Home /News /lifestyle /

கொலஸ்ட்ரால் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் செய்ய வேண்டியவை!

கொலஸ்ட்ரால் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் செய்ய வேண்டியவை!

காட்சி படம்

காட்சி படம்

ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு என்று வரும் போது, அனைத்து வகையான உணவுகளையும் சாப்பிட வேண்டு.

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளில் ஒன்று கொழுப்பு வகையைச் சேர்ந்த கொலஸ்ட்ரால். உடலின் செல் மெம்பிரேன், செல்களின் ஊட்டம், சருமப் பளபளப்பு, வைட்டமின் டி உற்பத்தி, வளர்சிதை மாற்றம் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கு கொலஸ்ட்ரால் அவசியம். ஆனால், எல்லா கொலஸ்ட்ரால் வகைகளும் உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல. அதிகப்படியான கொலஸ்ட்ரால் தீவிரமான இதய பாதிப்பு மற்றும் இதய நோய்களை உண்டாக்கும். எளிமையான முறையில் கொலஸ்ட்ரால் அளவை எவ்வாறு குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது என்று பார்க்கலாம்.

கொழுப்பு நிறைந்த இறைச்சி உண்பதை குறைக்கவும் :

சாச்சுரேட்டட் கொழுப்பு அதிக அளவு உண்பதால் உங்கள் உடலில் உள்ள LDL கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். இது, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இந்த கொலஸ்டிரால் வகை இறைச்சி, முழு கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள், முட்டை, மற்றும் சில எண்ணெய் வகைகளில் உள்ளன. மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கோழி மற்றும் சிவப்பு இறைச்சிகள், வெண்ணெய், கிரீம் சீஸ், கிரீம், உள்ளிட்ட உணவுகளை குறைவான அளவில் சாப்பிட வேண்டும்.

நார்ச்சத்து உடலுக்கு நல்லது :

மேயோ கிளினக் ஆய்வின் படி, கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த உணவுகள் ரத்தத்தில் கொலஸ்டிரால் கலப்பதை தடுக்கிறது. குறைவான அளவு நார்ச்சத்து உண்டாலும், LDL கொலஸ்டிரால் அளவைக் கட்டுபடுத்த உதவும். பார்லி, பீன்ஸ், பயிறு வகைகள், பழங்கள், மற்றும் முழு தானிய வகைகளில் நார்ச்சத்து நிறைந்து இருக்கும்.

ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி உணவுகள் :

ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு என்று வரும் போது, அனைத்து வகையான உணவுகளையும் சாப்பிட வேண்டும். ஆனால், கொலஸ்டிரால் குறைப்பதற்கு அல்லது கொலஸ்டிரால் அளவு அதிகரிக்காமல் தடுப்பதற்கு காய்கறிகள் அதிகமாக சேர்த்து உணவுகள் சிறந்தவை என்று ஹார்வார்ட் ஹெல்த் அறிக்கை தெரிவித்துள்ளது.



கட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாவுச்சத்து உணவுகள் :

உடலுக்கு ஆற்றல் தரும் உணவு வகை மாவுச்சத்து எனப்படும் கார்ப்ஸ் நிறைந்த உணவுகள். ஆனால், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் எவ்வளவு ஆபத்தோ, அதே அளவு ஆபத்து அதிகமாக மாவுச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதிலும் உள்ளது. எனவே, உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எடை குறைக்க, மாவுச்சத்து உணவுகளை அதிகம் உட்கொள்ளக்கூடாது.

ஆரோக்கியத்தை மேம்படுத்த எடை குறைக்கவும் :

உடல் பருமன் பல்வேறு நோய்கள் ஏற்படும் ஆபத்தைக் கொண்டுள்ளது. உடல் பருமன் மற்றும் அதிக எடை இதயத்தை நேரடியாக தாக்கும் நோய்களை உண்டாக்கலாம். எனவே, எடையைக் குறைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தினால் இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உடலில் இரும்புச்சத்து பற்றாக்குறையை தடுக்கும் உணவுகளின் லிஸ்ட்!

இவை மட்டுமின்றி, உடலுக்கு உழைப்பு கொடுப்பதும் இன்றியமையாதது. நடைபயிற்சி, சைக்கிள் ஊட்டுவது, ஜாகிங், HIIT எனப்படும் உயர் தாக்க கார்டியோ பயிற்சிகள், உள்ளிட்ட பயிற்சிகள் உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, உடலில் உள்ள HDL கொலஸ்டிரால் அளவை அதிகப்படுத்துகிறது. தொடர்ச்சியாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தால், கெட்ட கொலஸ்டிரால் அளவு குறைந்து, இதய ஆரோக்கியம் மேம்படும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Cholesterol, Heart health

அடுத்த செய்தி