சானிடரி பேடுகள் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் தவிர்க்க முடியாத தேவையாக உள்ளது. பள்ளிக்கு செல்லும் சிறுமிகளுக்கு தொடங்கி வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வரை சானிடரி பேடுகள்தான் தைரியத்தை அளிக்கின்றன. அதுதான் மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கான நம்பிக்கை என சானிடரி பேட் நிறுவனங்களும் விளப்பரம் செய்கின்றன. ஆனால் அதுதான் பெண்களுக்கு எதிர்காலத்தின் பேராபத்து என்கிறது சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு.
டெல்லியை சேர்ந்த தொண்டு நிறுவனம் Wrapped in Secrecy: Toxic Chemicals in Menstrual Products என்கிற பெயரில் நடத்திய இந்த ஆய்வில், இந்தியாவில் விற்கப்படும் சானிடரி பேடுகளில் பெரும்பாலானவை நச்சுத்தன்மை நிறைந்தவை என கண்டறிந்துள்ளது.
சந்தையில் விற்கப்படும் 90% சானிடரி பேடுகளில் நச்சுத்தன்மை நிறைந்த கெமிக்கல்கள் இருப்பதாகவும், குறிப்பாக பிளாஸ்டிக் துகள்களை கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளது. இதனால் ஆபத்து நிறைந்த ஆரோக்கிய சிக்கல்கள் வரலாம் என எச்சரிக்கிறது.
பேடுகளில் பயன்படுத்தப்படும் நச்சுகலந்த கெமிக்கல்களாக பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிசைசர்கள், டையாக்ஸின்கள் மற்றும் ஃபுரான்கள், செயற்கை வாசனை திரவியங்கள், பூச்சிக்கொல்லி எச்சங்கள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் (genetically modified organisms (GMOs) ) போன்றவை இருப்பதாக பட்டியலிட்டுள்ளது. குறிப்பாக அதில் இருக்கும் பிளாஸ்டிக் வஜைனாவின் ஈரத்தன்மையை சமன் செய்யும் மைக்ரோஃப்ளோரா என்னும் சுரப்பியை தொந்தரவு செய்வதால் சிரங்கு, அரிப்பு, பிறப்புறுப்பு பாதை நோய்த்தொற்றுகள் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும் என்கிறது. குறிப்பாக இந்த பிளாஸ்டிக் பெண் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் கடுமையான பக்கவிளைவுகளை உண்டாக்கும் என கூறுகிறது.
இது தவிர பேடுகளின் உறிஞ்சும் தன்மையை அதிகரிக்கவும் , துர்நாற்றத்தை தவிர்க்கவும் பயன்படுத்தப்படும் செயற்கை வாசனை பொருட்கள், பசைகள், ஈரப்பதம் தடைகள், உறிஞ்சிகள் மற்றும் பைண்டர்கள் ஆகியவை உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. இவை பெண்களுக்கு குழந்தையின்மை, புற்றுநோய் மற்றும் பிறப்புறுப்பு குறைபாடு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கக் கூடிய ஆற்றல் கொண்டவை.
பூச்சிக்கொல்லி எச்சம் (Pesticide residue ) என்பது சானிட்டரி பேட்களின் பருத்தியில் சேர்க்கப்படும் ஒரு பொதுவான பொருளாகும், அதில் டையாக்ஸின்கள் மற்றும் ஃபுரான்கள் ப்ளீச்சிங் ஏஜெண்டுகள் ஆகியவை இருக்கின்றன. எனவேதான் அவை எவ்வளவு கறை பட்டாலும் சுத்தமான தோற்றத்தை அளிக்கின்றன.
Also Read : மாரடைப்பு வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்..? இளஞர்களை தற்காத்துக்கொள்ளும் வழிகள்..!
சானிடரி பேடுகளில் பயன்படுத்தப்படும் பேத்தலேட்ஸ் சுற்றுச்சூழலுக்கும் கேடு தரும். இந்த சானிடரி பேட் நிறுவனங்கள் இந்த நச்சு கொண்ட இரசாயனங்களை, பரிந்துரைக்கப்படும் அளவை மீறி பயன்படுத்துவதால் பூப்பெய்திய சிறுமிகளுக்கு கடுமையான பிரச்சனைகளை விளைவிக்கும் என்கிறது. அதாவது அவர்களின் பிறப்புறுப்பு சினைப்பையின் சவ்வுகள் மிகவும் மென்மையாக இருக்கும் என்பதால் அந்த பேடுகளில் உள்ள நச்சு இராசயனங்களை எளிதில் உறிஞ்சிக்கொள்ளும். இதனால் அவர்களுக்கு எதிர்காலத்தில் குழந்தை பிறப்பதில் சிக்கல், இனப்பெருக்க ஆரோக்கியத்தில் தாக்கம் , கரு வளர்ச்சி குறைபாடு, இதய செயல்பாடுகளில் பாதிப்பு போன்றவை வரக்கூடும் என அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது.
பேடுகளில் உடனே ஆவியாகும் தன்மை கொண்ட கரிம சேர்மங்களும், குறைந்த நீரில் கரையும் தன்மை கொண்ட இரசாயனங்களும் சேர்க்கப்படுகின்றன. இவை அதிகமாக வாசனை திரவியங்கள், பெயிண்ட், நெயில் பாலிஷ் , எரிபொருட்கள், பூச்சி விரட்டிகள் மற்றும் வாகனம் சார்ந்த தயாரிப்புகளில்தான் பயன்படுத்தப்படும்.
சில நேரங்களில் இவற்றின் வாசனையை நுகர்வதால் ஞாபக மறதி, பக்கவாதம், சோர்வு, சீரற்ற மாதவிடாய் சுழற்சி, பசியின்மை போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். இது சானிடரி பேட் பயன்படுத்துவோருக்கு மட்டுமல்ல, அங்கு பணி புரியும் ஊழியர்களையும் பாதிக்கும் என்கிறது.
Also Read : உஷார்.! இந்த அறிகுறிகள் இருந்தால் கவனிங்க.. சிறுநீரக செயலிழப்பா இருக்கலாம்!
இந்த ஆய்வுக்குழு இதுபோன்ற நச்சு நிறைந்த பேடுகளின் அபாயத்தை தடுக்க சில பரிந்துரைகளை முன் வைக்கிறது. அதில்...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cancer, Periods, Sanitary Napkin