சமீப காலமாக பலர் திடீரென ஏற்படும் மாரடைப்பினால் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. முக்கியமாக அவ்வாறு உயிரிழக்கும் இளம் வயதினர் பலருக்கும் மாரடைப்பு வருவதற்கான காரணமாக கூறப்படும் சர்க்கரை வியாதி, அதிகமான ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு போன்ற பிரச்சனைகள் அறவே கிடையாது. ஆனாலும் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது மருத்துவ உலகத்தில் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.
சமீபத்தில் டெல்லியை சேர்ந்த 42 வயது மனிதர் ஒருவருக்கு, தன்னுடைய குடும்பத்தாருடன் பயணம் செய்யும்போது திடீரென மாரடைப்பு உண்டாகி உள்ளது. முதலில் வலியால் துடித்த அவர், தன் குடும்பத்தாருக்கு இதைப்பற்றி தெரிவித்துக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்துள்ளார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்தபோது கிட்டத்தட்ட ரத்த நாளங்கள் அனைத்திலும் 100% அடைப்புகள் இருந்ததாகக மருத்துவர்கள் தெரிவித்தனர். இத்தனைக்கும் அந்த நபருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான எந்தவிதமான அறிகுறிகளும், வேறு எந்த உடல் நலக் குறைபாடுகளும் இருந்ததில்லை. அதிர்ஷ்டவசமாக ஆஞ்சியோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
மாரடைப்பு ஏற்பட்டவுடன் முதலில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அவர் கார்டியோஜினிக் ஷாக் மூலம் சுய நினைவுக்கு கொண்டு வர முயற்சி செய்துள்ளார்கள். எதுவும் பலன் தராததால் இந்திர பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லும் வழியில் கூட அவருக்கு சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை செய்துள்ளனர். இதைப் பற்றி பேசிய அமித் மிட்டல் எனப்படும் இதய நல மருத்துவர், நோயாளியின் ரத்த நாளங்கள் 90%-100% வரை அடைப்புகள் இருந்தது. ஆஞ்சியோகிராபி மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் நாங்கள் அதனை முடிந்த அளவு சரி செய்துள்ளோம். தற்போது அவருடைய இதயம் சாதாரணமாக எந்தவித பிரச்சனையுமின்றி இயங்குகிறது. இரண்டு நாட்கள் சிகிச்சையின் பிறகு அவருக்கு அளிக்கப்பட்ட வென்டிலேட்டர் வசதி நீக்கப்பட்டு மிக சாதாரணமான நிலையில் அவர் வைக்கப்பட்டிருந்தார்.
நோயாளியின் இதய செயல்பாடு 30 சதவீதம் வரை அதிகரித்த பிறகு, அவர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது அவருடைய இதயம் 60 சதவீதம் வரை ஆரோக்கியமாக இயங்குகிறது என்று மருத்துவர் கூறியுள்ளார்.
இதைப் பற்றி பேசிய முகேஷ் கோயல் எனப்படும் மற்றொரு சீனியர் இதய சிகிச்சை நிபுணர் கூறுகையில் , நோயாளி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதிலிருந்து மிகவும் சீரியஸான நிலையில் தான் இருந்தார். நேரம் அதிகரிக்க அதிகரிக்க அவரது உடல்நிலை மோசமாகி கொண்டே சென்றது. வென்ட்ரிகுலர் ஃபிப்ரிலியேஷன் எனப்படும் அதிக எண்ணிக்கையிலான மாரடைப்புகளை ஏற்படுத்தும் பிரச்சனையால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.
Also Read : இளைஞர்களிடையே அதிகரிக்கும் மாரடைப்பு.. என்ன காரணம்..? தடுக்கும் வழிகள் என்னென்ன.?
பலமுறை ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தும் நோயாளியின் உடல்நிலை எந்தவித முன்னேற்றமும் தெரியவில்லை. மருத்துவமனையில் இருந்து விடுவித்த பிறகு, உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் சிகிச்சையில் நோயாளி இருந்து வருகிறார். தற்போது அவர் தன்னுடைய வாழ்க்கை முறையை முற்றிலுமாக மாற்றி தினமும் உடற்பயிற்சி செய்து, உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வருகிறார். மூன்று மாதங்கள் கழித்து 30 லிருந்து 40 நிமிடங்கள் வரை சைக்கிள் ஓட்டவும், 3 முதல் 4 கிலோமீட்டர் வரை நன்றாக நடை பயிற்சி செய்யவும் முடியும் என மருத்துவர் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Blood Pressure, Diabetes, Heart attack