முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / தூக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் 'மீடியா' பயன்பாடு!

தூக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் 'மீடியா' பயன்பாடு!

bedtime media

bedtime media

Sleeping Habits | குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு மக்கள் தூக்கமின்மையை பற்றி அதிகம் பேசுவதையும், அதிகம் வருத்தப்படுவதையும் பார்க்க முடிகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

படுக்கைக்கு செல்வதற்கு முன் இண்டர்நெட்டில் ப்ரவுஸிங் செய்வது, மியூசிக் கேட்பது, திரைப்படம், டிவி ஷோக்கள் அல்லது யூடியூப் வீடியோக்களைப் பார்ப்பது போன்ற மீடியா பயன்பாட்டினால் ஒருவரின் தூக்கம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது குறித்த ஆய்வை அரேசண்ட் ஆராய்ச்சி (Arecent research) நடத்தியது.

‘ஜர்னல் ஆஃப் ஸ்லீப் ரிசர்ச்’ (Journal of Sleep Research) இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வின் முடிவுகள் வழியாக 'பெட்டைம் மீடியா யூசேஜ்' (Bedtime Media Usage) எவ்வாறெல்லாம் நமது தூக்கத்தை கெடுக்கிறது என்பதை அறிய முடிகிறது.

குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு மக்கள் தூக்கமின்மையை பற்றி அதிகம் பேசுவதையும், அதிகம் வருத்தப்படுவதையும் பார்க்க முடிகிறது. அதிகாலையில் எழும் பழக்கம் கொண்டவர்கள் கூட இரவில் வெகுநேரம் விழித்திருக்கும் நிலைக்குள் தள்ளப்பட்டனர்.

திரைப்படங்கள் அல்லது வெப் சீரீஸ்களைப் பார்க்கத் தொடங்கின அல்லது சோஷியல் மீடியா தளங்களில் ஸ்க்ரோலிங் செய்யத் தொடங்கின. லாக்டவுன்களின் போது வெளியே எங்கும் செல்ல முடியாது, வீட்டிற்குள் செய்ய வேறு எந்த வேலையும் மிச்சம் இல்லை என்கிற நிலை இருந்தது. ஆனால் இந்த "புதிய பழக்கங்கள்" நம் உடலை எந்தளவு பாதிக்கிறது என்பதை பற்றி நீங்கள் அறிவீர்களா? - அதற்கான விடை தான் - இந்த ஆய்வு!

இந்த ஆய்வில், 58 பெரியவர்கள் தினமும் தத்தம் நாட்குறிப்புகளை எழுதி வைக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டனர். அதாவது படுக்கைக்கு செல்வதற்கு முன் மேற்குறிப்பிட்ட 'மீடியா'க்களுடன் செலவழித்த நேரம், அவைகளை பயன்படுத்தும் இடம் மற்றும் மல்டி டாஸ்கிங் தொடர்பான தகவல்களை நாட்குறிப்புகளாக பதிவு செய்யும் படி கேட்டு கொள்ளப்பட்டனர்.

Also Read : இந்த ஆண்டுக்கான சிறந்த ஹெல்த்கேர் தொழில்நுட்பங்கள்

இந்த ஆய்வில் எலெக்ட்ரோஎன்செபலோகிராபி (Electroencephalography) சோதனையும் அடங்கும், அதாவது தூங்க செல்லும் நேரம், மொத்த தூக்க நேரம் மற்றும் தூக்கத்தின் தரம் போன்றவைகளை அறிய, உச்சந்தலையில் இணைக்கப்பட்ட சிறிய மெட்டல் டிஸ்க்களை ( உலோக வட்டுகள்) பயன்படுத்தி மூளையின் எலெக்ட்ரிக்கல் ஆக்டிவிட்டியை (மின் செயல்பாட்டை) கண்டறியும் சோதனைகளும் இந்த ஆய்வில் நடத்தப்பட்டது.

Also Read : ஆண்களை அதிகமாக தாக்கும் 5 ஆபத்தான நோய்கள்..

இந்த ஆய்வின் வழியாக, உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் 'மீடியா'க்களைப் பயன்படுத்துவது முந்தைய உறக்க நேரத்துடன் தொடர்புடையது என்பதும், படுக்கைக்கு செல்வதற்கு முன்பான மீடியா பயன்பாடானது மல்டி-டாஸ்கிங்கை உள்ளடக்கியிருக்கவில்லை என்றால், அது படுக்கையில் நடத்தப்பட்டிருந்தால், அது மொத்த தூக்க நேரம் (total sleep time) மற்றும் தூக்க தரத்துடன் ( sleep quality) தொடர்புடையது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

'மீடியா'க்களின் நீண்ட பயன்பாடு ஆனது பின்வரும் தூக்க நேரம் (later bedtime) மற்றும் குறைவான மொத்த தூக்க நேரத்துடன் (Less total sleep time) தொடர்புடையது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆய்வின் சுவாரசியமான விடயம் என்னவென்றால், படுக்கைக்கு செல்வதற்கு முன்பான 'மீடியா' பயன்பாடு தூக்கத்தின் தரத்தை பாதிக்கவில்லை என்பதே ஆகும்.

Also Read : புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் கவனத்திற்கு... தூக்கமின்மையை போக்க எளிமையான 10 டிப்ஸ்கள்!

டெலாவேர் பல்கலைக்கழகத்தின் (University of Delaware) பிரபல எழுத்தாளர் மோர்கன் எலிதோர்ப் (Morgan Ellithorpe), "நீங்கள் படுக்கைக்கு செல்வதற்கு முன் டிவி பார்ப்பது அல்லது இசையைக் கேட்பது போன்ற மீடியாக்களைப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், அதை குறுகிய மற்றும் கவனத்தோடு செய்யும் ஒரு வேலையாக கையாளுங்கள், (அப்படி செய்தால் ) அன்றிரவு தூக்கத்தில் நீங்கள் எதிர்மறையான விளைவுகளை அனுபவிக்க வாய்ப்பு இல்லை" என்று கூறி உள்ளார்.

First published:

Tags: Lifestyle, Mobile Phone Users, Sleepless