95 சதவிகித இந்தியர்கள் ஆணுறையைப் பயன்படுத்துவதில்லை - ஆய்வில் தகவல்

தமிழ்நாட்டில் வெறும் 0.8 சதவீதம் பேர் மட்டும்தான் ஆணுறைப் பயன்படுத்துகின்றனர்.

95 சதவிகித இந்தியர்கள் ஆணுறையைப் பயன்படுத்துவதில்லை - ஆய்வில் தகவல்
ஆணுறை
  • News18
  • Last Updated: July 13, 2019, 10:51 PM IST
  • Share this:
கடந்த 11  தேதி உலக மக்கள் தொகை தினம் முடிந்தது. அதை ஒட்டி உலக அளவில் பல அமைப்புகள் சில தகவல்களை வெளியிட்டன. அதில்தான் இந்த அதிர்ச்சி தரும் செய்தியும் வெளியானது. அதில் பெரும்பான்மையான ஆண்கள் ஆணுறைப் பயன்படுத்துவதில்லை என்று கூறியுள்ளது.

அதுவும் 100 சதவீதத்தில் 95 சதவீதம் ஆண்கள் ஆணுறைப் பயன்படுத்துவதில்லை என்றும், அவர்களுக்கு பயன்படுத்துவதில் விடுப்பமில்லை என்றும் கருத்து தெரிவித்ததாகக் கூறியுள்ளது.

இதில் என்னவொரு மிகப்பெரும் ஆச்சரியம் என்றால் அதன் முக்கியத்துவம் தெரிந்தும் பயன்படுத்துவதில்லை என்பதுதான். தேசிய குடும்ப நலன் (The National Family Health ) எடுத்த கருத்துக் கணிப்பில் 97.9 சதவீதம் இந்திய ஆண்கள் பாலியல் ரீதியாக அதிக ஈடுபாட்டில் இருக்கிறார்கள்.


அதேசமயம் அவர்களுக்கு ஆணுறைக் குறித்த முக்கியத்துவமும் தெரிந்துள்ளது. மொத்த எண்ணிக்கையில் 94 சதவீதம் பேர் ஆணுறைப் பயன்படுத்துவதில் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். இருப்பினும் சிலர் அவர்களின் சுயமோகத்தால் ஆணுறைப் பயன்படுத்துவதில் விருப்பமில்லாமல் பயன்படுத்துவதைத் தவிர்க்கின்றனர் என்று கூறியுள்ளது.மக்கள் தொகை அதிகரிப்பைக் குறைக்கும் நோக்கத்திகாக அரசாங்கமே இலவசமாக ஆணுறை வழங்கி ஊக்குவிக்கிறது. தனியார் நிறுவனங்களும் மக்களை ஈர்க்க பல வகையான ஃப்ளேவர்களில் ஆணுறைகளை விற்பனை செய்கிறது. இருப்பினும் சுய இன்பத்திற்காக பயன்படுத்தாது தவிர்ப்பது அதன் நோக்கத்தையே நசுக்கும் செயலாக இருக்கிறது.கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் 2070-ல் சீனாவையே விஞ்சும் அளவிற்கு மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் பெறப்போகிறது என்று எச்சரிக்கை விடுத்தது.

தேசிய குடும்ப நலன், 2018-ம் ஆண்டு எடுத்த அறிக்கையிலும் திருமணம் ஆனவர்களில் 95 சதவீதம் பேர் ஆணுறைப் பயன்படுத்துவதில்லை என்று கூறியுள்ளது.இதில் ஆணுறை ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை சதவீதம் பேர் பயன்படுத்துகின்றனர் என்று பட்டியலிட்டுள்ளது. அதில் சண்டிகர் 27.3%, டெல்லி 19 %, பஞ்சாப் 18.9%, உத்திரகண்ட் 16.1%, ஹிமாச்சலப் பிரதேசம் 12.7%, ஆந்திரா 0.2 %, தெலுங்கானா 0.5%, தமிழ்நாடு 0.8%, புதுச்சேரி 0.8% பிஹார் 1 % என ஆணுறைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அளித்துள்ளது.

இதில் தமிழ்நாட்டில் வெறும் 0.8 சதவீதம் பேர் மட்டும்தான் ஆணுறைப் பயன்படுத்துகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்