Home /News /lifestyle /

அஸ்வகந்தாவை தினமும் உட்கொள்வதால் கிடைக்கும் 9 நன்மைகள் : ஆயுர்வேத மருத்துவர் பரிந்துரை

அஸ்வகந்தாவை தினமும் உட்கொள்வதால் கிடைக்கும் 9 நன்மைகள் : ஆயுர்வேத மருத்துவர் பரிந்துரை

அஸ்வகந்தா

அஸ்வகந்தா

அஸ்வகந்தா மூளையின் ஆற்றலை அதிகரிக்கவும், நரம்பு மண்டலத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. ஒருவரின் நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது.

ஆயுர்வேதத்தில் முக்கிய பொருளாகக் கருதப்படுவது அஸ்வகந்தா. நாட்டு மருந்து கடைகளில் எளிதாகக் கிடைக்கக் கூடிய அஸ்வகந்தாவை தினசரி பயன்பாட்டில் சேர்த்துக்கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும் என ஆயுர்வேத மருத்துவர் தீக்சா பவ்சார் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவை என்னென்ன பார்க்கலாம்.

தீக்சா இஸ்டாவில் “ அஸ்வகந்தா நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதில் சிறந்த பங்களிப்பை தருகிறது. குறிப்பாக கொரோனா நேரத்தில் இதுதான் கை வைத்தியமாக பலருக்கும் நம்பிக்கை தரக்கூடிய மருந்தாக உள்ளது. அதுமட்டுமன்றி நோய் எதிர்ப்பு அழற்சி , தூக்கத்தை தூண்டுதல், மன அழுத்தத்தை போக்குதல் , பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் குணம் என பல வழிகளில் நன்மை அளிக்கிறது.

"அஸ்வகந்தா மூளையின் ஆற்றலை அதிகரிக்கவும், நரம்பு மண்டலத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. ஒருவரின் நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது. அதோடு இது இனப்பெருக்க சமநிலையையும் ஆரோக்கியமான பாலுறவு சமநிலையையும் பராமரிக்க உதவுகிறது.




அஸ்வகந்தாவின் நன்மைகள் :

  1. எடை இழப்பை ஊக்குவிக்கிறது

  2. தூக்கமின்மையை போக்குகிறது

  3. வீக்கத்தை எதிர்த்துப் போராடுகிறது

  4. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

  5. எடை அதிகரிக்க உதவுகிறது

  6. வலியை போக்கிறது

  7. தைராய்டை எதிர்த்துப் போராட உதவுகிறது

  8. மன அழுத்தத்தைக் குறைக்கிறது

  9. நீரிழிவு நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது


“ வேரை பொடியாக்கி கிடைக்கும் அஸ்வகந்தா கொலஸ்ட்ரால், நீரிழிவு, வலி, வீக்கம், இருமல், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல், நுரையீரல் ஆரோக்கியம், தைராய்டு, எடை அதிகரிப்பு (தசை வளர்ச்சி) போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது.

அதன் வேர் மட்டுமன்றி அஸ்வகந்தா இலைகள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஒரே நேரத்தில் எடை அதிகரிப்பதற்கும் எடை குறைப்பதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும் எனபதே இந்த மருத்துவ அதிசயம்” என்கிறார் டாக்டர் பவ்சர்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Ayurvedic medicine, Health Benefits, Health tips

அடுத்த செய்தி