கொரோனா சமயத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கட்டாயம்..! மருத்துவர்கள் விளக்கம்

கொரோனா சமயத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கட்டாயம்..!  மருத்துவர்கள் விளக்கம்

தாய்ப்பால்

புதிதாக பிறந்துள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது அவர்களை நோய்கள் தாக்காமல் பாதுகாக்கிறது, மேலும் குழந்தை மற்றும் வளரும் பருவத்தில் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

  • Share this:
கோவிட் தொற்று நோயின் இரண்டாவது அலைகள் இந்தியாவில் தீவிரமாக இருக்கும் நிலையில், முன்பை விட ஆரோக்கியம் இப்போது எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். தொற்றின் தீவிரம் அதிகரித்து அதன் காரணமாக ஏற்பட்டுள்ள விளைவுகள் நம் அனைவருக்கும் ஒரு மன அழுத்தமான நேரமாக உள்ளது. கண்ணிற்கு தெரியாத வைரஸ் தொற்று மனித குலத்தை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில் புதிதாக பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது பாதுகாப்பானதா என்ற சந்தேகம் பல இளம் தாய்மார்களுக்கு எழுந்துள்ளது.

இதற்கு பதில் அளித்துள்ள சுகாதார நிபுணர்கள், புதிய தாய்மார்கள் சில பரிந்துரைக்கப்பட்ட முன்னெச்சரிக்கைகளுடன் கோவிட்-19 தொற்று நோய்களின் போது வெற்றிகரமாக தாய்ப்பால் கொடுக்கலாம் என்று கூறியுள்ளனர். புதிதாக பிறந்துள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது அவர்களை நோய்கள் தாக்காமல் பாதுகாக்கிறது, மேலும் குழந்தை மற்றும் வளரும் பருவத்தில் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. குறிப்பாக தொற்று நோய்களுக்கு எதிராக தாய்ப்பால் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு, தாயிடமிருந்து ஆன்டிபாடிகள் பரிமாறப்படுவதால் அது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது என்று கூறி உள்ளனர். பின்வரும் கேள்விகளுக்கு நிபுணர்கள் அளித்துள்ள பதில்களை பார்க்கலாம்.

தொற்று நோய்களின் போது தாய்ப்பால் கொடுக்கலமா.?

நிச்சயம் கொடுக்கலாம், தாய்ப்பால் குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் ஆன்டிபாடிகளை வழங்கி ஆரோக்கியத்தை அளிக்கிறது மற்றும் பல தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது. தாய்ப்பாலில் உள்ள ஆன்டிபாடிகள் மற்றும் பயோஆக்டிவ் காரணிகள் கோவிட் நோய் தொற்றுக்கு எதிராக போராட கூடும். ஆறு மாதங்களுக்குள் இருக்கும் குழந்தைகள் என்றால் அவர்களுக்கு பிரத்யேகமாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 6 மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தை என்றால் ஆரோக்கியமான உணவுகளுடன் தாய்ப்பால் கொடுப்பதை தொடரலாம்.தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு கோவிட் பரவுமா..?

கோவிட்-19 தொற்று நோய் பரவ துவங்கியதிலிருந்தே பல்வேறு நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்ட தாய்மார்களின் தாய்ப்பாலை பரிசோதித்துள்ளனர். ஆனால் தற்போது வரை தொற்று நோயை ஏற்படுத்தும் கோவிட்-19 வைரஸ் தாய்ப்பாலில் இல்லை மற்றும் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பரவுதல் நிரூபிக்கப்படவில்லை.

கோவிட் தொற்றோ / அறிகுறியோ இருப்பதாக சந்தேகித்தால் தாய்ப்பால் கொடுக்கலாமா.?

ஆம், பொருத்தமான முன்னெச்சரிக்கைகளுடன் தாய்ப்பால் கொடுக்கலாம். தொற்று அல்லது கொரோனா அறிகுறி இருந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் மாஸ்க் அணிவது, குழந்தையை தொடுவதற்கு முன்னும், பின்னும் கைகளை சுத்தப்படுத்தி கொள்வது, தாய்ப்பால் கொடுத்தற்கு முன் மாறும் கொடுத்த பின் மார்பகங்களை கழுவி சுத்தம் செய்து கொள்வது உள்ளிட்ட தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றலாம்.

தாய்க்கு கொரோனா அறிகுறி இருந்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா..?

பிற நடவடிக்கைகள் பின்வருமாறு:

* மேற்பரப்புகளை தொடர்ந்து சுத்தம் செய்தல் மற்றும் கிருமி நீக்கம் செய்தல்

* குழந்தையை உங்கள் படுக்கையிலிருந்து குறைந்தபட்சம் 6 அடி தூரத்தில் வைத்திருத்தல்

* தாய்ப்பால் கொடுக்காத நேரத்தில் ஆரோக்கியமான உறவினரை வைத்து குழந்தையை பராமரிக்க வேண்டும்.உடல்நிலை மிகவும் சரியில்லாத நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க என்ன செய்வது?

மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் குழந்தைக்கு தாய்ப்பாலை பாதுகாப்பாக வழங்க வேறு வழிகளை கண்டுபிடிக்க இளம் தாய் முயற்சிக்க வேண்டும். தாய்ப்பாலை எடுத்து வைத்து கொண்டு சுத்தமான கப் மற்றும் ஸ்பூன் வழியாக பால் கொடுக்கலாம். பால் உற்பத்தியை தக்க வைக்க தாய்ப்பாலை வெளிப்படுத்துவதும் முக்கியம். எனவே தாய்ப்பால் கொடுக்க ஏதுவான உடல்நிலை வந்தவுடன், தவறாமல் நேரடியாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ஆரோக்கியமான சில ஊட்டச்சத்து குறிப்புகள்!

குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத போது தாய்ப்பால் கொடுக்கலாமா?

குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்கலாம். குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை தாய்ப்பால் அதிகரிக்கும் என்பதால் COVID-19 அல்லது வேறு ஏதேனும் நோயால் குழந்தை பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, தாய்ப்பாலுடன் அவர்களுக்கு தொடர்ந்து ஊட்டமளிப்பது முக்கியம்.

 
Published by:Sivaranjani E
First published: