ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு உடல் எடையை குறைக்க உதவும் 9 உணவு வகைகள்..!

தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு உடல் எடையை குறைக்க உதவும் 9 உணவு வகைகள்..!

தைராய்டு பிரச்சனை

தைராய்டு பிரச்சனை

தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே சர்க்கரை மற்றும் அதிக கார்போஹைட்ரேட்டுகள் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்த கூடியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஹைப்போ தைராய்டிசம் என்பது உடல் போதுமான தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்யாத ஒரு நிலையாகும், இது வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது பெரும்பாலும் எடை மேலாண்மைக்கு வழிவகுக்கிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தங்களுக்கு இருக்கும் தைராய்டு பிரச்சனையை சரி செய்வது மிகவும் அவசியம். எடை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தைராய்டு நோயாளிகளுக்கான உணவு குறிப்புகளை தற்போது பார்க்கலாம்.

சர்க்கரை மற்றும் அதிக கார்போஹைட்ரேட்ஸை கட்டுப்படுத்தவும்..

தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே சர்க்கரை மற்றும் அதிக கார்போஹைட்ரேட்டுகள் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்த கூடியது. தைராய்டு லெவலை கட்டுக்குள் வைத்து உடல் எடையை குறைக்க விரும்பினால், சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உட்கொள்ளலில் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்ட உணவுகள் போன்ற இன்சுலின் அளவை அதிகரிக்காத உணவுகளை டயட்டில் சேர்த்து கொள்ளலாம்.

ஃபைபர் சத்து முக்கியம்:

ஃபைபர் சத்து கொண்ட உணவுகள் செரிமானத்தை சீராக்க உதவுகின்றன மற்றும் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகின்றன. கலோரி உட்கொள்ளலைக் கண்காணிக்க ஃபைபர் உதவுகிறது. எடை இழப்புக்கு உதவுகிறது. தைராய்டு பிரச்சனை கொண்டவர்கள் தங்களது தினசரி உணவில் நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை சேர்ப்பது எடை குறைப்பில் நல்ல பலனை தரும்.

செலினியம் (Selenium) நிறைந்த உணவுகள்:

பிரேசில் நட்ஸ், ப்ரக்கோலி.பழுப்பு அரிசி. சியா விதைகள். முட்டை. ஆளி விதைகள், மஷ்ரூம், பருப்பு வகைகள் போன்ற செலினியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் அவை ஏராளமான TSH ஹார்மோன்களை உருவாக்க உதவுகின்றன மற்றும் உணவில் உள்ள செலினியம் ஃப்ரீ ரேடிக்கல்ஸை அகற்றி உடலில் நோயெதிர்ப்பு செயல்பாட்டை வலுப்படுத்துகிறது.

அயோடின் உட்கொள்ளலை அதிகரிக்கவும்:

அத்தியாவசிய கனிமமான அயோடின் உடலில் தைராய்டு செயல்பாட்டை தூண்டுகிறது. எனவே ஹைப்போ தைராய்டிசம் இருப்பவர்கள் மீன், உப்பு, பால் பொருட்கள் மற்றும் முட்டைகள் மூலம் அயோடின் உட்கொள்ளலை அதிகரிப்பது உடலில் TSH உற்பத்தியை அதிகரிக்கும்.

பசையம் இல்லாத உணவுகள்..

பசையம் இல்லாத (gluten-free) உணவுகளை டயட்டில் வழக்கமாக சேர்த்து கொள்வது ஹைப்போ தைராய்டிசத்தை நிர்வகிக்க உதவுவதுடன் எடை இழப்புக்கும் உதவும்.

எடை குறைப்பு Vs கொழுப்பு குறைப்பு... இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன..?

உணவு நேரம்:

தைராய்டு நோயாளிகள் உணவின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம் அல்லது குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடலாம். நிபுணர்களின் கூற்றுப்படி உணவு நேரத்தை நிர்ணயிப்பது பசியின்மை, பதப்படுத்தப்பட்ட உணவு நுகர்வு மற்றும் பசி ஹார்மோன்களை கட்டுப்படுத்த உதவும்.

ஹைட்ரேட்டாக இருக்க வேண்டும்..

எடை இழப்புக்கு ஹைட்ரேட்டாக இருப்பது முக்கியமானது. ஏனென்றால் இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது. பசியை குறைப்பதோடு எடை இழப்பிற்கும் பெரிதும் உதவுகிறது.

வேறு என்ன சாப்பிடலாம்?

நிபுணர்களின் கூற்றுப்படி முட்டை, இறைச்சி, மீன், காய்கறிகள், பசையம் இல்லாத தானியங்களை சரிவிகிதமாக உட்கொள்வது ஆரோக்கிய நடைமுறை ஆகும்.

தவிர்க்க வேண்டிய விஷயங்கள்..

கோய்ட்ரோஜன்ஸ் (Goitrogens) நிறைந்த உணவுகள் தைராய்டு செயல்பாட்டில் குறுக்கீடு மற்றும் எடை இழப்புக்கு இடையூறு விளைவிப்பதால் இவை அவசியம் தவிர்க்கப்பட வேண்டும். மேலும் சோயா, அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் குருசிஃபெரஸ் காய்கறிகள் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Thyroid Symptoms, Weight loss