காட்டன் பட்ஸ் பயன்படுத்தியவருக்கு மூளையில் அடைப்பு

பட்ஸ் பயன்படுத்தும்போது அழுக்குகள்  இன்னும் உள்ளே சென்று அடைப்பை ஏற்படுத்தும்.

news18
Updated: March 20, 2019, 6:01 PM IST
காட்டன் பட்ஸ் பயன்படுத்தியவருக்கு மூளையில் அடைப்பு
காட்டன் பட்ஸ்
news18
Updated: March 20, 2019, 6:01 PM IST
காதில் உள்ள அழுக்குகளை நீக்கவும், காதில் புகுந்த நீரை எடுக்கவும் காட்டன் பட்ஸைதான் அனைவரும் பயன்படுத்துவோம். அப்படித்தான் பிரிட்டனைச் சேந்த 31 வயது இளைஞரும் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், காதை சுத்தம் செய்ய பயன்படுத்திய பட்ஸே அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

லைவ் சைன்ஸ் பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில், சில நாட்களாகவே அந்நபரின் வலதுபுற காது சரியாகக் கேட்காமல் இருந்திருக்கிறது. பின் குறைந்த வலியும் ஏற்பட்டுள்ளது. அதற்காக மருத்துவமனை சென்று மருந்துகள் வாங்கி சரிசெய்திருக்கிறார். பத்து நாட்கள் கழித்து, வலது புறமாக ஒற்றைத் தலைவலியால் துடித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னைகளையும் சந்தித்துள்ளார். அவரது ஞாபகத் திறனும் மங்கியுள்ளது.

இதனால் நண்பர்களின் பெயர்களையே மறந்துள்ளார். இதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டு மருத்துவமனையை நாடியுள்ளார். மருத்துவர்கள் தலையில் சிடி ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. பின் காதின் கால்வாயில் சிறு அறுவை சிகிச்சை செய்து அடைப்பை எடுத்தபோது மென்மையான பஞ்சு கிடைத்துள்ளது. இதற்குக் காரணம் அவர் அதிகமாக பட்ஸ் பயன்படுத்தியதே என்பதையும் உறுதி செய்துள்ளனர்.


அவர் பட்ஸை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தியபோது சில பட்ஸ் பஞ்சு நூல்கள் காது கால்வாயிலேயே நின்றிருக்கின்றன. இந்த பிரச்னை அவருக்கு கடந்த ஐந்து வருடங்களாக இருந்துள்ளது. தற்போதுதான் அதன் வீரியம் அதிகரிக்க மருத்துவரை அனுகியுள்ளார். அவர் பயன்படுத்திய பட்ஸ் பஞ்சு துகள்கள் காதின் கால்வாய் வழியாக மூளையில் சிக்கி அடைப்பை ஏற்படுத்தியுள்ளன.

அதன் தொடர்ச்சியாக வீக்கமும் நரம்பியல் சிக்கல்களும் ஏற்பட்டதாக மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர். அவை மூளையை தீவிரமாகப் பாதிப்பதற்கு முன்னரே இந்தப் பிரச்னையைக் கண்டறிந்ததால்தான் அவரைக் காப்பாற்ற முடிந்தது என்று கூறிய மருத்துவர்கள், இனி அவரை பட்ஸ் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

அதேபோல் ’தி கார்டியன் ’ பத்திரிகைக் குறிப்பில் காட்டன் பட்ஸ் பயன்படுத்தும்போது அழுக்குகள்  இன்னும் உள்ளே சென்று அடைப்பை ஏற்படுத்தும். இதனால் காது கேளாமை போன்ற பல பிரச்னைகள் ஏற்படும். அதனால் காதுகளில் உள்ள அழுக்கை எடுக்க மருத்துவரை அணுகுவதே சிறந்தது எனக் அறிவுறுத்தியுள்ளது.
First published: March 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...