கோவிட் தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் கணிசமாக குறைந்துள்ள நிலையில், தற்போது ஒமிக்ரான் (omicron) வைரஸ் சில நாடுகளில் தீவிரமாக பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒமிக்ரான் பீதிக்கு மத்தியில் டெல்லி மருத்துவமனையொன்றின் மருத்துவர்கள் நடத்திய புதிய ஆய்வு ஒன்றின் முடிவு, குறிப்பிட்ட 3 பிளட் குரூப்பை சேர்ந்தவர்கள் மிகவும் எளிதாக கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறுகிறது.
சர் கங்கா ராம் மருத்துவமனை (SGRH) சமீபத்தில் வெளியிட்ட புதிய ஆய்வில், A, B மற்றும் Rh+ பிளட் குரூப் உள்ளவர்கள் கோவிட்-19 தொற்றுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். அதே சமயம் O, AB மற்றும் Rh- ஆகிய பிளட் குரூப் கொண்டவர்கள் கோவிட் தொற்றின் குறைவான ஆபத்தில் உள்ளனர் என் தெரிவிக்கப்பட்டு உள்ளது. Frontiers in Cellular and Infection Microbiology இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, B பிளட் குரூப் கொண்ட பெண்களை காட்டிலும் இதே பிளட் குரூப்பை கொண்ட ஆண்கள் கோவிட்-19 நோயால் அதிகம் பாதிக்கப்படுவதை காட்டுகிறது.
ஆய்வு முடிவு தொடர்பாக சர் கங்கா ராம் மருத்துவமனை (SGRH) வெளியிட்ட அறிக்கையில், "2020-ம் ஆண்டு ஏப்ரல் 8 - அக்டோபர் 4 வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் 2,586 கோவிட்-பாசிட்டிவ் நோயாளிகளிடம் ரியல் டைம் PCR (RT-PCR) மூலம் பரிசோதனை நடத்தப்பட்டது. இவர்களின் மாதிரிகளில் SGRH ஆராய்ச்சித் துறை மற்றும் ரத்த மாற்று மருத்துவ துறை நடத்திய ஆய்வில், A, B மற்றும் Rh+ பிளட் குரூப் உள்ளவர்கள் கோவிட்-19 தொற்றுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றனர், அதேசமயம் O, AB மற்றும் Rh- உள்ளவர்களுக்கு கோவிட்-19 தொற்று ஏற்படும் அபாயம் குறைவு" என கூறப்பட்டு உள்ளது.
உடலில் நடக்கும் இந்த 5 விஷயங்களை உங்களால் தடுக்கவே முடியாது : தோல் மருத்துவர்கள் விளக்கம்
ஆனால் 60 வயதுக்கு குறைவான AB வகை பிளட் குரூப்பை கொண்டவர்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதும் கண்டறியப்பட்டது. அதே சமயம் பிளட் குரூப்புகளுக்கும் நோயின் தீவிரத்தன்மை மற்றும் இறப்பு ஆகியவற்றிற்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
SARS-CoV-2 ஒரு புதிய வைரஸ் என்பதால் பிளட் குரூப்கள் கோவிட்-19 ஆபத்து அல்லது முன்னேற்றத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனவே இந்த ஆய்வில் கோவிட்-19 பாதிப்பு, முன்கணிப்பு, மீட்பு நேரம் மற்றும் இறப்பு ஆகியவற்றுடன் ABO மற்றும் Rh பிளட் குரூப்களின் தொடர்பை நாங்கள் ஆராய்ந்தோம் என SGRH ஆராய்ச்சித் துறையின் ஆலோசகர் டாக்டர் ரஷ்மி ராணா தெரிவித்து இருக்கிறார்.
பிளட் குரூப்கள் A மற்றும் Rh + வகைகள் குறைவான மீட்புக் காலத்துடன் தொடர்புடையவை என்றும், O மற்றும் Rh- ஆகிய பிளட் குரூப்கள் அதிக மீட்புக் காலத்துடன் தொடர்புடையவை என்றும் இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் தரவுகள் மற்றும் மாதிரிகளை கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின் போது, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் அல்லது இறந்தவர்கள் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கடைசி நாள் வரை ஃபாலோ-அப் மேற்கொள்ளப்பட்டது என்று மருத்துவமனை அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Covid-19, Omicron, Research