படுகின்றன.

எனவே நீங்களோ அல்லது தெரிந்தவர்களோ கருக்கலைப்பு பற்றி கேட்டால் அவர்களை உரிமம் பெற்ற அனுபவம் வாய்ந்த மருத்துவரை அணுகச் சொல்லுங்கள். அதுதான் பாதுகாப்பானது. அதுவும் இந்தியாவில் நீங்கள் 18 வயது பூர்த்தியானவர் என்றால் யாருடைய அனுமதியுமின்றி சட்டப்பூர்வமாகக் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம். அது வலியை ஏற்படுத்துவதாகவும் பயமுறுத்துவதாகவும் இருக்கலாம். ஆனால் அதுதான் முறையான , சரியான தீர்வு.

எனவே நீங்கள் உடலுறவில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் என்றால் முறையான கருத்தடைகளைப் பின்பற்றி பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்ளுங்கள். தேவையற்ற கருத்தரித்தலை தவிறுங்கள். அதேசமயம் கருத்தரித்தலை தவிர்ப்பது உங்கள் உரிமை. அதேசமயம் என்னதான் பாதுகாப்பு வழிகளைப் பின்பற்றினாலும் கருக்கலைப்பு பற்றி தெரிந்துகொள்வது அவசியம் என்கிறார் அனஹா.

 

 

 

 
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading