Home » News » Lifestyle » HEALTH A SINGLE COUGH DROPLET CAN TRAVEL CLOSE TO 7 METERS FINDS NEW RESEARCH ESR GHTA

இருமலின்போது வெளியாகும் நீர்த்துளிகள் 7 மீட்டர் வரை பயணிக்கும்.. அதிகரிக்கும் நோய் பரவல் அபாயம்.. ஆய்வில் தகவல்..

மாஸ்க் அணிவதோடு மட்டுமல்லாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்கிறோம், ஏனெனில் இருமலில் இருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்திலுள்ள ஒரு நபருக்கு அந்த இருமல் நீர்த்துளி படிவுகள் குறைவாகவே அடைகிறது.

இருமலின்போது வெளியாகும் நீர்த்துளிகள் 7 மீட்டர் வரை பயணிக்கும்.. அதிகரிக்கும் நோய் பரவல் அபாயம்.. ஆய்வில் தகவல்..
மாதிரி படம்
  • Share this:
நோய்க்கிருமிகளை பரப்புவதில் இருமல் மற்றும் தும்மலின் பங்கு ஏராளம். கொரோனா தொற்றுநோய்களின் போது இருமல் நீர்த்துளிகள் செல்லும் தூரத்தை கண்காணிக்கும் ஆய்வுகள் இன்றைய காலங்களில் அதிகரித்துள்ளன, இதுபற்றிய சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில், இருமல் துளியானது வினாடிக்கு 2 மீட்டர் வேகத்தில், 6.6 மீட்டர் வரை பயணிக்க முடியும் என்று தெரியவந்துள்ளது.

மேலும் அந்த இருமல் நீர்த்துளியானது ஆவியாதல் காரணமாக வறண்ட காற்று உள்ளபோதும் இத்தகைய நிலைதான் ஏற்படுகிறது. வைரஸ் பரவுதல் பற்றிய புரிதலை ஆழப்படுத்த சிங்கப்பூரை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் திரவ இயற்பியலின் (Fluid Physics) முக்கிய அம்சங்களை இணைத்துள்ளனர்.

'Physics of Fluids' இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், சிங்கப்பூரில் உள்ள உயர் செயல்திறன் கணினி நிறுவனத்தின் ஆய்வாளர்கள், அதிக நம்பகத்தன்மை கொண்ட காற்றோட்ட உருவகப்படுத்துதலை பயன்படுத்தி இருமும்போது வெளிப்படும் நீர்த்துளி சிதறல் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.இந்த ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவரான ஃபாங் யூ லியோங் "மாஸ்க் அணிவதோடு மட்டுமல்லாமல், சமூக இடைவெளியை பொதுவாக நம்மில் பலரும் கடைபிடிக்கிறோம், ஏனெனில் இருமலில் இருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்திலுள்ள ஒரு நபருக்கு அந்த இருமல் நீர்த்துளி படிவுகள் குறைவாகவே அடைகிறது," என்று கூறுகிறார்.


நோய் எதிர்ப்பு சக்திக்காக வீட்டில் கசாயம் தயாரிக்கிறீர்களா? நீங்கள் முக்கியமாக கவனிக்கவேண்டியவை என்னென்ன?

ஆய்வின் மற்றொரு ஆசிரியரான ஹொங்கிங் லி ஒரு சாதாரணமான இருமல் பரந்த அளவில் ஆயிரக்கணக்கான நீர்த்துளிகளை வெளியிடுகிறது. புவியீர்ப்பு காரணமாக பெரிய இருமல் நீர்த்துளிகள் விரைவாக நிலத்தில் வீழ்வதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர், ஆனால் சிறிய இருமல் நீர்த்துளிகள் காற்றில் மிதந்து கிட்டத்தட்ட 7 மீட்டர்கள் வரை பயணிக்கிறது. நடுத்தர அளவிலான நீர்த்துளிகள் சிறிய நீர்த்துளிகளாக ஆவியாகக்கூடும், அவை இலகுவானவை மற்றும் காற்றினால் எளிதில் மற்ற இடங்களுக்கு கடத்தப்படுகின்றன.

இந்த ஆய்வின்போது இருமல் நீர்த்துளிகள் பரவுவதைப் பற்றிய விரிவான படத்தை ஆராய்ச்சியாளர்கள் வழங்குகிறார்கள், ஆவியாகும் நீர்த்துளி வைரஸ் உள்ளடக்கத்தை தக்க வைத்துக் கொள்கிறது, எனவே இருமல் துளியில் வைரஸ் இருப்பை நீண்ட நேரம் தக்கவைக்கிறது," என்று கூறினார். இதன் பொருள் ஏரோசோல்களாக மாறும் ஆவியாக்கப்பட்ட நீர்த்துளிகள் நுரையீரலில் ஆழமாக உள்ளிழுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், இதனால் தொற்றுநோயானது சுவாசக் குழாயின் கீழ், ஆவியாகாத நீர்த்துளிகளைக் காட்டிலும் குறைவாக இருக்கும்" என்று எச்சரிக்கின்றனர்.

ஆராய்ச்சியாளர்கள் கணக்கீட்டு கருவிகளை பயன்படுத்தி காற்றோட்டத்தையும், மனித உடல்களை சுற்றியுள்ள காற்றில் பரவும் இருமல் துளிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது பல்வேறு காற்றின் வேகம் மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகளால் இருமல் நீர்த்துளிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். ஆய்வாளர்கள் பல நபர்களை கொண்டு இந்த ஆய்வினை மதிப்பீடு செய்தனர்.இந்த கண்டுபிடிப்புகள் காற்றின் வேகம், ஈரப்பதத்தின் அளவுகள் மற்றும் சுற்றுப்புற காற்று வெப்பநிலை போன்ற சுற்றுச்சூழல் நிலைமைகளைப் பெரிதும் சார்ந்துள்ளது, மேலும் கோவிட் -19 வைரஸின் நம்பகத்தன்மை குறித்து தற்போதுள்ள அறிவியல் குறிப்புகளிலிருந்து பெறப்பட்ட அனுமானங்களின் அடிப்படையில் இவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சி வெப்பமண்டல சூழலில் வெளிப்புற வான்வழி பரவலை கொண்டிருந்தாலும், விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளை உட்புற மற்றும் வெளிப்புற அமைப்புகளில் அதாவது பொது மக்கள் கூடும் மாநாடுகள் அல்லது தியேட்டர்கள் போன்றவற்றில் மதிப்பீடு செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
First published: November 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading