Home /News /lifestyle /

நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 8 உணவுகள் : தவறாமல் சாப்பிடுங்க...

நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 8 உணவுகள் : தவறாமல் சாப்பிடுங்க...

நுரையீரல்

நுரையீரல்

கோவிட்-19, ஒமைக்ரான் போன்ற கொடூர தொற்று பரவி வரும் சவாலான சூழலில் சுவாச ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தொற்றுகளில் இருந்து தற்காத்து கொள்ள உதவும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  நுரையீரல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து மிக்க பொருட்களை நம் உணவில் அன்றாடம் சேர்த்து கொள்வது அவசியம். நம் சுவாச ஆரோக்கியத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் தீர்மானிப்பதில் நாம் சாப்பிடும் உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கோவிட்-19, ஒமைக்ரான் போன்ற கொடூர தொற்று பரவி வரும் சவாலான சூழலில் சுவாச ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தொற்றுகளில் இருந்து தற்காத்து கொள்ள உதவும். பெருந்தொற்று காலம் இரண்டு வருடங்களாக நீடிக்கும் நிலையில் உங்கள் நுரையீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்ய நீங்கள் சாப்பிட வேண்டிய சில உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

  மஞ்சள் : மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் நிறைந்துள்ளது. இதில் உள்ள கர்குமின் என்ற சேர்மம் அழற்சியில் இருந்து விடுபட, ஆஸ்துமாவால் மார்பில் ஏற்படும் இறுக்கத்தை குறைக்க உதவுகிறது. சுவாசக் குழாய்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் எரிச்சலை மஞ்சள் நீக்குகிறது. சளி ஏற்பட்டு அதை தொடர்ந்து இருமல் வருவது சுவாசக்குழாய் மற்றும் நுரையீரல் சம்பந்தபட்ட பாதிப்பாக வெளிப்படுகிறது. உணவு மற்றும் பாலில் மஞ்சளை கலந்து அன்றாடம் சாப்பிட்டு வந்தால் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

  இஞ்சி : சளி மற்றும் இருமல் நேரத்தில் மஞ்சளுக்கு அடுத்தபடியாக நம் நினைவுக்கு வருவது இஞ்சி. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதை தவிர, நுரையீரலில் இருந்து கழிவுகளை அகற்றி, மென்மையான சுவாசப் பாதையை உறுதி செய்யும். நுரையீரல் வீக்கத்தையும் இஞ்சி குறைக்கும். நுரையீரலில் இருக்கும் மியூகஸ் எனும் திரவத்தைக் குறைக்கும் தன்மை இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் சத்தில் உள்ளது. எனவே டீ, ஜூஸ் போன்றவற்றை பருகும் போது அதில் சிறிதளவு இஞ்சியை சேர்த்து கொள்ளலாம்.

  மிளகு : வைட்டமின் சி மிளகில் அதிகம் இருப்பதால் மிளகு சிறந்த நுரையீரல் செயல்பாடுகளை உறுதிப்படுத்த உதவுகிறது. குறிப்பாக கெய்ன் மிளகில் டீ தயாரித்து குடிப்பதன் மூலம், அதிலுள்ள பீட்டா கரோடின் ஆஸ்துமா அறிகுறிகளை பெருமளவில் குறைக்கிறது.  பூண்டு : பூண்டை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். . இதில் உள்ள அலிசின் (Allicin) சத்து, ஒரு இயற்கை ஆன்டிபயாடிக்காக செயல்படுகிறது. பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுகளிலிருந்து நுரையீரலைக் காக்கும் பணியை பூண்டு சிறப்பாக செய்கிறது.

  ஆப்பிள் : சிவப்பு அல்லது பச்சை ஆப்பிள்கள் இரண்டுமே எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது. ஆப்பிள் பழத்தில் ப்ளேவோனாய்டு, பாலிஃபீனால்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், பொட்டாசியம், பாஸ்பர், கால்சியம் போன்றவை நிறைந்துள்ளது. ஆப்பிள் உடல் பலவீனத்தைக் குறைத்து, உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி அளிக்கும்.

  இதை பின்பற்றினால் மூன்று மாதங்களுக்குள் கோவிட் பரவல் நீங்கி விடும் - புற்றுநோயியல் நிபுணர்கள் கருத்து

  கர்ப்பிணி பெண்கள் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், விரைவில் உடலுக்கு ஆற்றல் கிடைத்து, சோர்வின்றி புத்துணர்ச்சியுடன் இருப்பர். உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் அன்றாடம் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும். மேலும் ஆப்பிளில் கரையாத நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமானத்திற்கு உதவுகின்றன. இதனால் கர்ப்பிணி பெண்கள் மலச்சிக்கல் பிரச்சனைகளில் இருந்து விடுபட துணை புரிகிறது.  சிட்ரஸ் பழங்கள் : ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் சிறந்த மூலம். எனவே இது சுவாச ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.

  வால்நட்ஸ் : வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்புகளில் ஒமோகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இது நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன மேலும் இந்த ஒமோகா 3 ஆசிட்டில் அழற்சியை எதிர்க்கும் புரதங்கள் உள்ளன.

  நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் அதிகரிக்க உதவும் 4 மூலிகைகள்

  பெர்ரீஸ்: பெர்ரிகளில் வைட்டமின் சி போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, இவை நுரையீரலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை சேதப்படுத்தும் உயிரணுவை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இதில் ப்ளுபெர்ரி நுரையீரலை ஆரோக்கியமாக செயல்பட வைக்க கூடிய தன்மை கொண்டது.

   

   
  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Healthy Food, Lungs health

  அடுத்த செய்தி